பாக்கியலட்சுமி: ராதிகாவால் வெடித்த பூகம்பம்.. இனியா கேட்ட கேள்வி? மாட்டிய ஈஸ்வரி.. சபாஷ் பாக்கியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி நான்காம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவின் வீட்டில் ராதிகாவை தங்க வைப்பது குறித்து இனியா கேட்ட கேள்விக்கு ஈஸ்வரி பிரச்சனையில் சிக்குகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா வீட்டில் குடும்பத்தினர் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ராதிகா, கோபி, மயூ மூன்று பேரும் வருகிறார்கள். அவர்கள் நீங்க சாப்பிட்டு முடித்ததும் நாங்க சாப்பிடுறோம் என்று சொல்ல, அதற்கு பாக்கியா இல்லை உட்காருங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்கிறார்.

அப்போது ராதிகா காலையில் உப்புமா செய்து வைத்திருப்பதை கோபிக்கு கொடுக்கிறார். இதனால் ஈஸ்வரி உடம்பு சரியில்லாதவனுக்கு இந்த சாப்பாட்டை யார் கொடுப்பா என்று சண்டை போடுகிறார். ஆனாலும் கோபி வேறு வழி இல்லாமல் நான் இதையே சாப்பிடுறேன் என்று சாப்பிடுகிறார். இதனால் கோபமான ஈஸ்வரி அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார்.
ஈஸ்வரியை பார்த்து ராதிகாவும் பாக்கியாவும் சிரிக்கிறார்கள். அடுத்ததாக ராதிகா ஆபீசுக்கு கிளம்புகிறார். அப்போது கோபியிடம் மாத்திரையை ஒழுங்கா போடுங்க, உங்களுக்கு மதிய சாப்பாடு செஞ்சு வச்சிருக்கேன் அதை எடுத்து சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அதுபோல பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு கிளம்புகிறார். அப்போது இனியா நீ செய்றது ஒன்றுமே எனக்கு பிடிக்கல. ராதிகாவை இந்த வீட்டை விட்டு போக சொல்லு அவங்கள எதுக்காக இந்த வீட்டில் உட்கார வச்சிருக்க, அதுவும் வாடகை வேற கேட்கிற என்று சொல்ல, அதற்கு பாக்கியா யாரு வேணும்னாலும் வந்து இந்த வீட்டில் சும்மா இருக்க அனுமதிக்க முடியாது அதனாலதான் நான் வாடகை கேட்டேன்.

அதுபோல ராதிகாவை நான் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரல... அவங்கள நான் கல்யாணம் பண்ணல. எல்லாமே உங்க அப்பா செஞ்சது தானே. அப்போ உங்க அப்பா கிட்ட போய் கேளு என்று சொல்லிவிட்டு போகிறார். இதனால் இனியா ஈஸ்வரியிடம் எனக்கு ராதிகா இந்த வீட்டில் இருப்பது பிடிக்கல நான் இதைப்பற்றி அப்பாகிட்ட பேச போறேன் என்று சொல்கிறார்.
அதற்கு ஈஸ்வரி கொஞ்சம் தன்மையா பேசு, கோபப்படுற மாதிரி பேசிராத என்று சொல்லி அனுப்புகிறார். உடனே இனியா கோபியிடம் பேசுவதற்காக ரூமிற்கு போகிறார். அப்போது கோபி கை நிறைய மாத்திரைகளை எடுத்து வைத்து சாப்பிட போகிறார். எனக்கு முன்பு போல உடல்நிலை இல்ல முன்பெல்லாம் அவ்வளவு பிரஸ்காக இருப்பேன். ஆனா இப்போ சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் பயமாய் இருக்கிறது.
ஏதாவது வாக்குவாதம் வந்தால், எனக்கு பிடிக்காத விஷயங்கள் பேசும்போது எனக்கு பதட்டம் அதிகமாகி விடுகிறது. எனக்கு எதுவும் ஆகிவிடும் என்று எனக்கு தோன்றுகிறது என்று சொல்ல இதனால் இனியா எதுவும் பேசாமல் திரும்ப வந்து விடுகிறார். பிறகு இந்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்ல அதற்கு ஈஸ்வரி நானும் கோபி உடைய உடல் நிலையை பார்த்து தான் எதுவும் பண்ணாம இருக்கேன்.

இல்லனா ராதிகாவை இந்த வீட்டை விட்டு துரத்த எனக்கு ஒரு நொடி போதும். சரி கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகும் அதுவரைக்கும் கோபி இடம் பேச வேண்டாம் என்று இனியாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். அடுத்ததாக மதிய சாப்பாட்டிற்கு கோபியை ஈஸ்வரி கூப்பிடுகிறார். அப்போது கோபிக்காக ராதிகா லெமன் ரைஸும், உருளைக்கிழங்கு பொரியல் செய்து வைத்திருக்கிறார்.
ஆனால் பாக்கியா கீரை கூட்டு, முட்டை, கத்திரிக்காய் தொக்கு என்று விதவிதமாக சமைத்து வைத்திருக்கிறார். இதனால் பாக்கியா சமைத்த சாப்பாடை கோபிக்கு போடும்போது பாக்யா அங்கு வந்து நீங்க என்ன செய்கிறீங்க என்று கோபப்படுகிறார். அதோடு நான் இந்த வீட்டில் அவர் தங்குவதற்கு மட்டும் தான் வாடகை வாங்குகிறேன். சமைத்து போடலாம் முடியாது, நீங்க மட்டும் தான் இதை சாப்பிடணும் என்று ஈஸ்வரிக்கு சாப்பாடு போட்டு விட்டு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications