ஹேமா கொடுத்த குளூவால் கண்ணம்மா செய்த சிறப்பான செயல்.. வெண்பாவுக்கு ஆப்பு.. சூப்பரான முடிவு!
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவை தேடிக் கொண்டிருந்த குடும்பத்திற்கு ஹேமா லைவ் லொகேஷன் அனுப்பி குடும்பத்தினரை வரவழைத்து விட்டார்.
கண்ணம்மாவை பார்த்த ரவுடிகள் திக்கி திணறி போயிருக்கின்றனர். ஹேமாவின் அருகில் கண்ணம்மா வந்ததும் அவருக்கே தெரியாத ஸ்பரிசம் ஏற்பட்டிருக்கிறது.

லைவ் லொகேஷன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில், ஆரம்பத்தில் ஹேமா லாரியில் சென்று கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்த ஹிந்தி காரனுக்கு தெரியாமல் அவருடைய போனை எடுத்து பாரதிக்கு போன் போட முயற்சி செய்கிறார். பாரதியின் போன் சுவிட்ச் ஆஃப் என வருகிறது. அடுத்ததாக கண்ணம்மாவுக்கு போன் போட அவருடைய போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. மீண்டும் மீண்டும் கண்ணம்மாவுக்கு கால் ட்ரை பண்ணி கொண்டே இருக்கிறார். போன் போகாததால் கடைசியில் பாரதி ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வருகிறது. ஏதாவது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது ஒருவர் போன் எடுக்கவில்லை என்றால் அவருக்கு நம்முடைய லைவ் லொகேஷனை அனுப்பி விட்டால் அவர்கள் வந்து நம்மை காப்பாற்றி விடுவார்கள் என்று சொன்னதை நினைத்து கண்ணம்மாவிற்கு லைவ் லொகேஷனை அனுப்புகிறார்.

புரிந்து கொண்ட கண்ணம்மா
அதே நேரத்தில் ரோட்டில் ஹேமாவை தேடிக் கொண்டிருக்கும் கண்ணம்மாவை சமாதானம் செய்து சௌந்தர்யா வேறு இடத்திற்கு செல்வோம் என காரில் ஏறுகின்றனர். அப்போது கண்ணம்மாவிற்கு புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்கிறது என்பதை பார்த்து புரிந்து கொள்கின்றனர். இது ஹேமா தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று அதை தொடர்ந்து செல்ல முடிவெடுக்கின்றனர். காரில் லொகேஷன் சென்று கொண்டிருக்கும் பாதையில் வேக வேகமாக பின் தொடர்கின்றனர்.

பாரதியின் வேண்டுதல்
அதே நேரத்தில் டெல்லியில் இருக்கும் பாரதி கோவிலுக்கு சென்று ஹேமா,லட்சுமி என இரண்டு குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் என ரிசல்ட் வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறார். கோவிலில் ஒரு குழந்தையோடு பெற்றோர் விளையாடுவதை பார்த்து ஏக்கத்தோடு கண்ணீர் விடுகிறார். கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுத மன்னிப்பு கேட்டு அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று பாரதி கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

ஒரே இடத்தில் பாச போராட்டம்
அடுத்த பக்கத்தில் கண்ணம்மா லொகேஷனை பார்த்துக் கொண்டே இருக்க நாமே நெருங்கி விட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பார்டருக்கு லாரி வந்து விடுகிறது. ஹேமா உள்ளே தவித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு முறை போன் எடுத்து பேசுவோமா? என நினைக்க ஹிந்தி காரன் அசையும் போது ஹேமா பயந்தபடியே இருக்கிறார். அந்த இடத்திற்கு கண்ணம்மாவும் வந்து விடுகிறார் .ஒரே இடத்தில் தான் லைவ் லொகேஷன் காட்டுகிறது என்று அகிலன் சொன்னதும் அனைவரும் காரை விட்டு இறங்கி ஒவ்வொரு வண்டியாக செக் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .அப்போது ஹேமா இருக்கும் லாரியின் அருகில் கண்ணம்மா வந்து லாரியை தட்டிக் கொண்டு அழுகிறார். லாரியை தட்டியதும் ஹேமா பயந்தாலும் வெளியே யாரோ இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறார். கண்ணம்மா அந்த லாரியை விட்டு கிளம்ப முயற்சி செய்யும்போது அவருடைய புடவை லாரியில் சிக்கிக் கொள்கிறது. கண்ணம்மாவை பார்த்ததும் ரவுடிகள் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications