‘டீக்கடையில் மோதல்’ பிக் பாஸ் தர்ஷன் மீது புகார்.. கார் பார்க்கிங்கால் பிரச்சனை.. கண்கலங்க பேட்டி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தர்ஷன் தன்னுடைய வீட்டு முன்பு பார்க்கிங் செய்யப்பட்ட கார் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் தர்ஷன் தரப்பினரும் அந்த கார் உரிமையாளரான நீதிபதியின் மகன் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் தற்போது திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் முகப்போர் பகுதியில் டீ பாய் என்ற டீக்கடை பக்கத்தில் குடியிருப்பதாக தெரிகிறது. அப்போது டீ கடைக்கு டீ குடிக்க வந்த மற்றொரு தரப்பினர் பிக் பாஸ் தர்ஷன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கைகலப்பு
இதனால் தர்ஷனால் தன்னுடைய வீட்டிற்குள் போக முடியவில்லை என்று வாக்குவாதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் தர்ஷனை சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல தர்ஷன் தாக்கியதாகவும் எதிர் தரப்பினர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
தர்ஷன் மீது புகார்
இதில் தாக்கப்பட்டவர் நீதிபதியின் மகன் என்று தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கான மகேஸ்வரி மற்றும் நீதிபதியின் மகன் ஆதிசுடி இருவரும் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீதும் அவருடைய உறவினர்கள் மீதும் புகார் கொடுத்து இருக்கிறார்கள். புகாரை தொடர்ந்து தர்ஷனிடம் ஜே ஜே நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை
அதேபோல் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தர்ஷன் தாக்கியதாக ஆதிசூடி மற்றும் நீதிபதி மகேஸ்வரி ஆகிய இருவரும் அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தர்ஷன் பேட்டி
இது குறித்து தர்ஷன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தான் வழக்கம் போல நேற்று மாலை ஜிம்முக்கு போயிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய வீட்டு வாசலில் ஒரு கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. 20 நிமிடமாக நான் வீட்டிற்குள் போக முடியாமல் வெளியேவே வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன்.
பார்க்கிங் பிரச்சனை
பக்கத்தில் இருந்த ஒவ்வொரு கடையிலும் இது யாருடைய கார் என்று கேட்டேன் அப்போது யாரும் இல்லை என்று சொன்னதும் வீட்டிற்கு யாரும் உறவினர்கள் வந்திருக்கிறார்களா என்று அவர்களுக்கு கால் பண்ணி பார்த்தேன் யாரும் வரவில்லை என்று சொன்னதும் என்னுடைய தம்பியிடம் கார் வெளியே நிற்கிறது யார் என்று பார் என்று சொன்னேன் அவர் வந்து பக்கத்தில் இருந்த கடையில் விசாரிக்கும் போது ஒரு டீக்கடையில் இருந்த ஒரு குடும்பத்தினர் இது எங்களுடைய கார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

வாக்குவாதம்
அப்போது அவர்களிடம் காரை எடுக்க சொன்னதற்கு அவர்கள் நீ பிக் பாஸ் போன பெரிய ஆளா ஏன் உன்னால் கொஞ்ச நேரம் கூட வெயிட் பண்ண முடியாதா என்று என்னை கேட்டார்கள். அதோடு என்னை அசிங்கமாக திட்டியதுடன் என் தம்பி மீது சூடான டீயை முகத்திலேயே ஊற்றி விட்டார்கள். இது பற்றி நான் கேட்டதற்கு நான் ஜட்ஜ் பையன் டா உன்னால என்ன பண்ண முடியும் என்று கேட்டு என் தம்பியை அடித்து அவனை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்து அவரை தாக்க முயற்சித்தார்கள்.
காயம்
அப்போது அவருடைய மனைவி மாமியார் சேர்ந்து எங்களை தாக்கினர். அதில் என்னுடைய முகம் கழுத்து கைப்பகுதியில் காயம் பட்டிருக்கிறது. இது குறித்து நாங்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறோம் என்றதும் என்னுடைய அக்காவை கூப்பிட்டு அசிங்கமாக பேசினார்கள். அதற்குப் பிறகு அவர்களும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்கள். நான் இது பற்றி புகார் அளிக்க அவசர உதவி எண் 100க்கு போன் செய்தேன் ஆனால் மூன்று முறை போன் செய்தும் போனை யாரும் எடுக்கவில்லை.
மருத்துவமனையில் அட்மிட்
பிறகு போலீஸ் வந்து அவர்கள் விசாரித்து விட்டு போன பிறகும் கூட எதிர் தரப்பினர் இங்கே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மூன்று மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டு நாங்கள் அடித்துவிட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது கதறி அழுதிருக்கிறார்.

குற்றசாட்டு
அதுபோல இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நீதிபதியின் மகனும் அவருடைய அம்மாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். அப்போது அவர்கள் பேசும்போது தர்ஷன் தரப்பினர் தங்களை ஆபாசமாக திட்டியதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை அடித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications