பாக்கியலட்சுமி: சுதாகர் கேட்ட கேள்வி, இனியா கொடுத்த சரியான பதிலடி! உண்மை உடைந்தது! பரபரப்பான சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 13ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவை மீண்டும் சுதாகர் வீட்டிற்கு கோபியும் பாக்கியாவும் கூட்டி கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது சுதாகர் கேட்ட கேள்விக்கு இனியா பதிலடி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா பாக்யாவிடம் காபி கேட்டுக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி கோபமாக, நீ முதல்ல உட்காரு நான் உன்கிட்ட பேசணும். நீ நேற்று வந்ததிலிருந்து உங்க வீட்டில சொல்லிட்டு வந்தியா என்று கேட்டுட்டே இருக்கிறேன் என்று ஈஸ்வரி சொல்ல, அதற்கு இனியா நான் சொல்லிட்டு தானே வந்தேன் என்று சொல்ல, பொய் சொல்லாத நேத்து நீ வீட்டுக்கு வரலைன்னு சுதாகர் ரொம்ப பயந்து போன் பண்ணுனாரு.

இனியா சொன்ன வார்த்தை
நீ இன்னும் விளையாட்டு தனமா இருக்கியா இன்று திட்டிக் கொண்டிருக்க, நான் பொய் ஒன்னும் சொல்லல, நிதிஷ்க்கு போன் பண்ணுனேன் அவர் எடுக்கல மீதி பேருக்கு கால் பண்ணுனா போகல அதனாலதான் நான் நம்ம வீட்டுக்கு தானே வந்தேன் என்று சொல்ல, பாக்கியா உன்கிட்ட பேசணும் என்று இனியை தனியாக கூட்டிக்கொண்டு போகிறார். உடனே இனியா வீட்ல எதுவும் பிரச்சனையான்னு என்கிட்ட கேட்காத அம்மா, இங்க வரணும்னு தோணுச்சு அவங்க போன் எடுக்கல அதனாலதான் நான் இங்க வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கோபத்தில் ஈஸ்வரி
அப்போது ஈஸ்வரி நீங்க ரெண்டு பேரும் போய் மன்னிப்பு கேட்டு விட்டு வாங்க என்று கோபியிடம் சொல்கிறார். பிறகு இருங்க நானும் வரேன் என்று மூன்று பேரும் கிளம்பி இனியாவை கூட்டிக்கொண்டு சுதாகர் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது இவர்களை பார்த்ததும் சுதாகர் வரவேற்று உட்கார வைத்து ஈஸ்வரியிடம் பவ்யமாக பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் சுதாகரிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.
மன்னிப்பு கேட்ட பாக்யா
அதற்கு சுதாகர் இனியா எங்க வேணா போகட்டும் ஆனா சொல்லிட்டு போயிருக்கலாமுன்னு தான் கேட்டேன் வேற ஒன்னும் இல்ல என்று சொல்ல நிதிஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இனியாவையே முறைத்து பார்த்துக்கொண்டு இருக்க இனியா நான் நிதிஷுக்கு போன் பண்ணுனேன் என்று சொல்லாமல் இருக்கிறார். பிறகு கோபி ஈஸ்வரி பாக்யா மூன்று பேரும் கிளம்பும் நேரத்தில் சுதாகர் மனைவி சந்திரிகா பாக்கியாவையும் கோபியையும் நிற்க வைத்து நீங்க ரெண்டு பேரும் டைவர்ஸ் வாங்கிட்டீங்க ஆனா எப்பவும் ஒன்னா தான் வர்றீங்க வீட்டு ஒரே வீட்டில் தான் இருக்கிறீங்க என்று கேட்கிறார்.

ஏமாற்றும் நிதிஷ்
அதற்கு பாக்கியா டைவர்ஸ் வாங்கிட்டா குழந்தைகளையே பார்க்கக்கூடாது அம்மாவை பார்க்க கூடாதுன்னு இல்லையே? நானும் குழந்தைகளையும் அம்மாவையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவுதான் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு பாக்கியா குடும்பம் கிளம்பியதும் இனியாவிடம் சுதாகர் உங்க அம்மா வீட்டுக்கு போறது எங்களுக்கு பிரச்சனை இல்ல ஆனா போன் பண்ணி சொல்லிட்டு போயிருக்கலாம் என்று சொல்ல, அதற்கு இனியா நான் வேலைக்கு போயிட்டு நேரா வீட்டுக்கு தான் வந்து கதவை தட்டி பார்த்தேன். யாரும் கதவை திறக்கல, இவருடைய கார் இங்கதான் இருந்தது. நான் போன் அடிச்சு பார்த்தேன் ஃபுல் ரிங்கும் போச்சு ஃபோனையும் எடுக்கல என்று சொல்ல சுதாகர் நிதிஷிடம் உண்மையா என்று கேட்கிறார்.
இனியா பதிலடி
அதற்கு நிதிஷ் எனக்கு போன் வரல என்று கத்தி பேசி கோபத்தை காட்டுகிறார். அதற்கு சந்திரிகா உங்க வீட்ல இருந்து வந்து மன்னிப்பு கேட்டுட்டு போறாங்க நீ இவ்வளவு திமிரா பேசுற என்று கேட்க, எங்க வீட்ல இருந்து வந்தவர்களுக்கு இங்கே என்ன நடந்துச்சுன்னு தெரியாது அதனாலதான் மன்னிப்பு கேட்டுட்டு போறாங்க இல்லன்னா நான் பேசுற மாதிரி தான் அவங்களும் பேசி இருப்பாங்க என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
ஈஸ்வரி கேள்வி
மறுபக்கத்தில் ஈஸ்வரி சோகமாக இருக்கும்போது கோபி என்னாச்சுமான்னு கேட்க, நான் உங்ககிட்ட திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்கிற விஷயம்தான் உங்களுடைய முடிவு சொல்லுங்க? நீங்க ரெண்டு பேரும் மீண்டும் சேர்ந்து வாழனும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications