பாக்கியலட்சுமி: போலீஸிடம் ஈஸ்வரி சொன்ன வார்த்தை! கமலாவின் கழுத்தை நெறித்த கோபி! ராதிகா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 9ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி ஜெயிலில் கஷ்டப்படுவதால் அதற்கு காரணமான கமலாவை கொலை செய்வதற்காக கோபி முயற்சி செய்கிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரியை நினைத்து ராமமூர்த்தி மற்றும் பாக்கியா குடும்பத்தினர் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்ட ஈஸ்வரியை நினைத்து இராமமூர்த்தி அழுது கொண்டிருக்க பாக்கியாவும் கண்கலங்க மொத்த குடும்பமும் ஆளாளுக்கு ஒரு பக்கமாக அழுது கொண்டிருக்கின்றனர். பாட்டியை நினைத்து செழியன் அழுது கொண்டிருக்க ஜெனி ஆறுதல் சொல்கிறார். அதுபோல் இனியாவும் பாட்டியை நினைத்து அழுது கொண்டிருக்க பாக்யாவும் எழிலும் ஆறுதல் சொல்லி பாட்டி சீக்கிரமாக வெளியே கூட்டிட்டு வந்துவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் வீட்டிற்கு கோபமாக வரும் கோபி கதவு மூடி இருப்பதால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கமலாவின் கழுத்தை பிடித்து நெறித்துக் கொலை செய்ய பார்க்கிறார் ராதிகா தடுக்கவும் வீட்டில் இருக்கும் டிவி போன்ற சாமான்களை எல்லாம் எடுத்து போட்டு உடைக்க, ராதிகா உங்க அம்மா செய்த தப்புக்கு தான் ஜெயில்ல இருக்காங்க என்று சொல்ல, தப்பு பண்ணுனது எங்க அம்மா இல்ல நான் தான்.

நான் உன்னை கட்டுனது தான் பெரிய தப்பு .உன் மேல பரிதாபப்பட்டது தப்பு என்று பேச ராதிகா நான் மட்டும் சந்தோஷமாவா இருக்கேன்? உங்களால என் நிம்மதியே போயிடுச்சு. நீங்கதான் நீ இல்லன்னா நான் செத்துருவேன்னு காலில் விழுந்து கெஞ்சினீங்க என்று சொல்ல, கோபி நான் இல்லாட்டி நீ நடுத்தரவுக்கு வந்து இருப்ப உன்னை திரும்பவும் பார்த்தது என்னுடைய தப்பு என்று கோபி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதோடு எங்க அம்மாவுக்கு ஏதாவது ஒன்னுனா உங்க ரெண்டு பேரையும் வீட்டோட வச்சு கொளுத்திடுவேன் என்று கோபப்பட்டு திட்டி விட்டு ரெஸ்டாரண்ட் வந்து விட அங்கு கோபியின் நண்பன் கோபிக்கு ஆறுதல் சொல்ல கோபி அம்மாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டு இப்போ ஜெயில்ல இருக்காங்க அவங்க சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட தெரியல. எந்த ஒரு பையனும் செய்யக்கூடாத பாவத்தை நான் செஞ்சுட்டேன் என்று கலங்கி கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் ஈஸ்வரி கோபி பற்றி பழைய நினைவுகளை எல்லாம் நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அங்கு வரும் இன்ஸ்பெக்டர் நீங்க ராதிகாவின் குழந்தையை எதுக்காக கலைச்சீங்க என்று கேட்க, நான் எதுவும் பண்ணல என்று ஈஸ்வரி சொல்வதை நம்பாமல் இன்ஸ்பெக்டர் லத்தியை காட்டி மிரட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications