பாக்கியலட்சுமி: பாக்யா குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த ராதிகா.. விபரீத முடிவு எடுத்த கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி ஆறாம் தேதிக்கான எபிசோடில் விவாகரத்து செய்வதற்காக ராதிகா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதை பார்த்து மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதே நேரத்தில் ராதிகா மயூவிடம் தான் எடுத்த முக்கிய முடிவு பற்றியும் பேசி இருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ராதிகாவை தேடி அவருடைய வீட்டிற்கு போய் இருக்கிறார். அங்கு ராதிகாவின் அம்மா ராதிகா எங்கே போனார் என்று தெரியவில்லை, வீட்டில் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை நம்பாமல் கோபி எல்லா ரூமிற்கும் சென்று தேடுகிறார். பிறகு ராதிகா அங்கு இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது ராதிகாவின் அம்மா என் பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆகணும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல. ஆனால் ராதிகா என்ன விட்டுட்டு போயிட்டா என்னுடைய கதி என்ன ஆகிறது? என்று அழுது கொண்டிருக்க கோபி அங்கிருந்து வெளியே வருகிறார். மறுபக்கத்தில் ராதிகா மயூவை பீச்சுக்கு கூட்டிட்டு போய் இருக்கிறார். அங்கு வைத்து எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க என்று கேட்க, உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்கிறார்.

பிறகு கோபியை எனக்கு நல்ல பிரண்டா தெரியும். எதார்த்தமா சந்தித்தபோது அவருடைய ஃபேமிலி சரியில்லைன்னு சொன்னாரு. நானும் உன்னுடைய நல்லதுக்காக யோசிச்சு தான் அவரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன். இந்த முடிவு எடுத்த பிறகுதான் அவர் என்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் பாக்கியாவோட கணவர்ன்னு தெரிஞ்சது.

baakiyalakshmi serial vijay tv

இனிமே உன் லைஃப்ல அப்பான்னு ஒருத்தர் இல்ல. அவரை உன் லைஃப்ல கொண்டு வந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரிஞ்சது என்று மயூவிடம் ராதிகா மன்னிப்பு கேட்க, அதற்கு மயூ எதுக்கு மம்மி என்கிட்ட மன்னிப்பு கேட்குறீங்க? எனக்கு அதுதான் கஷ்டமா இருக்கு என்று சொன்னதும், நீ ரொம்ப மெச்சூர்டான பொண்ணு. எல்லாத்தையும் புரிஞ்சுக்கற.. இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் அப்பா அம்மா கிட்ட எவ்வளவு சண்டை போடுகிறார்கள்.

நீ அது மாதிரி எதுவுமே பண்ணல என்று கட்டிப்பிடித்து பாராட்டுகிறார். அதோடு இனிமே நான் வாழ்கிற ஒவ்வொரு நிமிஷமும் உனக்காகத்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் செல்வியும் பாக்கியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி மீண்டும் ராதிகாவோடு சேர்ந்து வாழ்வாரா? அல்லது வீட்டிற்கு வந்து விடுவாரா? என்று செல்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அந்த நேரத்தில் கோபிக்கு ஒரு லெட்டர் வருகிறது. அதை பாக்யா வாங்கி வைக்க கொஞ்சம் நேரத்தில் கோபி வருகிறார் அவரிடம் பாக்கியா அதை கொடுக்கிறார். பிறகு கோபி சோகமாக சோபாவில் உட்கார ஈஸ்வரி என்ன ஆச்சுடா ஏன் இப்படி இருக்க என்று கேட்க, ராதிகாவும் மயூவும் வீட்டில் இல்லமா.. அவங்க எங்கேயோ போயிட்டாங்க என்று சொல்கிறார்.

ஃபோன் பண்ணினாலும் சுவிட்ச் ஆப்னு வருது என்று சொல்ல ஈஸ்வரி வழக்கம்போல ராதிகாவை திட்டி கொண்டிருக்கிறார். அப்போது இனியா என்ன டாடி லெட்டர் என்று கேட்கிறார். பிறகு அதைப் பிரித்துப் பார்த்து ஒன்றும் பேசாமல் அதிர்ச்சியாகி கோபி நிற்கிறார். எல்லோரும் என்னவென்று கேட்க, அதற்கு கோபி ராதிகா டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க என்று சொல்ல, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

baakiyalakshmi serial vijay tv

பிறகு கோபி தட்டு தடுமாறி ராதிகா என்னை விட்டு போகவே முடிவு எடுத்துட்டாளா என்று கலங்கி நிற்கிறார். அடுத்ததாக ராதிகா எடுத்த முடிவு பற்றி பாக்யா ஜெனி மற்றும் செல்வியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+