Bharathiraja: பாரதிராஜா உடலை பார்த்து சிவகுமார் பேசிய வார்த்தை.. கண்கலங்க வைத்த காட்சி
சென்னை: தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய ஜாம்பவான்கள் ஒருவருக்கொருவர் காலத்தின் கரங்களில் கரைந்து செல்லும் நிலையில், அந்த பட்டியலில் இன்று இணைந்திருப்பது இயக்குநர் இமயம் பாரதிராஜா. இந்த செய்தி வெளியாகிய தருணத்திலிருந்து ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீரில் மூழ்கியுள்ளது.
கிராமத்து மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற கலைஞன், "என் இனிய தமிழ் மக்களே" என்று ரசிகர்களை பாசத்துடன் அழைத்த மனிதர், இன்று நம்மிடையே இல்லை என்ற உண்மையை ஏற்க முடியாமல் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் தவித்து வருகின்றனர்.

மகன் மனோஜ் மறைவு
பாரதிராஜாவை நெருக்கமாக அறிந்தவர்கள் சொல்வது ஒன்று தான். கடந்த ஆண்டு மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அவரை உள்ளுக்குள் முற்றிலும் நொறுக்கிவிட்டது. வெளியில் விழாக்களில் சிரித்த முகத்துடன் தோன்றினாலும், உள்ளுக்குள் அந்த வலி அவரை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. மகனின் இழப்பை தாங்க முடியாமல் மனதளவிலும், உடலளவிலும் பலவீனமடைந்த அவர், இறுதியில் காலத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
இறுதி வரை போராடிய குடும்பம்
நேற்று நள்ளிரவு முதல் பாரதிராஜாவின் உடல்நிலை மிகவும் மோசமானதாக மாறியதாக கூறப்படுகிறது. அதிகாலை வரை அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் போராடினர். மருத்துவர்கள் ஆலோசனையுடன் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த செய்தி வெளியாகியதும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலை பரவியது.
முதலமைச்சர் விஜய் முதல் பலர் வரை
நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீடு, முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு எதிரில் இருப்பதால், செய்தி அறிந்த உடனே விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சீமான், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் அங்கு வந்து பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

சிவகுமார் உருக்கம்
அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது நடிகர் சிவகுமாரின் வருகை. 84 வயதிலும் தனது மகன் சூர்யா மற்றும் மருமகள் ஜோதிகாவுடன் வந்த சிவகுமார், பாரதிராஜாவின் உடல் அருகே சில நிமிடங்கள் அமைதியாக நின்றார். பின்னர் அவருடன் பேசுவது போல ஏதோ சில வார்த்தைகளை உருக்கமாக கூறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பல தசாப்தங்களாக நீடித்த நட்பு, எண்ணற்ற நினைவுகள், சினிமா பயணங்கள் என அனைத்தும் அந்த சில நிமிடங்களில் அவரது கண்முன்னே ஓடியதாகவே தோன்றியது. அந்த காட்சிகளை பார்த்த பலரின் கண்களும் கலங்கின.
மாலை அணிவித்து வணங்கிய சூர்யா
தந்தையுடன் வந்த நடிகர் சூர்யா, பாரதிராஜாவின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கிய ஒரு கலைஞனுக்கு அமைதியாக தலைவணங்கிய சூர்யாவின் அந்த தருணமும் ரசிகர்களை நெகிழச் செய்தது. அஞ்சலி செலுத்திய பின்னர் ராதிகா சரத்குமார், சீமான் உள்ளிட்டோருடன் சில நிமிடங்கள் உரையாடிய அவர்கள், கனத்த மனதுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஒரு சகாப்தம்
'16 வயதினிலே', 'முதல் மரியாதை', 'கிழக்கே போகும் ரயில்', 'அலைகள் ஓய்வதில்லை', 'கருத்தம்மா' என காலத்தை வென்ற படைப்புகளை கொடுத்த பாரதிராஜா, வெறும் இயக்குநர் அல்ல.
தமிழ் சினிமாவை ஸ்டூடியோ சுவர்களில் இருந்து கிராமத்து மண் பாதைகளுக்கு அழைத்துச் சென்ற புரட்சியாளர். இன்று அவர் உடல் மண்ணோடு கலந்தாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், பாடல்களும், காட்சிகளும், "என் இனிய தமிழ் மக்களே" என்ற அவரது குரலும் தமிழ் மக்களின் இதயங்களில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
-
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"பாரதிராஜா இல்லையென்றால் நாங்களே இல்லை!" குடும்பத்திற்குள் பிரச்சனை.. கங்கை அமரன் வருத்தம் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
Ilaiyaraaja: நண்பன் பாரதிராஜாவின் அசைவற்ற உடல்.. வித்தியாசமாக பேசிய இளையராஜா -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம்














Click it and Unblock the Notifications