பாக்கியலட்சுமி: இனியாவிடம் பாக்கியா சொன்ன விஷயம்.. ஆடிப்போன சுதாகர்.. சரியான பதிலடி! இது பலருக்கு பாடம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஹனிமூன் போயிருந்த இனியா குடும்பத்தோடு பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது பாக்கியா இனியாவிடம் சொன்ன வார்த்தையை கேட்டு சுதாகர் அதிர்ச்சியில் இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவிற்கு எத்தனையோ பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அவர் கஷ்டப்பட்டு வாங்கிய இரண்டு ரெஸ்டாரண்டையும் இனியாவின் மாமனார் சுதாகர் ஏமாற்றி வாங்கி விட்டார். ஆனாலும் தான் எப்படியும் மீண்டும் பழைய மாதிரி வருவேன் என்று பாக்கியா போராடி கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போது பாக்கியா தொழில் தொடங்க வேண்டாம், இனி வீட்டில் இருந்து சமையல் செய்து வைத்து விட்டு குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

குடும்பத்தினரின் எதிர்ப்பு
இதுவரைக்கும் பாக்கியாவிற்கு துணையாக இருந்த அவருடைய இரண்டாவது மகன் எழில் கூட இப்போது இந்த நேரத்தில் தொடங்க வேண்டாம் அதுவும் சிம்பிளா தொடங்க வேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நான் பணம் தரேன் பெருசா தொடங்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பாக்கியா யாரிடமும் பணம் வாங்க கூடாது என்று இருக்கிறார். தற்போது பாக்கியா புதியதாக சின்ன ஒரு ஹோட்டல் நடத்துவதற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ
இந்த நிலையில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஹனிமூனுக்கு போய் இருந்த இனியா பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது சுதாகரும் குடும்பத்தோடு பாக்யா வீட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது எல்லோரும் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் பாக்யாவிடம் இனியா அம்மா உன்னுடைய பிசினஸ் இப்போ எப்படி போயிட்டு இருக்குது என்று கேட்டதும் சுதாகர் அதிர்ச்சியடைகிறார்.
பாக்கியா சொன்ன விஷயம்
அதற்கு பாக்கியா நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப் போகிறேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டு சுதாகர் இன்னும் அதிர்ச்சி அடைகிறார். நானும் சின்னதாக ஒரு ஹோட்டல் தொடங்கப் போகிறேன் என்று சொல்ல அதற்கு சுதாகர் என்னுடைய சம்பந்தி கையேந்தி பவன் நடத்துறாங்கன்னு சொல்றதுக்கு எனக்கு கௌரவ குறைச்சலாக இருக்குமே என்று சொல்ல, அதற்கு பாக்கியா, சம்பந்தி நல்ல வசதியா இருந்தாங்க சிலரால் ஏமாற்றப்பட்டு இப்போ சின்னதா ஒரு கையேந்தி பவன் நடத்துறாங்க அவ்வளவுதான் என்று சொல்லுங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
பாக்கியாவின் பதிலடி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சந்திப்பது போலவே பெண்கள் பலருக்கு இதுபோல அவமானங்கள் வந்திருக்கும். ஆனால் பாக்கியா போல தைரியமாக தன்னுடைய ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றி கொள்ள வேண்டும். ஆனால் பாக்கியா தன்னை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் மாமியாரை மீண்டும் மீண்டும் தாங்கி கொண்டு இருக்க இருந்து விடாதீங்க என்று கலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
கவனம் தேவை
அதுபோல பாக்கியா எவ்வளவோ அவமானப்பட்டாலும் மாமியார் பெயரிலேயே சென்டிமென்டாக ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். ஆனால் சுதாகர் ரெஸ்டாரண்டை ஏமாற்றி வாங்கும்போது ஈஸ்வரி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அந்த ரெஸ்டாரண்ட்டே என் பெயரில் தான் இருக்கிறது நானே கவலைப்படல உனக்கு என்ன கவலை என்று கேட்டிருந்தார்? இதுபோல அடுத்தவர்களுக்கு செய்யும் செயல்கள் கூட சில நேரங்களில் அசிங்கப்படுத்தலாம் கவனமாக இருங்க நண்பர்களே!
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications