பாக்கியலட்சுமி: செழியனுக்காக பாக்யா காட்டிய ஆதாரம்.. சப்போர்ட் செய்த கோபி, ராதிகா இடத்தில் செல்வி.. செம சம்பவம்
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்கான எபிசோடில் ஜெயிலில் இருக்கும் செழியனை வெளியே கொண்டு வருவதற்காக பாக்யா முக்கிய ஆதாரத்தை மினிஸ்டரிடம் காட்டி இருக்கிறார். அதே நேரத்தில் கவுன்சிலரின் முகத்திரை கிழிந்து இருக்கிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி வீட்டில் கோபமாக இருக்கிறார். அப்போது கோபி அங்கு வருகிறார். அவரிடம் செழியனை வெளியே கொண்டு வருவதற்கு ஏதாவது முயற்சி எடுத்தியா என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு கோபி ஆமா எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட பேசிகிட்டு இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஈஸ்வரி ஒரு அப்பாவா நீ உன் மகனுக்கு என்ன செய்யனுமோ அதை செஞ்சுட்டு இருக்கிற. ஆனால் பாக்கியா இந்த நேரத்தில் என்ன பண்ணிக்கிட்டு இருக்கா தெரியுமா? அவள் இப்ப கூட சமைக்கத்தான் போயிருக்கா என்று சொன்னதும் கோபி அதிர்ச்சி ஆகிறார்.

கோபியின் நம்பிக்கை
ஆனாலும் பாக்கியா மீது நம்பிக்கையோடு கோபி பேசுகிறார். பாக்கியா எது செய்தாலும் இந்த குடும்பத்தின் நன்மைக்காக தான் செய்வா. இதில் கூட ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் என்று கோபி சொல்ல, அதற்கு ஈஸ்வரி, நீ பாக்யாவுக்கு இப்போ ரொம்ப சப்போர்ட் பண்ற என்று திட்டிக் கொண்டு இருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா சமையல் எல்லாம் முடித்துவிட்டு சாப்பாட்டை மினிஸ்டருக்கு பரிமாறுவதற்காக எடுத்துக் கொண்டு போகிறார்.
மிரட்டிய கவுன்சிலர்
ஆனால் அங்கு வரும் கவுன்சிலர் பாக்யாவை மினிஸ்டரை பார்க்க விடாமல் தடுத்து தன்னுடைய கட்சிக்காரர்களிடம் சாப்பாடை கொடுத்து பரிமாற சொல்கிறார். அதோடு நீங்க மினிஸ்டரை பார்க்கவே முடியாது என்று மிரட்டி விட்டு போகிறார். அந்த நேரத்தில் பாக்யாவுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்ன நபரும் அங்கு வருகிறார். அவர் நான் உங்களை எப்படியாவது மினிஸ்டரிடம் பேச வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மினிஸ்டரிடம் பேசப்போகிறார்.
மினிஸ்டர் பாராட்டு
அப்போது மினிஸ்டர் நீ ரெடி பண்ணுன ஆட்கள் தான் சமைச்சாங்களா? என்று கேட்டதும் அந்த நபர் அதிர்ச்சியில் இருக்கிறார். பிறகு சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று சொன்னதும் அந்த நபர் சந்தோஷமாகி இந்த சாப்பாடு செஞ்சவங்களை நீங்க பாராட்டணும் என்று சொல்ல அதற்கு மினிஸ்டர் சரி என்று சொல்கிறார். ஆனால் கவுன்சிலர் நம்மளுடைய குட்டு உடைந்து விடும் என்று நினைத்து மினிஸ்டரிடம் உங்களுக்கு நேரம் இல்லை இந்த நேரத்தில் இவங்களை எல்லாம் பாராட்டிக்கிட்டு இருந்தா சரிப்பட்டு வராது நீங்க கிளம்புங்க என்று அவசரப்படுத்துகிறார்.
பாக்கியா காட்டிய ஆதாரம்
மினிஸ்டரும் சரி என்று கிளம்புகிறார் அந்த நேரத்தில் பாக்கியா ஒரு கிண்ணத்தில் ஸ்வீட் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க அதை சாப்பிட்டு பார்த்ததும் மினிஸ்டர் அருமையாக இருக்கிறது நீங்கள் ஹோட்டல் தொடங்கலாமே என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா நான் ஹோட்டல் நடத்திட்டு தான் வரேன் ஆனால் அதில் ஒரு பிரச்சனை உங்க கட்சிக்காரர்களால் தான் வந்தது என்று சொன்னது மினிஸ்டர் என்னவென்று விசாரிக்கும் போது நடந்த விஷயத்தை எல்லாம் பாக்கியா சொல்கிறார்.
கண் கலங்கிய பாக்கியா
அதற்கு கவுன்சிலர் மறுப்பு தெரிவிக்கிறார். அப்போது பாக்கியா கவுன்சிலரிடம் பேசும்போது எடுத்த வீடியோ ஆதாரத்தை காட்டியதும் மினிஸ்டர் கோபப்பட்டு கவுன்சிலரை திட்டி செழியன் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சொல்கிறார். அதோடு அவரை கட்சி பொறுப்பில் இருந்து தூக்க போவதாகவும் சொல்கிறார். பிறகு கவுன்சிலர் போனதும் பாக்கியா செல்வியை கட்டிப்பிடித்து நன்றி சொல்கிறார். நான் என்னுடைய மகனுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன். ஆனால் நீ எனக்காக எல்லா கஷ்டத்திலும் துணையாய் இருந்த என்று கண்கலங்கி பாக்யா பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications