பாக்கியலட்சுமி: பழனிச்சாமி கேட்ட கேள்வி! கொந்தளித்த ஈஸ்வரி! கதறிய கோபி.. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 5ஆம் தேதிக்கான எபிசோடில் ராமமூர்த்தியின் இறுதி சடங்கு கோபி செய்யக்கூடாது என்று ஈஸ்வரி பிரச்சனை செய்ய, மொத்த குடும்பத்தினரும் கோபிக்கு ஆதரவாக பேசுகின்றனர். ஆனால் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராமமூர்த்திக்கு இறுதி சடங்கு செய்வதற்காக கோபியை வேட்டி கட்டி வருமாறு எல்லோரும் சொல்கின்றனர். கோபியும் அதுபடியே மாடிக்கு சென்று வேட்டி கட்டி கொண்டு கீழே இறங்கி வருகிறார். பிறகு ராமமூர்த்தியின் உடல் முன்பு சிறிது நேரம் நின்று கொண்டு உறவினர்களோடு வெளியே செல்ல கிளம்ப, அந்த நேரத்தில் அதுவரைக்கும் அமைதியாக இருந்த ஈஸ்வரி திடீரென்று ஒரு நிமிஷம் என்று கத்தி பேச எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போது கோபி இவருக்கு எந்த சடங்குமே செய்யக்கூடாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இதை கேட்டு கோபி என்னுடைய அப்பாவுக்கு நான்தான் இறுதி சடங்கு செய்வேன் என்று சொல்கிறார். அங்கு இருந்தவர்களும் கோபி தானே செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். கமலா கோபியை விட்டுக் கொடுக்காமல் அவர்தான் அவருடைய அப்பாவுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும். நீங்க என்ன இப்படி சொல்லுறீங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
ஆனால் ஈஸ்வரி கோபி இறுதி சடங்கு செய்யக்கூடாது என்று உறுதியாக நிற்கிறார். அதற்கு பழனிச்சாமி அம்மா நீங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க. ஐயாவின் மகன் இவர்தானே இவர்தானே அந்த இறுதி சடங்கு செய்ய வேண்டும். நம்ம குடும்பத்துக்குள்ள இருக்கிற பிரச்சனையை நாளைக்கு பேசிக்கலாம். இந்த இடத்தில் இப்போ அதை பற்றி பேச வேண்டாம். இப்போதைக்கு அவருடைய உடலுக்கு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

நான் என் புருஷனோட இத்தனை வருஷமா வாழ்ந்து இருக்கிறேன். அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று தெரியும். அவருக்கு அவர் சாகப்போறது தெரிந்ததோ இல்லையோ சில நாட்களாகவே கோபி எனக்கு இறுதி சடங்கு செய்யக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவருக்கு இவன் இறுதி சடங்கு செய்தால் அவருடைய ஆன்மா கூட சாந்தி அடையாது.

அவருக்கு பிடித்த மாதிரி தான் அவருடைய இறுதி சடங்கு நடக்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு கமலா அது எப்படி நீங்க கோபி மாப்பிள்ளை இறுதி சடங்கு செய்ய முடியாது என்று சொல்ல முடியும்? ஏற்கனவே இந்த வீட்டை விட்டு அவரை நீங்க வெளியே அனுப்பிட்டீங்க.. அது கூட சரின்னு பொறுத்துக்கலாம். ஆனால் அவரு செய்ய வேண்டிய கடமையை செய்யலைன்னா அவருக்கு மட்டும் அசிங்கம் இல்ல உங்களுக்கும் அசிங்கம் என்று சொல்கிறார்.

ராதிகாவும் கோபிக்காக பேச அதற்கு ஈஸ்வரி கோபி எங்களுக்கு பிள்ளையே இல்லை. இவன் அவருக்கு எந்த சடங்கும் செய்யக்கூடாது என்று சொல்கிறார். அதற்கு எழிலும், செழியனும் இவரே செய்யட்டும் பாட்டி என்று சொல்லியும் பாட்டி மனம் மாறவில்லை. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications