விஜய் டிவியில் என்ட்ரியாகும் 4 எதிர்நீச்சல் பிரபலங்கள்.. இனி சீரியல் நிலைமை? சேனல் எடுத்த முக்கிய முடிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்த 4 பிரபலங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.
பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்களை அதிகமாக கவர்கிறதோ அந்த சீரியலுக்குத்தான் மவுசு அதிகமாக இருக்கிறது. அதனால் டிஆர்பிஐ தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக புதியது புதியதாக கதையில் திருப்பங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஒரு சில சீரியல்கள் ஹிட் அடைந்து விட்டால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் அதிக மவுசு ஏற்பட்டு விடுகிறது. அதுபோலத்தான் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டனர்.
எதிர்நீச்சல் சீரியலில் முதல் பாகத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு கதை வேறு விதமாக பயணிக்க தொடங்கியது ஆனால் அது சரியாக எடுபடாமல் போய்விட்டதால் சீரியலை திடீரென்று முடித்துவிட்டார்கள். இப்போது அதன் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் டிஆர்பியில் ஆரம்பத்தில் இருந்த இடத்தை இப்போது இரண்டாவது சீசன் பிடிக்க முடியாத நிலை இருக்கிறது.
எதிர்நீச்சல் 2வில் என்ட்ரி ஆகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. மாற்றப்பட்ட கதை.. ஆனால் இது தப்புங்க!
ஆனால் இனி போக போக கதையில் மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் முதல் பாகத்தில் நடித்து பிரபலமடைந்த நான்கு பிரபலங்கள் இப்போது விஜய் டிவி சீரியலுக்கு மாறியிருக்கிறார்கள். அதிலும் எதிர்நீச்சல் சீரியலில் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை மதுமிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அவரை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டராக முதல் பாகத்தில் நடித்து இப்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் சத்யா தேவராஜனும் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த சீரியலுக்கான ப்ரோமோ நேற்று தான் முதல் முறையாக வெளியாகி இருக்கிறது.

சத்யா தேவராஜன் கதாநாயகியாக நடிக்க இருக்கும் தனம் சீரியலில் தன்னுடைய கணவர் இறந்த பிறகு கணவரின் குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டும் வேலை பார்க்கும் கேரக்டராக சத்யா நடிக்கிறார். சத்யாதேவராஜனை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி ஆக நடித்து இப்போது இரண்டாவது பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை காயத்ரி விஜய் டிவியில் சிந்து பைரவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அதுபோல எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனாக பிரபலமடைந்த விமல் குமாரும் சிந்து பைரவி சீரியலில் நடிக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நான்கு பிரபலங்கள் விஜய் டிவி சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது எதிர்நீச்சல் சீரியலுக்கு பின்னடைவாக இருக்குமா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதுபோல ஏற்கனவே விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியலுக்கு தான் டிஆர்பி போட்டி அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் இப்போது சன் டிவி பிரபலங்கள் அதிகமானோர் விஜய் டிவிக்கு மாறி இருப்பதால் இனி டிஆர்பி எப்படி வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications