பாக்கியலட்சுமி: செல்வியிடம் மாட்டிய ஆகாஷ்- இனியா.. பாக்யா சொன்ன வார்த்தை! கோபி கொடுத்த லெட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 27ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் பேசுவதை பார்த்து செல்விக்கு சந்தேகம் வருகிறது. அதே நேரத்தில் கோபி பாக்யாவிற்கு ஒரு லெட்டர் கொடுக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பங்க்ஷனில் இருந்து ஈஸ்வரி கோபமாக வீட்டிற்கு கிளம்பி போனதால் இனியா ஈஸ்வரிக்கு போன் போட்டு வீட்டுக்கு போய்ட்டீங்களா பாட்டி என்று கேட்க, என்ன உங்க அம்மா கேட்க சொன்னாளா? என்று ஈஸ்வரி கோபப்படுகிறார். உடனே கோபி இனியா கிட்ட எதுக்குமா கோவிக்கிறீங்க என்று போனை வாங்கி இனியாவிடம் இங்க ஒன்னும் பிரச்சனை இல்ல நானும் பாட்டியும் பத்திரமா வீட்டுக்கு வந்துட்டோம் என்று சொல்லி போனை வைக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபியின் புரிதல்

அதைத் தொடர்ந்து ஈஸ்வரி கோபியிடம் பாக்கியா முன்ன மாதிரி இல்ல. ரொம்ப மாறிட்டா. எதிர்த்து பேசுறா, ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணி கையில காசு பார்த்ததும் மதிக்க மாட்டேங்குறா.. அவளுக்கு திமிரு வந்துடுச்சு என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி பாக்கியாவுக்கு நான் வேணா என்பதில் உறுதியா இருக்கா.. அவகிட்ட நீங்க இந்த மாதிரி ஒரு விஷயம் சொல்லப் போறேன்னு சொல்லி பர்மிஷன் கேட்டீங்களா? என்று கேட்கிறார்.

எல்லோரும் கிப்ட் கொடுக்கிறாங்கனு நானும் கொடுத்தேன் அவ்வளவுதான். ஆனால் அவள் இப்படி சொல்லுவானு நான் நினைக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி யாரையும் கட்டாயப்படுத்தி வாழவைக்க முடியாதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் அதனால விட்டுடுங்க என்று சொல்கிறார்.

கோபியின் பிறந்தநாள் பரிசு

உங்களுக்கு ஏதாவது காபி ஆர்டர் பண்ணவா என்று கேட்க, எனக்கு வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்கிறார். பிறகு கோபி அங்கிருந்து கிச்சனுக்கு வருகிறார். அங்கு பாக்யாவிற்கு கோபி கொடுத்த கிப்ட் செல்பில் வைத்திருப்பதை பார்த்து அந்த கிப்ட்டை திறந்து பார்க்கிறார். அதில் ஒரு கவர் வருகிறது. அதில் ஒரு லெட்டர் இருக்கிறது.

Baakiyalakshmi Serial vijay TV

கோபி எழுதிய லெட்டர்

அந்த லெட்டரை எடுத்து கோபி படித்துப் பார்க்கிறார்கள் நான் உனக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இதுவரைக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னது கிடையாது. எந்த கிப்டும் கொடுத்தது கிடையாது. ஆனா உன்ன விட்டு பிரிஞ்சு போகும்போது தான் உன்னுடைய அருமை என்னன்னு எனக்கு புரிஞ்சது. இப்போ ராதிகா என்னை விட்டுட்டு போயிட்டா.. அதனால நான் இப்படி சொல்லல.

கோபியின் ஃபீலிங்

நான் இந்த வீட்டிலேயே இருக்கணும்ங்கறதுக்காகவும் நான் இதை உன்கிட்ட சொல்லல. நீ வேற ஒரு ஆளா மாறி நிக்குற. நீ சந்திச்ச கஷ்டங்கள் துரோகங்கள் எல்லாம் ரொம்ப அதிகம். நீ உனக்கும் உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு உண்மையா இருந்திருக்க. என்னுடைய அப்பா அம்மாவை நீ நல்லா பாத்துகிட்ட. இதுதான் நான் உனக்கு சொல்லுற முதல் பிறந்தநாள் வாழ்த்தாக கூட இருக்கலாம். ஹாப்பி பர்த்டே பாக்யா என்று எழுதி வைக்கப்பட்டிருப்பதை படித்து பார்த்துவிட்டு மீண்டும் அதே பைக்குள் வைத்து எடுத்து சென்று விடுகிறார்.

ராதிகா கேட்ட கேள்வி

பிறகு பாக்யா ரெஸ்டாரண்டில் ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா பாக்கியவிடம் நீங்க எனக்காக இந்த முடிவு எடுத்தீங்களா? என்று கேட்க, நான் திருப்பி கேட்டால் நீங்க என்ன சொல்லுவீங்க என்று பாக்யா கேட்டதும் நான் முடிவை மாத்திக்க மாட்டேன் என்று ராதிகா சொல்கிறார்.

நானும் யாருக்காகவும் இல்ல. அவரோடு என்னால் வாழ முடியாது என்று பாக்கியா சொல்ல, சரி என்று ராதிகா கிளம்பி போகிறார். பிறகு பாக்யா அனைவரையும் அனுப்பிவிட்டு கடைசியாக குடும்பத்தினர் மட்டும் இருக்கின்றனர். இனியா கிப்ட் எல்லாம் அதிகமாக இருக்குமா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது எழிலும் கிளம்புகின்றனர்.

அப்போது செழியன் பாட்டி சொன்னதை கொஞ்சம் யோசிச்சு பாருமா என்று சொல்ல, எழில் எதை சொல்கிற என்று கேட்கிறார். அப்பாவோடு திரும்பவும் சேர்ந்து வாழறததை தான் சொல்றேன் என்று செழியன் சொல்ல, அதற்கு எழில் அவர் மாறிட்டாரு ஆனால் அதற்காக அம்மா அவரோட மீண்டும் வாழனும் என்று கட்டாயம் இல்லை என்று சொல்ல பாக்கியா இவ்வளவு நாள் கழிச்சு என்னோட கனவு ஆசை எல்லாம் நான் நிறைவேற்றியிருக்கிறேன்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்யா பதிலடி

என்னுடைய அன்பை என் கையில் இருந்து பறிச்சுடாதீங்க என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் கிளம்புகிறார்கள். அதைத் தொடர்ந்து செல்வியும் ஆகாஷும் பாக்யாவிடம் வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா செல்வியிடம் எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு குடிக்கலாமா என்று கேட்க செல்வியும் சரிக்கா என்று சொல்கிறார்.

செல்வி கேட்ட கேள்வி

பிறகு ஆகாஷும் இனியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஆகாஷ் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார். ஆனால் இனியா இங்கே யாரும் இல்லை என்று தைரியமாக பேசுகிறார். அந்த நேரத்தில் செல்வி அங்கு வர ஆகாஷ் மற்றும் இனியா அதிர்ச்சி அடைகின்றனர்.

Baakiyalakshmi Serial vijay TV

மாட்டிய இனியா ஆகாஷ்

பிறகு என்ன பேசிட்டு இருந்தீங்க என்று செல்வி கேட்க, சும்மாதான் பேசிட்டு இருந்தோம் என்று இனியா சொல்கிறார். நீங்கள் இரண்டு பேரும் பேசி நான் பார்த்ததே இல்லையே என்று செல்வி சொல்ல நாங்க எப்பவாவது பேசிக்குவோம் என்று இனியா சொல்கிறார். அதற்கு செல்வி ஆகாஷிடம் நீ இனியா சொல்லி தான் என்னை வீடியோ எடுத்தியா என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறார். பிறகு இனியா அங்கிருந்து கிளம்பி போகிறார். அதைத்தொடர்ந்து ஆகாஷிடம் நீ யார்கிட்ட அடிக்கடி பேசிட்டு இருக்க என்பது எனக்கு தெரியும் அது இனியா கூட தானா? என்று கேட்க ஆகாஷ் வியர்த்து விறுவிறுத்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+