பாக்கியலட்சுமி: அசிங்கப்படுத்திய ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா.. கோபிக்கு விழுந்த பெரிய இடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 29ஆம் தேதிக்கான எபிசோடில் ஈஸ்வரி ஒவ்வொரு முறையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்க, ராதிகா பாக்யா வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் என்று சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகா ட்ரிப் கூட்டிட்டு போன விஷயத்தை வைத்து ஈஸ்வரி வீட்டில் பஞ்சாயத்து பண்ணி ராதிகாவை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ராதிகா நாளைக்கு நாங்க மூன்று பேரும் வீட்டை விட்டு கிளம்ப போகிறோம்.

பாக்கியா கொடுத்த பத்து நாள் டைம் முடிந்துவிட்டது என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனாலும் கோபி நான் பாக்யாவிடம் பேசுகிறேன் இன்னும் ஒரு பத்து நாள் இருந்து விட்டுப் போகலாம் என்று சொல்ல, அதற்கு ராதிகா முடியாது கிளம்பியே ஆக வேண்டும் என்று சொல்கிறார்.
விஜய் டிவியில் என்ட்ரியாகும் 4 எதிர்நீச்சல் பிரபலங்கள்.. இனி சீரியல் நிலைமை? சேனல் எடுத்த முக்கிய முடிவு
இதனால் ஈஸ்வரி ராதிகாவிடம் எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டியா? உனக்கு உன் பொண்ணு இருக்கா தானே அவளை விட்டுட்டு நீ இங்கே இருப்பியா? ஏற்கனவே ஒரு முறை உன் கூட கோபி வந்ததுனால தான் அவன் இவ்வளவு கஷ்டப்பட்டான் மீண்டும் நீ அவனை கூட்டிட்டு போயி அவன கொல்ல பாக்குறியா என்று அழுது புலம்புகிறார்.
அதைத்தொடர்ந்து கோபி ராதிகாவின் ரூமுக்கு சென்று இங்கேயே எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாமே என்று சொல்ல, அது எப்படி முடியும்? இது உங்க வீடா? உங்களுடைய முன்னாள் மனைவியின் வீடு. இப்படி இந்த வீட்டில் வந்து இருக்கிறது அசிங்கமா இல்லையா? என்று கேட்கிறார்.
கெட்டிமேளம் சீரியல்: விபத்தில் பறிபோன இரட்டை உயிர்.. நிறுத்தப்படும் துளசி கல்யாணம்! ஹீரோ செய்த செயல்
ஆனாலும் கோபி எவ்வளவோ கெஞ்சி பார்க்கிறார். அதற்கு ராதிகா மனம் மாறவில்லை. மறுபக்கத்தில் கோபி வீட்டை விட்டு போவதை நினைத்து இனியா அழுது கொண்டு இருக்க, பாக்யா அவரை சமாதானம் செய்கிறார். மேலும் நீ ஒரு பக்கம் மட்டும்தான் பார்க்கிறே.. என்னை பற்றி யோசிக்கிறதே இல்லை என்று இனியா சொல்ல, நாளைக்கு உன்னுடைய அப்பா கிளம்பும்போது தயவு செய்து எமோஷனலா எதுவும் செய்யாதே என்று பாக்கியா பக்குவமா சொல்கிறார்.
கோபி இரவு முழுவதும் தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் ராதிகா பெட்டி படுக்கையுடன் ரெடி ஆகிறார். அப்போது கோபியிடம் வந்து ஈஸ்வரி நீ ராதிகாவிடம் பேசினியா என்று கேட்கிறார். அந்த நேரத்தில் ராதிகா பெட்டி படுக்கையுடன் அங்கு வந்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications