பாக்கியலட்சுமி: செழியனை காப்பாற்றிய பாக்கியா.. திமிராக பேசிய ஈஸ்வரிக்கு சரியான பதிலடி.. அதிர்ச்சியில் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 29ஆம் தேதிக்கான எபிசோடில் செழியனை பாக்யா போராடி ஜெயிலில் இருந்து கூட்டிகொண்டு வருகிறார். அதே நேரத்தில் பாக்கியாவை புரிந்து கொள்ளாமல் ஈஸ்வரி திமிராக பேசிக் கொண்டிருக்க, கடைசியில் அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா செழியனை ஜெயிலில் இருந்து கூட்டிட்டு வருவதற்காக மினிஸ்டர் வீட்டிலிருந்து சந்தோஷமாக பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது கவுன்சிலர் வழிமறித்து உன்னை சாதாரண பொம்பளன்னு நினைச்சுட்டேன். ஆனா நீ இவ்ளோ பெரிய வேலை பார்த்துட்ட, உன்னை நான் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டுகிறார். அதற்கு பாக்கியா நான் உங்களை பத்தி எதுவும் தப்பா சொல்லல, நீங்க செஞ்சத மட்டும் தான் சொன்னேன் என்று பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

செல்வி சொன்ன விஷயம்
பிறகு பாக்கியாவும் செல்வியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர, இன்ஸ்பெக்டர் செழியனை அனுப்பி வைக்கிறார்.செழியன் வெளியே வந்ததும், நான் இனி வெளியவே வரமாட்டேன் என்று நினைத்தேன் என்று பீல் பண்ண, அதற்கு ஒரு செல்வி உங்களை வெளியே கூட்டிட்டு வருவதற்காக அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு தெரியுமா? என்று நடந்த விஷயத்தை சொல்கிறார்.
கண் கலங்கிய செழியன்
அந்த நேரத்தில் பாக்யாவை மினிஸ்டரிடம் பார்ப்பதற்கு அனுமதித்த நபர் அங்கு வருகிறார். அவர் செழியனிடம் பொதுவா பையனுக்காக அம்மா என்ன வேணாலும் செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இவங்களை நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் என் உடம்பு சிலிர்த்துப் போச்சு, உன்ன வெளியே கொண்டு வரதுக்கு உங்க அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க தெரியுமா என்று சொன்னதும் செழியன் கண்கலங்கி பாக்கியாவிடம் சாரிமா உனக்கு உதவி செய்வதற்காக நெனச்சேன் ஆனா இப்படி ஆயிடுச்சு என்று பீல் பண்ணுகிறார்.
பாக்கியா பதிலடி
அடுத்ததாக செல்வியும் பாக்கியாவும் ரெஸ்டாரண்டை வந்து பார்க்க அங்கு பொருட்கள் எல்லாம் உடைந்து இருக்கிறது. அதை எல்லாம் பார்த்ததும் செல்வி நீ இன்னைக்கு வீட்டுக்கு போ நாளைக்கு பாத்துக்கலாம் என்று பாக்கியாவை அனுப்பி வைக்கிறார். அப்போது வீட்டில் செழியனுக்கு ஈஸ்வரி சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார். பாக்கியா வந்தவுடன் இதுதான் உன் பையன் உனக்கு தெரியுதா? என்று கோபப்படுகிறார்.
அதிர்ச்சியில் கோபி
அதோடு கோபியிடம் இவ பையன் ஜெயில்ல இருக்கும்போது இவா எங்க போயிட்டு வர தெரியுதா? சமையல் ஆர்டர் தான் முக்கியம் என்று சமைச்சிட்டு வரா என்று திட்ட, பாக்கியா நான் தான் என் பையனை ஜெயிலிருந்து வெளியே கொண்டு வந்தேன் என்று நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னதும் கோபி, ஜெனி எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது எனக்கு என்னோட பசங்க தான் முக்கியம் அவங்க தான் என்னுடைய உலகம் என்று பாக்கியா கண்கலங்கி சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.











Click it and Unblock the Notifications