கணேஷால் அமிர்தா எடுத்த முடிவு? பாக்கியா இது உங்களுக்கு தேவை தான்! இனி “இவங்க” தான் காப்பாற்றுவதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கணேஷ் சொன்ன பொய்யை நம்பி போன அமிர்தா மற்றும் குழந்தையை கணேஷ் கடத்திவிட்டு போனதால் பெரிய பிரச்சனை வந்திருக்கிறது.

கணேஷ் பண்ண வேலையைப் பற்றி பாக்கியா வீட்டில் வந்து சொல்ல இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபி ஈஸ்வரி என எல்லோரும் பாக்கியாவை திட்டுகின்றனர் என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial February 19th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கணேஷ் அமிர்தாவையும் நிலாவையும் கடத்திக் கொண்டு செல்ல பாக்யா அவரைத் தொடர்ந்து ஆட்டோவில் செல்கிறார். அப்போது அமிர்த என விட்டுது என்று கெஞ்ச அதற்கு கணேசன்
இனிமே நீ என் கூட தான் இருக்கணும் என்று பேசிக்கொண்டே இருக்கிறார். அது காரைத் தொடர்ந்து ஆட்டோவில் வந்த பாக்கியா ஒரு கட்டத்தில் காரை மிஸ் பண்ணி விடுகிறார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எழிலுக்கு போன் போட்டு கணேஷ் நம்மளை நம்ப வைத்து ஏமாத்திட்டான் என்று நடந்த விஷயத்தை எல்லாம் சொல்ல அதனால் அதிர்ச்சி அடைந்த எழில் நீ அங்கே இருமா நான் வந்துடறேன் என்று கிளம்பி போகிறார். அடுத்ததாக எழில் வந்ததும் பாக்யாவும் எழிலும் கணேஷ் வீட்டுக்கு சென்று அவர்களுடைய அம்மாவும் அப்பாவிடம் ஏதாவது தகவல் தெரிந்ததா என்று கேட்க அவர்கள் எதுவும் தெரியல ஆனா இப்படி பண்ணுவானு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று சொல்கின்றனர்.

Baakiyalakshmi Serial February 19th episode full update

பிறகு கணேஷ் பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சா எங்ககிட்ட சொல்லுங்க என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பி பாக்கியா வீட்டிற்கு வருகிறார். வீட்டில் எல்லோரும் எழில் எங்க அமிர்தா எங்கே என்று கேட்க அவர்களிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்ல குடும்பமே பாக்யாவை ரவுண்டு கட்டிக் திட்டிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது பாக்கியாவை பார்த்து ஈஸ்வரி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கும்போதே நாங்கள் வேண்டாம் என்று தடுத்தோம்.

அப்பவும் நீ கேட்கல இப்பவும் கேட்கல என்று கோபப்பட்டு திட்டுகிறார். அதற்கு பாக்கியா நான் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கல என்று அழ, அதற்கு செழியனோட வாழ்க்கை உன்னால அந்தரத்தில் தொங்குது இப்போ எழில் வாழ்க்கையிலும் பிரச்சனை வந்துடுச்சு என்று கோபப்படுகிறார். அதோடு இனிமே நீ எதற்காகவும் இந்த வீட்டில வாய் திறக்க கூடாது என்று சொல்லிக்கொண்டு இந்த குடும்பத்தின் நிம்மதியை அழிக்க வந்தவள் நீதான் என்று திட்டுகிறார்.

Baakiyalakshmi Serial February 19th episode full update

அதோடு செழியனிடம் எழிலுக்கு போன் போட்டு வர சொல்லு அந்த அமிர்தா எங்க வேணா போகட்டும் அதை பத்தி நமக்கு கவலை கிடையாது என்று சொல்ல செழியன் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் அமிர்தா தயவுசெய்து எங்கள விட்டுடு என்று கணேசிடம் கெஞ்சி கொண்டிருக்க அதற்கு கணேஷ் அப்படியெல்லாம் விட முடியாது அப்படியெல்லாம் விடுவதற்காகவா உங்களை இங்கே கூட்டிட்டு வந்து இருக்கேன்?

இனிமே நீ நான் நிலா பாப்பா மட்டும்தான் வாழ போறோம். இதுதான் நம்முடைய வாழ்க்கை மத்ததை எல்லாம் மறந்து விடு என்று சொல்கிறார். அதோடு நான் எல்லாத்தையும் கடந்து வந்து புதிய வாழ்க்கைக்குள் போய் சந்தோசமாக இருக்கிறேன் என்னை விட்டுடு என்று அமிர்தா கெஞ்ச கணேஷ் இப்படி கெஞ்சுவதை இதோடு விட்டுரு.. நாம கண் காணாத இடத்துக்கு போய் சந்தோஷமா வாழ போறோம்... என்கிட்ட ஒரு பிளான் இருக்கு என்று சொல்லி கணேஷ் அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+