மகா சங்கமம் முடிந்தது.. ஆனால் பாக்கியாவுக்கு வந்த சிக்கல்.. இனி ஜெனி, ராதிகாவால் வர போகும் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலின் மஹா சங்கமம் இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்றைய எபிசோடு உடன் மகா சங்கமும் முடிவடைந்தது. இந்த நிலையில் இனி பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் தனித்தனியாக ஒளிபரப்பாக இருக்கிறது.
அதே நேரத்தில் இத்தனை நாட்களாக கோமதியின் குடும்ப பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருந்த பாக்கியாவிற்கு அடுத்து கோபியால் வீட்டில் பூகம்பம் வெடிக்க இருக்கிறது. அதுபோல ஜெனி மற்றும் செழியனின் விவாகரத்து பிரச்சனையும் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் புதியதாக தொடங்கிய பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலின் டிஆர்பிஐ கூட்டுவதற்காக பாக்கியலட்சுமி சீரியலோடு மகா சங்கமத்தை ஏற்படுத்தி இருந்தனர். அதிலும் கதிர் மற்றும் ராஜியின் திருமணத்தை நடத்துவதற்காகவே மகா சங்கமத்தை நடத்தி அதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். இப்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் இனி அடுத்தடுத்து பூகம்பங்கள் வெடிக்க காத்திருக்கிறது.
அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் இந்த சீரியலுக்கான மகா சங்கமும் முடிவடைந்து இருக்கிறது. இதனால் பாக்கியா வீட்டில் இனி பெரிய பிரச்சனையும் காத்திருக்கிறது. ஏற்கனவே ஜெனி இடம் குழந்தையை ஒப்படைத்து விட்டதால் ஈஸ்வரி கடும் கோபத்தில் இருக்கிறார். பாக்கியா வீட்டிற்கு வரட்டும் இருக்கிறது என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இனி பாக்யா வீட்டிற்கு போகும்போது ஈஸ்வரி என்ன பாடுபடுத்தப் போகிறாரோ என்ற கேள்விகளும் இருக்கிறது. அதுபோல செழியன் மற்றும் ஜெனியின் விவாகரத்து பிரச்சனைகளும் போய்க்கொண்டிருக்கிறது. ஜெனி செழியன் மீது கோபமாக இருந்தாலும் செழியனுக்காகவும் அவருடைய குடும்பத்திற்காக ஜெனியின் தந்தையிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஜெனியின் தந்தை ஜோசப் ஜெனிக்கும் செழியனுக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதனால் இனி அதை நோக்கி கதை பயணிக்க இருக்கிறது. அதே நேரத்தில் கோபி கம்பெனியை மூடிவிட்டது இன்னும் ராதிகாவுக்கு தெரியாது. அது தெரிய வரும் போது இனி ராதிகா என்ன முடிவெடுப்பார் என்ற கேள்விகளும் இருக்கிறது.
அதே நேரத்தில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டு இருந்தார். அதில் பாக்யா வீட்டில் இருந்து கோபமாக ராதிகா வெளியே வருவது போன்று காட்சிகள் இருந்தது. இதனால் ராதிகாவுக்கு கோபி பிசினஸில் தோல்வி அடைந்த விஷயம் தெரிய வந்ததும் அதற்கு ஈஸ்வரி ராதிகா தான் தப்பு என்று ராதிகாவின் மேல எல்லா பழியும் தூக்கி போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு கோபமாக ராதிகா வெளியே போவார் என்று தெரிகிறது.
அதுபோல அமிர்தாவை எழிலிடமிருந்து பிரிப்பதற்காக கணேஷ் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இனி கணேசன் பிரச்சனைக்கு என்ன தீர்வு வரப்போகிறது என்பதும் இனிவரும் எபிசோட்டில் தான் தெரிய வரும். இதனால் இந்த மாதிரி பிரச்சனைகளை பாக்கியா எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications