மாயா பக்கம் திரும்பிய விக்ரம் பற்றி பெற்றோரிடம் கூல் சுரேஷ் கேட்ட கேள்வி.. ஆனால் கடைசியில் இப்படி பேசிட்டாரே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டு எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். அப்போது கூல் சுரேஷ் ஒரு போட்டியாளராக மீண்டும் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

கூல் சுரேஷ் மீண்டும் பிக் பாஸுக்கு வந்ததும் விக்ரமுடைய பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய கருத்துக்களை அவர்களிடம் எடுத்து சொல்லி இருக்கிறார்.

கேமரா முன்னாடி விக்ரமுடைய பெற்றோரிடம் விக்ரம் பற்றி பல ரகசியங்களையும் கூல் சுரேஷ் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீய் டாஸ்கில் கலந்து கொண்ட விக்ரமுடைய பெற்றோர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். அதாவது கமல்ஹாசன் போல நாங்க இல்லை என்று கூட மாயாவிடம் வெளிப்படையாக பேசியிருந்தனர்.

bigg boss 7 Cool Suresh has apologized to Vikrams parents after coming back to Bigg Boss

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் உள்ளே சண்டை சச்சரவுகளும் வன்மமும் கொஞ்சம் கூட குறைந்த மாதிரி இல்லை என்பதுதான் பலருடைய வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது விஷ்ணு அவரிடம் ஃபிரீஸ் டாஸ்க்கில் இந்த வீட்டிற்குள் வந்திருந்த விக்ரமுடைய அப்பா உன்னையும் என்னையும் தேடுனாரு டா... நாம விக்ரமை பாடாய் படுத்தினமாம் என்று அவரு சொன்னாரு என்று போட்டுக் கொடுக்க, உடனே கூல் சுரேஷ் கேமரா முன்னாடி விக்ரம் உடைய அப்பா அம்மா நீங்க அவனுக்கு மட்டும் அப்பா அம்மா இல்ல எங்களுக்கும் அப்பா அம்மா தான்.

நீங்க நாங்க விக்ரமை கொடுமைப்படுத்தினம்னு சொல்லி இருக்கீங்க அது எப்படி கொடுமை படுத்தனும்னு எங்களுக்கே தெரியல நாங்க ஏதாவது விக்ரமுக்கு சாப்பாடு கொடுக்க மாட்டோம்னு சொன்னோமா? இல்ல அவனை அதிகமா வேலை செய்ய சொன்னோமா? அவனுக்கு ஓரவஞ்சனையா நாங்க ஏதாவது இடத்தில நடந்து விட்டோமா? என்ன பண்ணனும்னு தெரியல.

ஆனா நாங்க அப்படி கொடுமைப்படுத்தனும்னு நீங்க சொல்லி இருக்கீங்க, அதை எங்களால் ஏத்துக்க முடியல. ஆனாலும் உங்க மனசு புண்படுற மாதிரி நாங்க ஏதாவது நடந்து கொண்டிருந்தா எங்களை மன்னிச்சிடுங்க என்று கூல் சுரேஷ் பேசி இருந்தார்.. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கில் உள்ளே வந்த விக்ரமுடைய அப்பா மாயாவிடம் நீ சொல்லுறதை கமல் சார் வேணும்னா நம்புவாரு நாங்க நிகழ்ச்சியை பார்த்துட்டு வந்து இருக்கோம் அதனால நாங்க நம்ப மாட்டோம் என்று முகத்தடி கொடுத்தது இருந்தார்.

அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது அதைத் தொடர்ந்து இப்போது விக்ரம் அப்பாவிடம் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்ட விஷயமும் பெரியதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் விக்ரம் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் மாயா கூட்டணியோடு இருந்தார். ஆனால் அவர் வெளியே சென்ற பிறகும் அந்த நிகழ்ச்சியை முழுக்க பார்த்துவிட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து மாயா செய்வது தான் சரி அர்ச்சனா நடித்துக் கொண்டிருக்கிறார் என்று நேற்று பேசிய விதத்தை வைத்து அதிகமான நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

அதிலும் பல ரசிகர்களுக்கு விக்ரம் உண்மைகள் சோத்தில் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறாரா? என்று கூட சந்தேகம் வந்திருக்கிறது. ஏனென்றால் மாயா விக்ரம் வெளியே போகும்போது அந்த அளவு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தார். அது இணையத்தில் அவ்வளவு ட்ரெண்டானது ஆனால் அதையெல்லாம் பார்த்த பிறகும் நேற்று மாயாவை கட்டிபிடித்து விக்ரம் தன்னுடைய பாச மழைகளை பொழிந்தது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+