பாக்கியலட்சுமி: ஈஸ்வரி எடுத்த விபரீத முடிவு.. நறுக்குன்னு பாக்யா கேட்ட கேள்வி.. அதிர்ச்சி கொடுத்த எழில்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி மற்றும் பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக ஈஸ்வரி முடிவு செய்கிறார். அதே நேரத்தில் இந்த முடிவுக்கு பாக்கியா மற்றும் கோபி இருவரும் என்ன பதில் சொன்னார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த பக்கமாக கோபி வருகிறார். அவர் ஏம்மா இப்படி இருக்கீங்க என்று கேட்க, அதற்கு எனக்கு பையன், பேர பசங்க பேர குழந்தைகளை சந்தோஷமா பார்க்க கொடுத்து வைக்கல, எல்லார் வீட்டிலும் நார்மலா நடக்குற விஷயம் கூட எனக்கு நடக்க மாட்டேங்குது என்று ஃபீல் பண்ணி பேசுகிறார்.

அதற்கு ஈஸ்வரி நீ வீட்டை விட்டு போக தான் போறியா என்று கேட்க, அதற்கு கோபி ஆமாம் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி கடைசி காலத்துல உன்னை பாத்துக்க ஒரு ஆள் கண்டிப்பா தேவை. இப்போதைக்கு நான் உன்னை பார்த்துக்கிறேன் அப்புறம் உன்னை யார் பார்த்துப்பாங்க? நீயும் பாக்கியாவும் சேர்ந்து வாழணும் என்று சொன்னதும் கோபி அதிர்ச்சி அடைகிறார்.
அது எப்படிமா முடியும்? பாக்கியா என் மேல எவ்வளவு கோபமா இருக்கான்னு உங்களுக்கே தெரியுமே என்று சொல்ல, நீ தான் பழைய மாதிரி இல்லையே. நீ திருந்திட்டனு எல்லாருக்கும் தெரியும். உன் மனசுல இருக்குற குற்ற உணர்ச்சி எனக்கு புரியுது அது சரியாகணும்னா நீ பாக்யா கூட சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் தான் சரியாகும் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

ஆனால் அதற்கு பாக்யா சம்மதிக்க மாட்டார் என்று சொல்ல, பாக்யா சம்மதிச்சா உனக்கு ஓகேவா என்று கேட்க கோபி எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அப்போ விடு உனக்கு சம்மதம் என்று எனக்கு தெரிகிறது. இனி பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் பாக்கியாவும் செல்வியும் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அங்கு வந்து ஈஸ்வரி அமர்ந்து இருக்கிறார். அப்போது பாக்கியா தன் மீது கோபமாக இருப்பதால் சமாளிப்பதற்காக இன்னைக்கு சாப்பாடு நல்லா இருந்தது பாக்கியா என்று சொல்கிறார். அதற்கு பாக்யா உங்களுக்கு ஏதாவது செஞ்சு தரவா என்று கேட்க, வேண்டாம் ஆனால் நீ கோவமா இருக்கியா என்று ஈஸ்வரி கேட்க உங்க மேல கோபம் இல்ல வருத்தம் தான் இருக்கு என்று பாக்கியா சொல்கிறார்.
பிறகு சொந்தக்காரர் ஒருவருடைய கதையை ஈஸ்வரி சொல்கிறார். சொந்தக்காரங்க ஒருத்தங்களோட கணவர் இறந்து போய்விட்டதாகவும் அவர் ரொம்ப கஷ்டப்படுவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு ஆம்பள துணை கண்டிப்பா பெண்ணுக்கு வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு ஈஸ்வரியின் பிளானை பாக்யா புரிந்து கொள்கிறார்.
புது சீரியலில் கதாநாயகியான பாக்கியலட்சுமி நடிகை.. அவரே வெளியிட்ட திடீர் பதிவு.. குவியும் வாழ்த்து
உடனே ஆம்பள துணை இல்லாம கண்டிப்பா ஒரு பெண்ணால் வாழ முடியும் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி இப்ப நான் உங்க மாமா போனதுக்கு அப்புறம் எவ்வளவு கஷ்டப்படுறேன் பார்த்தியா என்று கேட்க, அதற்கு பாக்யா மாமா மாதிரி ஒரு நல்ல மனுஷன் கூட வாழ்ந்துட்டு பிரிஞ்சா கஷ்டமா தான் இருக்கும். ஆனா உங்க பையன் கூட இருந்து பிரிஞ்சதால நான் சந்தோஷமா தான் இருக்கேன் என்று சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு பாக்யா கிட்ட இப்படி பேசினால் சரிப்பட்டு வராது இதற்கு வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என்று முடிவு எடுக்கிறார். மறுநாள் ஈஸ்வரி செழியன் உடன் கோவிலில் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு எழில் வருகிறார். செழியன் என்னடா நீயும் வந்திருக்க என்று கேட்க, இல்லை நான் தான் வர சொன்னேன் என்று ஈஸ்வரி சொல்கிறார்.
என்ன விஷயம் பாட்டி ஏதாவது பிரச்சனையா என்று கேட்க பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல நான் ஒரு முடிவு பண்ணி இருக்கிறேன் என்று பாக்யாவிற்கும் கோபிக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்கும் விஷயம் குறித்து பேச அதற்கு செழியன் அவங்க ரெண்டு பேரும் விருப்பப்பட்டா சேர்ந்து வாழுறதில் எனக்கு விருப்பம் தான் என்று சொல்லியதால் எனக்கு விருப்பம் கிடையாது.
சாப்பாட்டை தடுக்க முயற்சி! வெளியே அனுப்பிடாதீங்க.. மகாநதி சீரியல் நடிகை வெளியிட்ட திடீர் பதிவு
எங்க அம்மாவுக்கு நாங்க இருக்கோம். எங்களுடைய உதவியை அம்மா வேண்டாம் என்று சொன்னா கூட அவங்களுக்கு ஒரு வாழ்க்கை துணை வேணும்னு நினைச்சாங்கன்னா அவங்களுக்கு வேற ஒருவரை நானே முன் நின்று கல்யாணம் செய்து வைப்பேனே தவிர நான் இவர் கூட சேர்ந்து வாழணும்னு சொல்ல மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி அது உங்க அம்மா ஆகவே விருப்பப்பட்டு சொன்னா நீ சம்மதம் தெரிவிப்பியா என்று கேட்கிறார். அதற்கு எழில் அம்மா ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications