திருமண மேடையில் கூட பவதாரிணி அப்பாவிடம் கேட்ட பாடல்.. ஆனால்! இளையராஜா சொன்ன மாதிரியே ஆயிடுச்சு
சென்னை: பிரபல பாடகியாக இருந்த பவதாரிணியின் மறைவு அவருடைய ரசிகர்களையும் குடும்பத்தினரையும் அதிகமாக சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த நிலையில் பவதாரிணி குறித்து பல நினைவுகளை அவருடைய உறவினர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பவதாரிணியின் கணவரின் அண்ணன் பவதாரிணி குறித்த சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பவதாரிணியின் திருமண நாள் அன்று திருமண மேடையில் வைத்து பவதாரிணி இளையராஜாவிடம் தனக்காக ஒரு பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்ததாகவும் ஆனால் பவதாரிணி அடம்பிடித்து இளையராஜாவை அந்த பாடலை பாட வைத்ததாகவும் கடைசியில் இளையராஜா சொன்னது போலவே நடந்து விட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் சினிமா துறையில் இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்த மரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதத்தில் தான் நடிகர் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த திரை உலகத்தையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீண்டு வராத நிலைகளிலேயே அடுத்ததாக பிரபல பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் மரணம் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பவதாரிணி குறித்த நினைவுகளை அவருடைய உறவினர்களும் நண்பர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பவதாரிணி குறித்து அவருடைய கணவரின் அண்ணன் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பேசி இருக்கிறார். அதில் பவதாரிணி இளையராஜா வீட்டுக்கு மட்டுமல்லாமல் எங்க வீட்டிலும் செல்ல பொண்ணு தான். அந்த பொண்ணு அதிர்ந்து கூட பேசாது. ரொம்பவே அமைதியாக இருக்கும். நாங்கள் அந்த பொண்ணு கோபப்பட்டு பேசி பார்த்தது கிடையாது.

ரொம்பவே அமைதியான பொண்ணு, என்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடமும் அந்த பொண்ணு ரொம்பவும் பாசமாக பேசிக் கொண்டிருக்கும். ஆனால் அவருடைய திருமண நாளில் நடந்த நிகழ்வு மட்டும் எங்களால் மறக்கவே முடியாது. ஏன்னா திருமண மேடையில் பவதாரிணி இருக்கும்போது அவருடைய அப்பாவான இளையராஜாவிடம் எனக்காக "ஜெகம் நீ ஜனனி"என்ற பாடலை பாடுங்கள் என்று பவதாரிணி கேட்டார்.
ஆனால் அதற்கு இளையராஜா பாட மறுத்துவிட்டார். நான் இந்த பாடலை பாடினா, நீ அழுதுடுவேன்னு சொன்னார். ஆனால் பவதாரிணி கேட்காமல் அடம்பிடித்தார். பிறகு இளையராஜா மேடைக்கு வந்தெல்லாம் என்னால் பாட முடியாது என்று சொல்லி கீழே அவர் இருந்த இடத்திலேயே இருந்து மைக்கை வாங்கி "ஜனனி ஜகம் நீ" என்ற பாடலை பாடினார். ஆனால் கடைசியில் அவர் சொன்னது போலவே பவதாரணி அழுதுவிட்டார்.

அப்போது செல்லமாக இளையராஜா கோபித்துக் கொண்டார். இதற்காக தான் நான் உன்னை இந்த சந்தோஷமான நேரத்தில் அழக்கூடாது என்பதற்காக சொன்னேன் என்று அவர் தன்னுடைய மகளை தேற்றிக் கொண்டிருந்தார். அந்த நினைவுகள் எங்களுக்கு இப்போதும் மறக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications