Barathi Kannamma Serial: கேசரி வெட்டி... இப்படியும் கொண்டாடலாமா பிறந்த நாளை?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் பாரதிக்கு கிராமத்தில் பிறந்த நாள் கொண்டாடறாங்க. பாரதியின் ஆசை காதல் மனைவி கருப்பு கண்ணம்மா பிறந்த நாள் கொண்டாட்டத்தை வித்தியாசமா ஏற்பாடு செய்து பாரதியை அசத்திடறா.
கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி மச்சினிச்சி கலாட்டான்னு கொஞ்சம் ஓவராக நடந்துக்கறது முகம் சுளிக்கிற மாதிரி இருந்தாலும், அவள் உள்ளத்திலும் பாரதியை அடைய வேண்டும் என்கிற முகம் சுளிக்கும் படியான அருவெறுப்பான எண்ணம்தான் இருக்கு.
ஆனால், ஒவ்வொன்றுக்கும் மூக்கை உடைக்கும் மாதிரி காரியத்தை அஞ்சலிக்கு உடனுக்குடன் செய்துவிடுகிறான் பாரதி. ஆனால் ,நிறத்தில் ஓன்றுமில்லை என்பது போல அவன் கண்ணம்மா மீது வைத்திருக்கும் காதலுக்கு எல்லையே இல்லை என்பது மனதுக்கு இதமாக இருக்கிறது.

தலையில் வைக்க
பாரதி மாமா இங்கே வாங்கன்னு அழைச்சுட்டு போறா அஞ்சலி. கண்ணம்மா நீ இங்கேயே இருன்னு சொல்லிட்டு அஞ்சலி போக, பாரதி மாமா போயிட்டு வாங்க.. நான் அப்பா கூட இங்கேயே நிக்கிறேன்னு சொல்றா கண்ணம்மா. அங்கே போயி மல்லி பூ வாங்கிகிட்டு, மாமா இதுக்கு காசு குடுத்துட்டு எனக்கு தலையில வச்சு விடுங்கன்னு சொல்றா. பாரதி கடுப்பில் இருக்க, ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடியா இருக்கீங்க.பொண்டாட்டி ஆசையா கேட்கறா..வச்சு விடுங்க தம்பின்னு பூக்காரம்மா சொல்ல, பொண்டாட்டிக்குத்தானே வச்சு விடணும். கண்ணம்மா இங்கே வான்னு தலை நிறைய பூவை வச்சு,அஞ்சலியின் திட்டத்தை முறியடிக்கிறான்.

பிறந்த நாள் கொண்டாட்டம்
பாரதி மாமாவுக்கு பிறந்த நாள் என்று,கண்ணம்மா ஆசையுடன் நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ,புருஷன் பாரதியை எழுப்பி மொட்டை மாடிக்கு அழைச்சுட்டு வர்றா. அங்கே குழந்தைகள் பிறந்த நாள் வாழ்த்து கூறி, பட்டாசு வெடிக்கறாங்க. தீபம் ஏத்தி வைத்து வாழ்த்து சொல்றாங்க. இதில் மிகவும் மனம் உருகி கண்ணம்மாவை ஆசையா பார்க்கிறான் பாரதி.

பிறந்த நாள்
காலையில் அஞ்சலி தன் பங்குக்கு கேசரி செய்ய சொல்லி, அதை பாரதியை வெட்ட சொல்றா.எதுக்கு அஞ்சலி இதெல்லாம்னு பாரதி கேட்க,மாமா வெட்டுங்கன்னு சொல்றா. பாரதியும் கேசரியை வெட்டி, துண்டை எடுத்து கண்ணம்மாவுக்கு ஊட்டப் போக, அவன் கையை லபக்கென்று பிடிச்சுக்கறா அஞ்சலி. எல்லாரும் அதிர்ச்சியில் இருக்க, தட்டிப் பறிக்கறேன்னு நினைக்காத கண்ணம்மா. இது நான் செய்த கேசரி, முதல் வாயை எனக்குத்தான் மாமா ஊட்டணும்னு சொல்றா. கோவத்தில் பாரதியும் ஊட்டிவிடறான். மனைவிக்கு ஆசையா ஊட்டிவிட்டு, அவள் கையால் தானும் வாங்கிக்கறான்.

மருமகனும் மாமனாரும்
கிராமத்தில் திருவிழா என்றால், கடைசியில் கொஞ்சம் தண்ணி அடிச்சு நிறைவு செய்வாங்களாம்.இதை மாமனார் மருமகனிடம் சொல்ல, அதோடு மட்டும் நிற்காமல் சரக்கும் வாங்கி வச்சு இருக்கார். மாப்பிள்ளை உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையேன்னு கேட்க, குடிப்பேன் மாமா.. ஆனா கொஞ்சம்தான்னு சொல்றான் பாரதி. மாமனாரும், மருமகனும் சேர்ந்து உட்கார்ந்து தண்ணி அடிக்கறாங்க.
இது சரியா? கிராமத்தில் இப்படித்தான் நடக்குமா? இதைத் தவிர்த்து இருக்க கூடாதா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications