
பிறந்த நாளில் யாரும் யோசிக்காததை செய்த பாலாஜி முருகதாஸ்.. ரசிகர்களிடம் வைத்த வித்தியாசமான வேண்டுகோள்
சென்னை: நடிகர் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய பிறந்தநாளில் யாரும் எதிர்பார்க்காத விதமாக முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு சாப்பாடு கொடுத்து புது முயற்சியை தொடங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அதிக அளவில் ரசிகர்களை தன் வசப்படுத்திய பாலாஜி முருகதாஸ் தற்போது நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் மற்றும் நடிகராக எடுத்திருக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கணவர் கைவிட்டாலும், கர்ப்பமாக இருக்கும் நடிகை திவ்யாவிற்கு சீரியல் நடிகைகள் கொடுத்த சர்ப்ரைஸ்

பிக் பாஸில் பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்களை அதிக அளவில் பாப்புலர் ஆகிவிடுகிறது. அந்த வரிசையில் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகி அந்த நிகழ்ச்சியை பரபரப்பாகவே வைத்திருந்த பாலாஜி முருகதாஸ் இருந்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு மாடலிங் நபராக இருந்திருந்தாலும் அந்த அளவிற்கு பெரிய அளவில் பிரபலமாகாமல் தான் இருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேவரைட் ஹீரோவாக மாறிவிட்டார். எதற்கெடுத்தாலும் வீம்பு விதண்டாவாதம் பேசிக் கொண்டிருந்தாலும் அதுவும் ரசிகர்களின் மத்தியில் ரசிக்கப்படும் என்பதை இவர் காட்டிவிட்டார்.

அப்பவும் இப்பவும் மாற்றம்
பாலாஜி முருகதாஸின் ரசிகர்களின் ஆதரவினை பார்த்த பிக் பாஸ் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவரை கலந்து கொள்ள வைத்தது. கடைசியில் இவர்தான் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் இவருடைய பிறந்தநாள் வெகு விமர்சனமாக கொண்டாடப்படும், இந்த முறையும் அந்த விதத்தில் தான் தன்னுடைய நண்பர்கள் புடை சூழ இவர் கொண்டாடி மகிழ்ந்திருந்தார். பிறந்தநாள் அன்று இவரோடு பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானியும் அவருடைய குடும்பத்தோடு கலந்து கொண்டு இருந்தார். பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையில் காதல் என்ற தகவல்கள் பரவி வந்த நேரத்தில், ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பாலாஜி இடம் மட்டும் பேசாமல் அவர் மீது இருக்கும் கோவத்தை காட்டிவிட்டு வந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜியின் பிறந்தநாளில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து இருக்கிறார்.

முதியோர் இல்லத்தில் கொண்டாட்டம்
இந்த நிலையில் தற்போது பாலாஜி திரைப்படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நேரத்தில் இந்த பிறந்த நாளை நேற்று விமர்சனமாக கொண்டாடி இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று முதியோர்கள் இல்லத்தில் முதியோர்களுக்கு சாப்பாடு அளித்து மனம் குளிர வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு, அவர்களோடு சாப்பிட்டு இந்த நாளை மகிழ்ச்சியோடு கழித்திருக்கிறார் .அது மட்டும் அல்லாமல் இந்த முதியோர் இல்லத்தில் இவருடைய பெற்றோரையும், இவர்களுடைய பாலாஜியின் பூர்வ குடியினரையும் மனதார உணர்ந்ததாக இவர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு இருந்தார்.

ரசிகர்களிடம் வேண்டுகோள்
இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த ரசிகர்களிடம் இதுபோல முதியோர்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதை திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிகமாக பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது பாலாஜி செய்த செயல்களை பார்த்து காண்டான நெட்டிசன்கள் கூட இப்போது பாலாஜி செய்த செயலை பாராட்டி வருகிறார்கள் .அது மட்டும் இல்லாமல் முதல் முறையாக இவர் எடுத்திருக்கும் புது முயற்சியை பலரும் பின் தொடர இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.