பாக்கியலட்சுமியில் நாளை: சுதாகர் கம்பெனிக்கு சென்று பாக்கியா கொடுத்த பதிலடி.. இனி நடக்க போவது இதுதானா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் இருந்து ராமமூர்த்தியின் புகைப்படங்களை வெளியே தூக்கி வீச இதனால் கோபமான பாக்கியா சுதாகர் ஆஃபீஸ்க்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்கிறார். அதோடு அவரிடம் புது சவால் போட்டு இருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் தான் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பாக்யா சந்தேகப்பட்டது போலவே சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரண்டை இனியா பெயருக்கு மாற்றிவிட்டார். அதோடு தங்களுடைய குரூப்பில் இந்த ரெஸ்டாரன்ட் சேர்ந்து விட்டது, இனி உங்களுக்கும் இந்த ரெஸ்டாரண்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது வெளியே போங்க என்று பாக்கியாவை துரத்தி விட்டு இருக்கிறார்.

சுதாகரின் சூழ்ச்சி
இதனால் பாக்கியா மொத்த குடும்பத்தினர் மீதும் கோபத்தில் இருக்கிறார். இன்றைய எபிசோடில் கூட ரெஸ்டாரண்டில் இருந்து வீட்டிற்கு வந்த பாக்கியா பசிக்கிறது என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அப்போது ஈஸ்வரி கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது யாரிடமும் எந்த பதிலும் பேசாமல் பாக்கியா கிளம்பி போயிருந்தார். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கோபத்தில் பாக்கியா
அதில் பாக்கியாவும், எழிலும் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார்கள். அப்போது பாக்கியா ரெஸ்டாரண்டில் இருந்த ராமமூர்த்தி புகைப்படங்களை எடுத்து வெளியே வீசி எறிகிறார்கள். அதை பார்த்து
எழில் கோபமாகி அங்கிருந்தவர்களிடம் சண்டை போட போகிறார்.
நடிக்கும் சுதாகர்
அதற்கு பாக்கியா நாம யாரு கிட்ட பேசணுமோ அவங்ககிட்ட தான் பேசணும் இவங்க கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல வா என்று கையில் போட்டோவை தூக்கிக்கொண்டு சுதாகர் ஆபீசுக்கு வருகிறார். அங்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னுடைய மாமனார் போட்டோவை தூக்கி வெளியே வீசுவிங்க என்று பாக்கியா சத்தம் போட, அதற்கு சுதாகர் அங்கிருந்தவர்களுக்கு அது யாருன்னு தெரிஞ்சிருக்காது ஏதோ ஒரு போட்டோனு தூக்கி வீசி இருப்பாங்க என்று சமாளிக்கிறார்
பாக்யாவுக்கு சந்தேகம்
இதனால் பாக்கியா கோபமாகி நீங்க என்கிட்ட ஒரு மாதிரி பேசுறீங்க கோபி கிட்ட வேற மாதிரி பேசுறீங்க. உங்க பேச்சு எதுவுமே சரி இல்ல. இதை எல்லாமே நான் இனியாவுக்காக தான் பொறுத்துக் கொண்டு இருக்கிறேன். இன்னைக்கு என்னுடைய மாமனார் போட்டோவை தூக்கி வீசின மாதிரி ஒரு நாள் இனியாவை தூக்கி வீசலாம்னு நெனச்சா நடக்கிறதே வேற என்று மிரட்டி விட்டு கிளம்புகிறார்.

இதெல்லாம் தேவையா
இதனால் சுதாகர் அதிர்ச்சியில் இருக்கிறார் இதை பார்க்கும் போது காமெடியாக தான் இருக்கிறது. இனியாவுக்கு விருப்பமே இல்லாத ஒரு கல்யாணத்தை குடும்பத்தினர் செய்து வைத்திருக்கிறார்கள். அந்த திருமணத்தில் பாக்யாவுக்கும் விருப்பமில்லை ஆனாலும் இனியா நன்றாக இருக்க வேண்டும் என்று தன்னுடைய ரெஸ்டாரண்டை சுதாகர் ஏமாற்றும் விஷயத்தை தெரிந்தும் கூட அவரிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார்.

அவமானப்படும் பாக்கியா
தன்னுடைய மகள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று இவர் போராடுவது பார்க்கும்போது தன்னுடைய மகளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பணக்கார வீட்டில் வாழ வேண்டும் என்று பாக்கியாவும் அபத்தமாக நினைக்கிறார் என்பது தெரிகிறது.. ரெஸ்டாரண்டை வாங்கி விட்டார் என்று தெரிந்த பிறகு மீண்டும் மீண்டும் பாக்யா அங்கே சென்று அவமானப்பட்டு வருவதை பார்க்கும்போது இவங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று தான் யோசிக்க வைக்கிறது.
ரசிகர்களின் கருத்து
இதற்கு சட்ட ரீதியாக என்ன முடிவு எடுக்கணுமோ அதை எடுக்கலாம் அதை விட்டுவிட்டு சென்டிமென்டாக பேசிக்கொண்டு ரெஸ்டாரண்டில் போய் அழுது கொண்டு இருந்தால் எல்லாம் சரிப்பட்டு வருமா? என்பதும் பலருடைய ஆதங்கம். பாக்கியலட்சுமி சீரியலில் எந்த கேரக்டர் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்? எந்த கேரக்டரை பார்த்தாலே கோபம் வருது பாஸ்?.












Click it and Unblock the Notifications