பாக்கியலட்சுமி: மயூ மீது வீண் பழி போட்ட ஈஸ்வரி.. பாக்யா சொன்ன வார்த்தை.. ஆட்டத்தை தொடங்கிய ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 19ம் தேதிக்கான எபிசோடில் மயூ மீது தேவையில்லாத பழியை ஈஸ்வரி போடுகிறார். இதனால் ராதிகா கோபப்படுகிறார். அதே நேரத்தில் பாக்யா செய்த செயலை கோபி பாராட்டுகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா டான்ஸில் கலந்து கொள்வதற்காக மேக்கப் போடுவதற்கு எல்லா பொருள்களையும் சோபாவில் எடுத்து வைத்திருக்கிறார். அதில் ஒவ்வொன்றாக எடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி பாக்யாவிடம் இனியா என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க, டான்ஸ்காக எப்படி மேக்கப் போடலாம்னு இப்பவே பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

கொஞ்ச நேரத்தில் இனியாவுக்கு போன் வந்ததும் அவர் எழுந்து போன் பேச போய் விடுகிறார். அந்த நேரத்தில் செல்வியும் பாக்யாவும் அங்கு பரணில் இருக்கும் பொருள்களை எடுப்பதற்காக போய்விடுகிறார்கள். அப்போது மயூ அங்கு வருகிறார். மேக்கப் பொருட்களை பார்த்ததும் சிலவற்றை எடுத்து போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த இனியா அடுத்தவங்க பொருளை எப்படி கேட்காமல் எடுக்கலாம் என்று திட்டுகிறார். அதோடு ஒருத்தங்க யூஸ் பண்ணுற பொருளை எப்படி இன்னொருத்தர் யூஸ் பண்றது என்று திட்டிவிட்டு, நான் ட்ரை பண்றது தனியா, ட்ரை பண்ணாதது தனியா இரண்டு வகையாக பிரித்து வச்சிருந்தேன் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அப்போது ஈஸ்வரி வந்து திட்ட ஆரம்பிக்கிறார். உனக்கெல்லாம் அறிவே கிடையாதா? மத்தவங்க பொருளை இப்படித்தான் கேட்காமல் எடுத்து யூஸ் பண்ணுவியா என்று திட்ட குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் வந்து விடுகிறார்கள். அப்போது பாக்யா என்னாச்சு? என்ன விஷயம் என்று கேட்க, ஈஸ்வரி மேக்கப் பொருளை எல்லாம் எடுத்து கீழே போட்டு உடைத்து சோபால தடவிட்டா என்று இல்லாததை சொல்லி பழி போடுகிறார்.

இதனால் ஈஸ்வரி சொல்வதை கேட்டு இனியா அதிர்ச்சி அடைகிறார். அப்போது மயூ அப்படியெல்லாம் பண்ணல, மேக்கப் போட்டுட்டு அதை எடுத்த இடத்துல வச்சுட்டேன் என்று சொன்னதும் கோபி சின்ன குழந்தை விடுங்கம்மா என்று சொல்கிறார். அப்போது பாக்கியா இனியாவிடம் என்ன நடந்தது என்று கேட்க, நான் மேக்கப் போடற ஐட்டம் தனி தனியாக எடுத்து வைத்திருந்ததேன்.

ஆனால் எல்லாம் இப்போ ஒன்றாக ஆயிடுச்சு என்று சொல்ல மயூ நான் எல்லாத்தையும் எடுத்த இடத்துல அப்படியே வச்சிட்டேன் என்று சொல்கிறார். அதற்கு இனியாவிடம் பாக்கியா மயூவை ஏதாவது திட்டுனியா என்று கேட்க, இல்லமா ஒருத்தர் யூஸ் பண்றதை எப்படி இன்னொருத்தர் யூஸ் பண்ணுவது என்று தான் கேட்டேன் என்று சொல்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அதற்கு பாக்கியா நீ ஜெனி மேக்கப் ஐட்டத்தை யூஸ் பண்ணுவது இல்லையா என்று கேட்க, அதற்கு இனியா யூஸ் பண்ணி இருக்கேன் என்று சொல்கிறார். அப்போ நீ மட்டும் அடுத்தவங்க பொருளை யூஸ் பண்ணலாம்? உன் பொருளை இன்னொருத்தங்க யூஸ் பண்ணுனா நீ யூஸ் பண்ண மாட்டியா என்று கேட்கிறார். அதோடு இனியாவிடம் மயூ கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லி சொல்கிறார்.

அப்போது ராதிகா யாரிடமும் கேட்காமல் எந்த பொருளையும் எடுக்க கூடாதுன்னு உனக்கு தெரியாதா? ஏதாவது உனக்கு தேவைனா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறார். அதற்கு பாக்யா குழந்தையை எதுக்கு திட்டுறீங்க சில பெரியவர்களே புரிஞ்சுக்காமல் தெரியாமல் பேசுறாங்க என்று பாக்யா சொன்னதும் ஈஸ்வரி நீ என்னைதான சொல்லுற என்று கோபப்படுகிறார்.

அதற்கு பாக்யா நான் அப்படியெல்லாம் சொல்லல. நீங்க யாருக்கோ போன் பண்ணுறேன்னு சொன்னீங்களே என்று பேச்சை மாற்றி ஈஸ்வரியை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். கோபி பாக்யாவை நிறுத்தி எவ்வளவு அழகா இந்த பிரச்சனையை சால்வ் பண்ணிட்ட, ரெண்டு பேருக்கும் எந்த மனசு கஷ்டம் வராத மாதிரி தீர்ப்பு சொல்லிட்ட என்று பாராட்டுகிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அடுத்ததாக பாக்யாவும் செல்வியும் வெளியே வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா டிவியை ஆன் பண்ணி பாட்டு வைக்கிறார். பாட்டு சத்தம் அதிகமாக இருப்பதால் இனியா பாட்டு வச்சிருப்பா என்று ஈஸ்வரி வெளியில் வந்து பார்க்க ராதிகா பாட்டு வச்சிருக்கார் என்றதும் ஈஸ்வரி கோபப்பட்டு ராதிகாவிடம் சண்டை போடுகிறார்.

அதற்கு ராதிகா பாட்டை மட்டும் சத்தம் குறைக்க சொல்லுங்க வேற எதுவும் சொல்லாதிங்க என்று சவுண்டை மட்டும் குறைக்கிறார். அப்போது ஈஸ்வரி ரூமுக்குள்ள சென்று என் வீட்டுக்குள் இருந்துட்டு இவ்வளவு அதிகாரம் பண்ணுவாளா என்று மீண்டும் பிரச்சனை பண்ணுகிறார். அப்போது ராதிகாவும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த கோபி இப்ப சேனல்ல சவுண்ட் கம்மி ஆயிடுச்சு பாருங்க.. ரிமோட்டு பிரச்சனை என்று என்பது போல நாடகமாடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+