ராதிகா, கோபியை வெளுத்து வாங்கிய தாத்தா.. பாக்கியாவுக்கு எதிராக ஈஸ்வரியின் வில்லத்தனமான முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கேண்டின் ஆர்டரை ராதிகா கேன்சல் செய்ததால் எதிர்பாராத நஷ்டத்திற்க்கு ஈஸ்வரி அதிகமாக பாக்யாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.
எழில் அமிர்தாவின் மொத்த விஷயத்தையும் ஈஸ்வரி இடம் செழியன் போட்டுக் கொடுக்க ஈஸ்வரி எதிர்பாராத முடிவை எடுத்திருக்கிறார்.
பாக்கியாவுக்கு எதிராக கோபி மற்றும் ராதிகா செய்த சூழ்ச்சிகளை தெரிந்து கொண்ட தாத்தா இருவரையும் முகத்துக்கு நேராகவே திட்டி தீர்க்கிறார்.

ஈஸ்வரியின் கோபம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பாக்கியா சொன்னதை கேட்டு ஈஸ்வரி கோபப்படுகிறார். கோபி உன்னை திட்டுவதில் தப்பே இல்லை என சொல்லி கோபப்பட எழில் எதற்காக அந்த மனுசனை சொல்லி அம்மாவை திட்டுகிறீர்கள் என கேட்க, நீ சும்மா இரு, நீ இவளுக்கு கொடுக்கிற சப்போட்டாள்தான் இவள் எல்லாமே தப்பு தப்பாக செய்கிறார். நான் எத்தனையோ முறை சொன்னேன்.நீ தப்பு செய்வதற்கு உங்க அம்மா உனக்கு துணையாக வர, உங்க அம்மா தப்பு செய்வதற்கு நீ துணையாக வாரா? இது நல்லதுக்கு இல்லை, என் வீட்டில் இந்த மாதிரி எல்லாம் இனி நடக்கக்கூடாது என்று திட்டி விட்டு கோபமாக உள்ளே செல்ல பாட்டி சொல்றதில் தப்பில்லையே என செழியன் சொல்ல பாக்கியா சோகத்தோடு அமர்ந்திருக்கிறார். எழில் பாக்யாவை சமாதானம் செய்கிறார்

ராமமூர்த்திக்கு தெரிய வந்த உண்மை
அடுத்து காண்ட்ராக்ட் கேன்சலான காரணம் ராதிகாவால் தான் என்பதை செல்வியிடம் பாக்கியா சொல்ல, தேர்தலில் தோத்த கோவத்துல இப்படி பண்ணி இருப்பாள். அவள் நல்லாவே இருக்க மாட்டாள் என திட்டுகிறார். அதை தொடர்ந்து கோபியின் அப்பா வீட்டிற்கு வரும்போது அனைவரும் சோகமாக இருக்கின்றனர். என்ன எது என ராமமூர்த்தி விசாரிக்க நடந்த விஷயங்களை ஈஸ்வரி சொல்கிறார். ராதிகா தான் காரணம் என செல்வி போட்டுக் கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனாலும் ஈஸ்வரி இவள் எதற்கு தேவையில்லாத இந்த விஷயத்தில் தலையிடுகிறார் இதை செய்யாமல் இருந்திருந்தால் இப்படி பிரச்சனை வந்திருக்காதே என மீண்டும் கோபமாகவே பேச ராமமூர்த்தி பாக்கியாவிற்க்கு சப்போர்ட் பண்ண, நீங்கதான் ஆரம்பத்தில் இருந்து இவளுக்கு சப்போர்ட் கொடுக்கிறீர்கள் என்று ராம மூர்த்தியையும் ஈஸ்வரி திட்டுகிறார்.

ராமமூர்த்தியின் புது சவால்
கோபத்தில் கோபியின் அப்பா கோபி வீட்டிற்கு வந்து காண்ட்ராக்ட் கேன்சல் பண்ணுனது நீதானே என ராதிகாவிடம் கேட்க ராதிகா ஆமாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். சாப்பாடு நல்லா இல்லனா நான் தான் ஃபேஸ் பண்ணனும் அதனால்தான் பெரிய கேட்டரிங் போகலாம் என்று முடிவு எடுத்தேன் என சொல்கிறார். கோபி நான் கூட வேணாம்னு தான் சொன்னேன் ராதிகா பொழச்சு போகட்டும் நான் ஆர்டரை கொடுக்கிறேன் என சொன்னாள் என சொல்ல, தாத்தா அப்ப நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தான் இதை கேன்சல் பண்ணி இருக்கீங்க என கோபப்படுகிறார். இதையெல்லாம் பார்த்து பாக்கியா அப்படியே மூலையில் முடங்கி விட மாட்டாள். அவளை உங்களால் ஒன்னும் பண்ண முடியாது என சவால் விடுகிறார்.

போட்டுக் கொடுத்த செழியன்
அடுத்ததாக பாக்கியா ராஜசேகரை சந்தித்து பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என சொல்ல அப்படி எல்லாம் தர முடியாது. மாசா மாசம் தான் வட்டி கட்ட முடியும் என அவர் கூறி விடுகிறார். இதனால் பாக்கியா அங்கிருந்து வருத்தத்தோடு கிளம்பி வருகிறார். எழில் வீட்டில் ஈஸ்வரியின் காலில் எண்ணெய் தேய்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது செழியன் வர செழியனை கிண்டல் செய்து கொண்டு ஜாலியாக இருக்கிறார். திடீரென போனை எடுத்து பார்த்து சோகமாக மாறிவிடுகிறார். இதனை பார்த்து ஈஸ்வரி யாருக்கு அவன் போன் பண்ணினான். போன் எடுக்கலைன்னா ரொம்ப சோகமாக இருக்கிறான் என கேட்க, செழியன் போனை செக் பண்ணி பார்த்துவிட்டு அமிருதாவுக்கு தான் போன் பண்ணி இருக்கான் என சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications