"அந்த சீரியலிலும் அந்த பிரச்சனை ” விஜே சித்ரா கடைசியாக கூறியதை பற்றி மனம் திறந்த சரண்யா துரோடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா மறைவுக்கு முன்பு தன்னிடம் பேசியதை பற்றி சின்னத்திரை நடிகையான சரண்யா துரோடி முதல் முறையாக மனம் விட்டு பேசியிருக்கிறார்.
விஜே சித்ரா மரணம் அடைந்து சமீபத்தில் அவருடைய இரண்டாவது நினைவு நாள் வந்துள்ளது. இந்த நிலையில் அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தன் தான் கடைசியாக நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலை பற்றி பேசியதை அவருடைய தோழியாக சரண்யா உருக்கமாக இருக்கிறார்.

எதிர்பார்க்காத திடீர் மரணம்
விஜே சித்ரா தொப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் பலருக்கும் தெரிந்தவர் தான். அவருடைய மரணம் யாரும் எதிர்பார்க்காத விதமாக பெரிய அதிர்ச்சியாக இருந்து வந்தது. இரவு வரைக்கும் அவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக போஸ்ட் போட்டுவிட்டு, திடீரென காலையில் அவருடைய இறப்பு செய்தி செய்தி சேனல்களில் வெளியானதும் ரசிகர்களும் நண்பர்களும் அதிகமாக அதிர்ச்சி அடைந்து விட்டனர். அந்த வகையில் ஒருவராக அவருடைய நெருங்கிய தோழியான சரண்யா துரோடியும் இருந்திருக்கிறார். இவர் ஒரு செய்தி வாசிப்பாளராகவும் சின்னத்திரை நடிகையாகவும் இருந்து வருகிறார். விஜே சித்ரா கடைசியாக சரண்யாவுடன் தான் வீடியோஸ் எடுத்து தன்னுடைய instagram பக்கங்களில் பதிவிட்டு இருந்தார்.

மடியில் படுத்து அழுகை
எப்போதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்த விஜே சித்ரா கடைசி போஸ்ட் மறைவதற்குள் அவருடைய மரண செய்தி வந்துவிட்டது. இது அனைவருக்கும் இப்ப வரைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செய்தியாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜே சித்ராவின் இறப்பு என்ன மாதிரி நடந்தது என்பதே பலருக்கும் இன்னும் தெரியாத நிலையில் அவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகி இருக்கின்ற நிலையில் அவருடைய நெருங்கிய தோழியான சரண்யா துரோடி முதல் முறையாக மனம் விட்டு பேசியிருக்கிறார். அதில் சித்ரா இறப்பதற்கு முந்தின நாள் நான் அவரோடு தான் விஜய் டிவி நிகழ்ச்சிக்காக ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது கஷ்டத்தோடு தான் சித்ரா இருந்தார். என்னுடைய மடியில் படுத்து அழுது கொண்டு இருந்தாள். மனது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தாள்.

காதல் சீன்கள்
உள்ளுக்குள் எவ்வளவோ வேதனைகளை வைத்துக் கொண்டிருந்தாலும் வெளியே சிரிக்கும் ஒரு கேரக்டராக தான் அனைவருக்கும் சித்ராவை தெரியும். சித்ரா எப்போது காதலிக்கும் செய்தியை வெளியே சொன்னேனோ அப்போதிலிருந்து எனக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அதிகமாக காதல் சீன்கள் வருகிறது. இதனாலே வீட்டில் பிரச்சனை வருகிறது என்று கூறி இருந்தாராம். அது மட்டும் அல்லாமல் தனக்கு திடீர் திருமணம் முடிந்து விட்டது என்பதை அன்று தான் சரண்யாவிடம் அவர் கூறியிருந்தாராம். அதனால் உனக்கு சரி இல்லை என்றால் நீ சீரியல் டீமில் பேசலாமே என்று சரண்யா அறிவுரை கூறினாராம். அதற்கு உனக்கு கூட இந்த நடிப்பு இல்லை என்றாலும் செய்தி வாசிக்க கிளம்பி போய்விடுவாய் ஆனால் நான் ரொம்பவே கஷ்டப்பட்டு இன்று இந்த முல்லை கேரக்டர் எனக்கு கிடைத்திருக்க அங்கீகாரம் இதை எப்படி விட்டு விட்டு போக முடியும்.

கூட நடித்தவர்களின் செயல்
நான் ஏதாவது கதையில் மாற்றம் செய்ய சொன்னால் என்னை இந்த கதையில் இருந்து தூக்கி விட கூடாது என்று ரொம்பவே பயந்து கூறினாராம். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் கூட நடிப்பவர்கள் ஒரு சிலர் உடன் இவருக்கு கருத்து வேறுபாடு இருந்ததாம். சில பேட்டியில் என்னை இப்படி எல்லாம் குறைத்து பேசி விட்டார்கள் நான் என்னதான் வேற சூட்டிங் சென்றிருந்தாலும் கரெக்டாக இங்கே சூட்டிற்கு வந்து விடுவேன் ஆனால் என்னை குறித்து சிலர் குறைவாக பேசி இருக்கிறார்கள் என்று ஃபீல் பண்ணி இருக்கிறாராம். ஆனால் அவர்கள் கூட விஜே சித்து இறந்த அன்று அவரைப் பற்றி ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு வேதனையாக தான் இருந்தது. அப்போது கூட எனக்கு அவளே என் கூட இருந்து பாரு எப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று சொல்லும் விதத்தில் தான் இருந்தது. அந்த அளவிற்கு அனைவரும் ஒன்றுமே நடக்காதது போல அவளைப் பற்றி எல்லாமே தெரிந்தது போல பேசினார்கள். விஜே சித்ரா இறந்த பிறகு நான் ரொம்பவே மனதளவில் அதிர்ச்சி ஆகிவிட்டேன். அதனால் தான் நான் அந்த நேரத்தில் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக இப்ப வரைக்கும் ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!











Click it and Unblock the Notifications