கோபிக்கு வந்த புது சோதனை... ஹனிமூன் போன இடத்தில் இப்படி ஒரு கலவரமா? பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மகா சங்கமம் நடைபெற்று இருக்கிறது.
கொடைக்கானலில் இந்த இரண்டு சீரியல்களின் கதைக்களமும் இருந்து வருகிறது.
ஹனிமூனுக்கு கோபி ராதிகாவுடன் சென்ற இடத்தில் புதுவிதமான வேதனைகள் கிடைத்திருக்கிறது.

மீண்டும் மகா சங்கமம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பல நேரங்களில் மகா சங்கமம் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஐந்தாவது முறையாக பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இரண்டும் இணைந்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இன்றைய எபிசொட்டில் கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு விருது விழா ஒன்றுக்காக வந்து இருக்கிறார். அப்போது ராதிகாவை கார் பக்கத்திலேயே வெயிட் பண்ண சொல்லிவிட்டு ரூம் சாவியை வாங்குவதற்காக ஹோட்டல் உள்ளே சென்ற கோபி அங்கு தன்னுடைய நண்பன் ஒருவரை பார்க்கிறார்.

பாக்யாவின் சமையல் புகழ்
கோபியின் நண்பர் கோபியிடம் நலம் விசாரித்துவிட்டு பாக்யாவை குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபியின் முகம் மாறி விடுகிறது. ராதிகாவை கல்யாணம் பண்ணி இருக்கும் விஷயத்தை கோபி நண்பருக்கு கூறாமல் மழுப்பலாக பேசிக் கொண்டிருக்கிறார்.
கோபியின் நண்பரோ பாக்யாவின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார். பாக்கியா சமைத்து தந்த பிரியாணியின் சுவை இப்ப வரைக்கும் நாவில் ஒட்டிக்கொண்டு இருப்பதாகவும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவை அறிமுகப்படுத்தாமல் ராதிகாவை கூட்டி சென்று விட வேண்டும் என்று சாக்கு போக்கு சொல்லி வழி அனுப்பி வைத்துவிட்டு ரூமுக்குள் வந்து விடுகிறார்.

கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி
ராதிகா கோபியிடம் யாரது என கேட்க, அது தன்னுடைய நண்பன் மோகன் என கூறுகிறார். அதற்கு ராதிகா உங்கள் நண்பன் தானே அப்போ எதற்கு எனக்கு அறிமுகம் செய்து வைக்க வில்லை என ராதிகா கோபப்படுகிறார். ராதிகாவின் கோபத்தை பார்த்ததும் கோபி அவரை சமாளிக்க முயற்சிக்கிறார். நாளைக்கு அவார்டு ஃபங்ஷனுக்கு நானும் வருவேன் அப்போ அறிமுகம் பண்ணி வைங்க என ராதிகா சொல்லி முடிக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவார்டு ஃபங்ஷனுக்கு வருவதற்காக இந்த புடவை நன்றாக இருக்கிறதா? என்று ஒவ்வொரு புடவையாக எடுத்து கோபிக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கோபியை பிளாக் செய்த இனியா
அவார்டு ஃபங்ஷனுக்கு எப்படியாவது ராதிகாவே ரூமிலே விட்டுவிட்டு சென்று விட வேண்டும் என்று கோபி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு எப்போதெல்லாம் கோபி ராதிகாவிடம் ரொமான்ஸாக பேச நினைக்கிறாரோ அப்போதெல்லாம் மயூ போன் பண்ணி கொண்டே இருக்கிறார். ராதிகாவிற்கு ரூம்குள்ளே டவர் கிடைக்காததால் அடிக்கடி போன் கட் ஆகிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் பாக்யாவின் குடும்பமும் கொடைக்கானலுக்கு வந்திருக்கிறது. எல்லோரும் தங்களுடைய சோகத்தை மறந்து கொடைக்கானலுக்கு சந்தோஷமாக வந்திருக்கின்றனர். ராதிகா மயூவுக்கு ஃபோன் பேசிக் கொண்டிருக்கும் போது கோபி இனியாவுக்கு உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். அதை பார்த்த இனியா கோபியின் நம்பரை பிளாக் செய்கிறார். அனைவரும் ஒரே ஹோட்டலில் ரூம் போட்டு இருப்பதால் தவறுதலாக இனியா கோபியின் ரூம்பை திறக்க முயற்சி செய்கிறார். அப்போது எழில் அது நம்ம ரூம் இல்லை என தடுத்து நிறுத்துகிறார். பிறகு குடும்பத்தோடு அந்த ரூம் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். ராதிகா ரூமில் மாடியில் நின்றபடியே போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications