Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமியில் அறிமுகமான புது நபர்.. இனி நடக்கப் போகும் கலவரம் இதுதானா? கோபிக்கு சரியான அடி

பாக்கியலட்சுமி சீரியலில் சரண் என்கிற கேரக்டர் புதியதாக அறிமுகமாகி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கிய லட்சுமி சீரியலில் இனியாவின் டியூஷன் பிரண்டாக சரண் என்கிற கேரக்டர் புதியதாக அறிமுகமாகி இருக்கிறார்.

கோபியின் சவாலில் ஜெய்ப்பதற்காக எட்டு நாட்கள் தொடர்ந்து பாக்கியா சமையல் செய்து இருக்கிறார்.

ஈஸ்வரி ஒரு பக்கம் நிலா பாப்பா தன்னைப் பாட்டி என்று சொன்னதால் திட்டியதால் எழில் கோபத்தோடு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்.

புது கேரக்டர் அறிமுகம்

புது கேரக்டர் அறிமுகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் புதியதாக சரண் என்கிற கேரக்டர் அறிமுகமாகி இருக்கிறார். இந்தியாவின் டியூஷன் நண்பராக அறிமுகம் ஆகி இருக்கும் சரனிடம் இனியா அதிகமாக உரிமை எடுத்து பழகிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அறிமுகமான முதல் நாளே கோபியின் முன்னாடி இருந்தபடியே அவருக்கு தெரியாமல் படிப்பது போன்று புத்தகத்தில் மறைத்து வைத்து செல்போனில் சரணுடன் சாட் செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த ராதிகா கோபப்படுகிறார்.

ராதிகாவின் எதிர்பாராத கேள்வி

ராதிகாவின் எதிர்பாராத கேள்வி

போனில் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நேரமா என்று ராதிகா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இனியா திணறிக் கொண்டு இருந்தாலும், இதை பற்றி கேட்பதற்கு இவர் யார் என்று கேள்வி கேட்க? அதற்கு கோபி ராதிகாவிற்க்கு கேட்பதற்கு உரிமை இருக்கிறது. ராதிகா கேட்பதும் சரிதான் என்று கூறியிருக்கிறார். இதனால் ராதிகா மீது கோபத்தில் இருக்கும் இனியா இனி அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் டியூஷனில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் சரனிடம் இனியா பேசிக் கொண்டிருக்கிறார்.

மொத்தத்தையும் உளறிய இனியா

மொத்தத்தையும் உளறிய இனியா

கோபி இரண்டாவது திருமணம் செய்து இருப்பது பற்றியும் தான் கோபியோடு தான் இருப்பது பற்றியும் தன்னுடைய அண்ணன் மற்றும் அம்மா எல்லாம் எதிர்த்த தங்களுடைய சொந்த வீட்டில் இருக்கிறார்கள் என்றும் அவர்களிடம் நான் பேசுவேன் என மொத்த கதையும் ஒரே நாளில் சரண் இடம் இனியா பேசிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இனி இவர்களுக்குள் காதல் டிராக் வர போவது போலவும் அதனால் இனி ஏற்படும் பிரச்சனைகளால் தான் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த கட்டத்தை எடுத்து வைக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி நடப்பது இது தானா

இனி நடப்பது இது தானா

இதே நேரத்தில் கோபியிடம் பாக்யா ஆறு மாதங்களுக்குள் 20 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தற்போது எட்டு நாட்கள் தொடர்ந்து மண்டபத்தில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி கோபியிடம் பாக்கியா சொன்ன மாதிரியே 20 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதி வாங்கலாம். ஆனால், ஏற்கனவே கோபி நீ பணத்தை தந்து விட்டாலும் நான் என்னுடைய அம்மா அல்லது அப்பா பெயரில் தான் வீட்டை எழுதி வைப்பேன் என்று கூறி இருக்கிறார். அதனால் இனி என்ன நடக்கப் போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இதற்குப் பிறகு இது என்னுடைய வீடு என் இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்று கோபி கூற முடியாது. அது மட்டும் அல்லாமல் கோபியின் வீட்டில் இருக்கும் இனியா காதல் பிரச்சனையில் மாட்டும்போது அதற்கு காரணம் கோபி தான் என்று ஈஸ்வரி கூறப்போகிறாரா? அல்லது பாக்கியா தான் இந்த டியூஷனில் இனியாவை சேர்த்து விட்டதால் இதற்கு காரணம் பாக்கியா தான் என்று சொல்லப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+