பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த சாதனை.. யாரும் எதிர்பார்க்காத பதிலோடு கொண்டாட்டம்..ரசிகர்கள் வருத்தம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றோடு ஆயிரம் எபிசோடுகளை தொட்டிருக்கிறது.
ஆயிரம் எபிசோடுகள் நிறைவடைந்த நேரத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அந்த சீரியலின் கதாநாயகன் எதிர்பார்க்காத பதிலை கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் எப்போது இந்த சீரியல் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் எங்களுக்கு முடிவே இல்லை என இவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

ஆயிரம் எபிசோடு கொண்டாட்டம்
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் இருந்து எப்போது முடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பி வந்தாலும் இந்த சீரியலின் டிஆர்பி யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்து வருகிறது. என்னதான் நட்ஸர்கள் இந்த சீரியலை கலாய்த்து கொண்டிருந்தாலும் ரசிகர்கள் வட்டம் போட்டு சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். அதனாலேயே இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் ஆயிரம் எபிசோட்களை நெருங்கி சாதனை படைத்திருக்கிறது. அதனை சீரியல் அணியினர் வெகு விமர்சனமாக கொண்டாடி மகிழ்ந்து இருக்கின்றனர்.

என்னது 2000 எபிசோடா
கண்ணம்மா தற்போது கிராமத்தில் இருப்பது போன்று சீரியலில் கதை இருப்பதால் அதே செட்டில் வைத்து பாரதி கண்ணம்மா சீரியலை ஆயிரம் எபிசோடு கொண்டாட்டத்தை கொண்டாடி இருக்கின்றனர். அதில் ஹேமா ஹேப்பி ஆயிரம் என்று கூற அங்கு சூட்டிங் பார்ப்பதற்காக வந்திருந்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியல் 2000 எபிசோடுகளுக்கு போகுமா? என கேட்க கதாநாயகன் பாரதி இனி நீ அடுத்ததாக கலெக்டருக்கு படி அப்போ கண்டிப்பாக 2000 எபிசோடு போய்விடும் என்று கூற அருகில் இருப்பவர்கள் அனைவரும் சிரிக்கின்றனர்.

முடிவில்லாமல் தொடரும் கதை
சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் ரசிகர்கள் ஆர்வத்தோடு இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பாரதியின் டிஎன்ஏ டெஸ்ட் பல வருடங்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் கண்ணமா நான் பாரதியோடு சேர்ந்து வாழ மாட்டேன் என்று தனியாக கிராமத்திற்கு வந்துவிட்டார். அவரை தொடர்ந்து பாரதியும் அவரை மனதை மாற்றி விட வேண்டும் என்பதற்காக கண்ணம்மாவின் சொந்த ஊருக்கு வந்து தற்போது அந்த ஊரில் மருத்துவமனை இல்லாததால் மருத்துவமனை வரும் வரைக்கும் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று இருந்து வருகிறார்.

இதுவும் சாதனைதான்
ஆரம்பத்தில் பாரதி அதிகமாக வெறுப்பில் லட்சுமி தற்போது பாரதிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இனி எப்போது கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக் கொள்வார் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய கொண்டாட்டத்தை பார்த்து பலரும் என்ன சீரியல் முடிவடைந்து விட்டதா? என்று கேள்வி கேட்க, அதுவெல்லாம் இல்லை நாங்க 1000 நாட்களை தான் தொட்டிருக்கிறோம் என்று இவர்கள் கூற அப்போ இதுக்கு முடிவே இல்லையா? என கேட்க எங்களுக்கு எண்டே கிடையாது என்று சொல்லும் விதமாக இவர்கள் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். தற்போது இந்த மகிழ்ச்சியான தகவலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications