பாக்கியலட்சுமி: இனியாவிற்கு கிடைத்த வாய்ப்பு.. ராதிகா சொன்ன வார்த்தை.. பழனிசாமி கொடுத்த ஐடியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவின் பிசினஸை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக பழனிச்சாமி சூப்பர் ஐடியா ஒன்று கொடுத்து இருக்கிறார். அதுபோல இனியாவிற்கு காலேஜில் புது வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஈஸ்வரி எதுவும் பேசவில்லை. அப்போது முதலில் கெஞ்சி பேசிய கோபி பிறகு ஈஸ்வரியிடம் கோபமாக பேசுகிறார். நீங்க செஞ்சதை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன் என்று கண்டபடி திட்டுகிறார். ஆனால் ஈஸ்வரி ஒருத்தங்களை திட்றதுக்கு கொஞ்சமாவது உரிமை எடுத்துக்கலாம். ஆனால் அந்த உரிமையை கூட உங்ககிட்ட எடுத்துக்க எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லி ஆட்டோவில் ஏற திரும்புகிறார்.

அதற்கு கோபி எனக்கும் அப்படித்தான் நீங்க யாரும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு ராதிகாவிடம் வந்து நடந்த விஷயத்தை சொல்ல ராதிகா ஒருத்தர் உங்களை நிராகரிக்கும்போது அந்த இடத்துல நீங்க எதுக்கு மீண்டும் மீண்டும் போறீங்க என்று கேட்கிறார். அதற்கு கோபி இனி நான் போகமாட்டேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா உங்களுக்கு தான் நானும் மயூவும் இருக்கிறோமே இனி இதுதான் நம்ம குடும்பம் என்று சொன்னதும் கோபி எனக்கும் நீங்க மட்டும் போதும் அவங்க வேற யாரும் தேவை கிடையாது என்று சொல்கிறார்.
அதோடு பாக்யாவை ஏதாவது செய்யணும் இத்தனைக்கும் காரணம் அவ தான் என்று கோபமாக பேச ராதிகா அவங்க எப்படி வேணா போகட்டும் நமக்கு அதெல்லாம் தேவை கிடையாது. நீங்க இனி உங்க வேலைய பாருங்க என்று சொல்லிவிட்டு காபி எடுத்துட்டு வர போகிறார். மறுபக்கத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் ஆட்கள் லீவு போட்டதால் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது பழனிச்சாமி அங்கு வந்து என்ன மேடம் ரொம்ப பரபரப்பா வேலை செய்றீங்க என்று கேட்க ஆட்கள் இல்லாத விஷயத்தை பற்றி சொல்கிறார்.

அதற்கு பழனிச்சாமி என்ன இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல ஆளை வச்சு செய்றதுதான் நம்மளுக்கு நல்லது என்று ஐடியா கொடுக்க அவங்க எப்படி சமைப்பாங்கன்னு தெரியாதே என்று பாக்யா சொல்ல அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல மேடம் நம்ம இப்படி செய்யணும் அப்படி செய்யணும் என்று சொல்லிக் கொடுத்துட்டா அவங்க நமக்கு புடிச்ச மாதிரி செஞ்சு தருவாங்க என்று ஐடியா கொடுக்கிறார்.
பாக்யா உடனே ஒரு செஃப்பை ரெடி பண்ண ஓகே சொல்கிறார். அடுத்த கட்டத்தில் எழில் கதை எழுதிக்கொண்டிருக்கும்போது அவருக்கு காபி கொடுத்துவிட்டு அமிர்தா சமைக்க போகிறார். ஆனால் அமிர்தா சமைக்கும் இடத்திற்கு வந்து எழில் ரொமான்ஸ் செய்ய முயற்சி செய்ய அமிர்தா கதை எழுத போகுமாறு விரட்டி விடுகிறார்.

அடுத்ததாக இனியா காலேஜில் இருக்கும்போது அவருடைய தோழிகள் வந்து காலேஜில் பங்க்ஷன் நடக்க இருக்கிறது அதில் டான்ஸ் போட்டியில் நாம சேரனும் என்று சொல்ல இனியா அதெல்லாம் வேண்டாம் என்று மறுக்கிறார். ஆனால் அவருடைய நண்பர்கள் ஏற்கனவே பப்பில் நடந்த பிரச்சனையை மறக்க வேண்டும் என்றால் நாம இந்த ஃபங்ஷனில் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications