எனக்கு குழந்தை பிறந்துடுச்சு.. ஆனால்! 4 நாளுக்கு பிறகு போஸ்ட் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த ரித்திகா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக போஸ்ட் போட்டு இருக்கிறார். ஆனால் குழந்தை கடந்த செப்டம்பர் பத்தாம் தேதியே பிறந்த நிலையில் நேற்று தான் போஸ்ட் போட்டு இருக்கிறார்.
எத்தனையோ சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல ரசிகர்களின் மனதில் எளிமையாக ஒட்டி விடுகிறார்கள். அதில் ஒருவர் தான் ரித்திகா. இவர் சீரியல் நடிகையாக இருந்தாலும் எப்போதுமே ஹோம்லியான லுக்கோடு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றிய ரித்திகா ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் சஞ்சீவ்வின் தங்கையாக வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்திருந்தார். பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் போது அதிகமான ரசிகர்கள் இந்த கேரக்டர் உங்களுக்கு செட்டாகாது என்று கூறி வந்தனர். காரணம் இந்த சீரியலில் எப்போதுமே அழுது கொண்டிருப்பது போலத்தான் கதை இருந்தது.
இந்த நிலையில் தான் இந்த சீரியலில் ரித்திகா நடித்துக் கொண்டிருக்கும் போது 2022 ஆம் ஆண்டு விஜய் டிவி பிரபலமான வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது kpy பாலா அவர் பின்னாடி சுற்றி காதலிப்பது போன்று பேசிக்கொண்டே இருப்பார். இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று கூட பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் இது குறித்து ரித்திகா மற்றும் பாலா இருவரும் விளக்கம் கொடுத்திருந்தனர். அதில் நாங்கள் நிகழ்ச்சிக்கு கண்டெண்டுக்காக தான் இப்படி பேசிக் கொண்டே இருக்கிறோம். எங்களுக்குள் எதுவும் கிடையாது என்று கூறியிருந்தனர். திருமணத்திற்கு பிறகு இவர் சீரியலில் நடிப்பாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்த நிலையில் சில வாரங்களிலேயே மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அதற்கு பிறகு சில மாதங்கள் அந்த சீரியலில் எப்போதும் போல நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இவர் சீரியலில் இருந்து வெளியே விலகிவிட்டார். இது சின்னத்திரை ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரித்திகா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக குக்காக கலந்து கொண்டு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஆனால் இவர் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு எதற்காக போனார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை ரித்திகா அறிவித்திருந்தார்.

ஆனாலும் கர்ப்பமான நேரத்திலும் தன்னுடைய கணவரோடு டிரடிஷனலாக புடவை அணிந்து கர்ப்பகால போட்டோ சூட் புகைப்படங்களை சில நாட்களுக்கு முன்பு ரித்திகா வெளியிட்டது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றது. பொதுவாக தற்போதையுள்ள சூழ்நிலைகளில் அதிகமான மாடல் மற்றும் நடிகைகள் கர்ப்ப கால போட்டோ சூட் நடத்துகிறார்கள்.
அதில் வயிறு முழுக்க காட்டி வித விதமான ஆடை அலங்காரத்தோடு புகைப்படங்கள் எடுக்கிறார்கள். ஆனால் இவர் புடவையில் வயிறு வெளியே தெரியாத வகையில் தன்னுடைய கணவரோடு க்யூட்டாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமான வரவேற்பு பெற்றது.
அதுபோல கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் “சட்டம் என் கையில்” என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் ரித்திகா நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்திற்கான ப்ரொமோஷனில் சமீபத்தில் கலந்து கொண்ட போது எனக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகிறது என்னுடைய கணவர் எனக்கு பக்க பலமாக இருப்பதால்தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடிகிறது.
என்னுடைய கணவர் வீட்டிலும் சரி என்னுடைய அம்மா வீட்டிலும் சரி நான் நடிக்க கூடாது என்று யாரும் சொல்லவில்லை. என்னுடைய உடல்நிலை பிரச்சனையால் தான் நான் சீரியலில் தொடர்ந்து நடிக்கவில்லை. இனி குழந்தை பிறந்து குழந்தை ஓரளவுக்கு வளர்ந்ததும் நான் மீண்டும் நடிக்க தொடங்குவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரித்திகாவிற்கு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
ஆனால் அது குறித்து எந்த பதிவுகளும் வெளியிடாமல் இருந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு செப்டம்பர் 10ஆம் தேதி மகள் பிறந்திருக்கிறார் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். குழந்தையின் பாதங்கள் தங்களுடைய கைக்குள் இருப்பது போல வெளியிட்ட புகைப்படங்கள் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications