பாக்கியலட்சுமி: செழியனை பார்த்து கமலா கேட்ட கேள்வி.. கோபி கொடுத்த அதிர்ச்சி.. கண்ணீரில் ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் கோபி குடித்துவிட்டு பிரச்சனை செய்ததால் எழில் மற்றும் செழியன் ராதிகா வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகின்றனர். அங்கு கோபி கமலாவை அசிங்கப்படுத்தியதால் ராதிகா கோபப்படுகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி குடித்துவிட்டு நிற்க முடியாமல் இருப்பதை பார்த்ததும் செழியன் கோபியை காரில் ஏற்றிக்கொண்டு வீட்டில் விட்டுவிடலாம் என்று சொல்ல, எழில் முதலில் மறுக்கிறார். பிறகு அவரோடு நான் காரில் பின்னாடி இருக்க மாட்டேன் என்று சொல்ல எழிலை செழியன் கார் ஓட்ட சொல்லி கோபியை பிடித்துக்கொண்டு வருகிறார்.

Television Baakiyalakshmi Serial

அப்போது கோபி நீங்க யாரு என்று புலம்பிக் கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா செழியனுக்கு போன் பண்ண செழியன் முதலில் பாக்கியாவிடம் சமாளிச்சாலும் பிறகு அங்கு நடந்த விஷயத்தை சொல்கிறார். இதை கேட்ட கோபி எழில், செழியன் என்னுடைய மகன்கள் என்று புலம்பிக்கொண்டே வருகிறார். பிறகு ராதிகா வீட்டில் கோபியை செழியன் கொண்டு விடும்போது கமலா நீதான் இவரை குடிக்க வச்சியா?

பாக்கியலட்சுமி: ராதிகா கோபத்தில் சொன்ன வார்த்தை! அடிதடியில் ஈடுபட்ட கோபி.. மனம் மாறிட்டாங்களே ஈஸ்வரி
எங்களை நிம்மதியா இருக்க விடக்கூடாது நீங்க பிளான் பண்றீங்களா என்று திட்ட செழியன் கோபமாக வெளியே வந்து விடுகிறார். உள்ள ஏதோ சத்தம் கேட்டதை வைத்து எழில் என்ன ஆச்சு என்று விசாரிக்க அந்த அம்மா என்ன நீ தான் குடிக்க வச்சியான்னு கேக்குறாங்க என்று கண் கலங்குகிறார் அப்போது எழில் அவரை சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு போகிறார்.

Television Baakiyalakshmi Serial

அதைத்தொடர்ந்து கோபி கமலாவிடம் நீ யாருமா திட்டிக்கிட்டே இருக்கிற என்று கேட்க, கமலா நான் கமலா என்று சொல்ல நானும் ராதிகா பேபியும் தனியா இருந்த வரைக்கும் சந்தோஷமா இருந்தோம். ஆனா வந்து கமலாவும் என் அம்மாவும் வந்த பிறகு எங்களுடைய சந்தோசம் எல்லாம் போச்சு. ஆயிரம் பிரச்சனை வந்துகிட்டே இருக்கு. கமலா சரியான பிசாசு பிசாசு என்று திட்ட, கோபி பார்த்து பேசுங்க என்று ராதிகா கோபப்பட அவளால தான் எனக்கு பிரச்சனை என்று கோபி கமலாவை திட்டி இனிமேல் அவளுக்கு மரியாதை தரப்போவதில்லை என்று சொல்கிறார்.

அதற்கு கமலா பார்த்தியா ராதிகா எனக்கு இதெல்லாம் தேவையா என்று புலம்புகிறார். அடுத்ததாக மறுநாள் காலையில் பாக்கியா, ராமமூர்த்தி இனிய ஈஸ்வரி எல்லோரும் கோவிலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி தன்னுடைய பழைய நினைவுகள் பற்றி பேசி சந்தோஷப்பட்டு இருக்கிறார். அப்போது போன் வந்ததும் பாக்யா வெளியே சென்று சாவித்திரியுடன் உள்ளே வர ஈஸ்வரி யார் என்று முதலில் தெரியாமல் இருக்க சாவித்திரி தன்னை அறிமுகம் செய்ததும் ஆனந்த கண்ணீருடன் கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+