பிரம்மாண்டமாக நடந்த பிக் பாஸ் ஜூலியின் கல்யாணம்.. தாலியை கவனிச்சீங்களா? குவியும் வாழ்த்து
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் தமிழகமெங்கும் பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்ட காலத்தில் "வீர தமிழச்சி" என்ற அடையாளத்துடன் சோசியல் மீடியாவில் பேசப்பட்ட ஜூலி, தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவர் காதலித்த முகமது ஐக்ரீமுடன் நேற்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். அறிவித்தபடியே ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணம், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.
அதனைத் தொடர்ந்து மாலையே சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பரங்கி மலையில் உள்ள பேட்ரிக் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த வரவேற்பில், பூச்சி முருகன் உள்ளிட்ட திரைத்துறை மற்றும் அரசியல் சார்ந்த பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவ முறைப்படி ஜூலி திருமணம் நடைபெற்றாலும், அவருடைய தாலியில் சில இடங்களில் மஞ்சக் கயிறு போல கட்டப்பட்டிருக்கிறது. பொதுவாக கிறிஸ்தவ ஆலயங்களில் மோதிரம் மாற்றிக் கொள்வார்கள், சில இடங்களில் தங்கத்தில் தாலி போடுவார்கள். ஆனால் ஜுலியின் தாலியில் மஞ்சள் கயிறு போல கட்டப்பட்டு இருந்தது பலருடைய கவனத்தையும் பெற்றிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் பிக்பாஸ் வரை
அடிப்படையில் செவிலியராக பணியாற்றிய ஜூலி, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரமாக கலந்துகொண்டு ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து முழக்கங்கள் எழுப்பியதன் மூலம் கவனத்தை ஈர்த்தார். அந்த போராட்ட காலத்தில் அவருக்கு கிடைத்த பிரபலமே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் வீட்டில் ஜூலி மட்டுமே திரைத்துறையில் இல்லாத போட்டியாளராக இருந்தார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சினிமா மற்றும் டிவி பிரபலங்களாக இருந்தபோதும், எந்த தயக்கமும் இன்றி தன்னம்பிக்கையுடன் விளையாடினார்.
ஆரம்பத்தில் ரசிகர்களிடையே நல்ல ஆதரவை பெற்றாலும், ஓவியாவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் சில சர்ச்சைக்குரிய செயல்கள் காரணமாக அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்தன. ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் கூட குறும்படம் மூலம் கண்டிக்கும் அளவுக்கு சூழ்நிலை சென்றது. அதன் பின்னர் சில வாரங்களில் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வாழ்க்கை பயணம்
பிக்பாஸ் முடிந்த பிறகு ஜூலி சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவில் நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பின் சின்னத்திரையில் கவனம் செலுத்தி, 'குக் வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில்தான் முகமது ஐக்ரீமுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி, இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமாக உருவெடுத்தது.
நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, திருமண அழைப்பிதழ்களை ஜூலி மற்றும் ஐக்ரீம் நேரில் சென்று பல முக்கிய பிரபலங்களுக்கு வழங்கியது கவனத்தை ஈர்த்தது. கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, சிம்பு உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர்.

புதிய அத்தியாயம்
சர்ச்சைகள், விமர்சனங்கள், ஏற்றத்தாழ்வுகள் என பல அனுபவங்களை கடந்த ஜூலி, தற்போது திருமண வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை எடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறிமுகமாகி, பிக்பாஸ் மூலம் உச்ச புகழையும் விமர்சனங்களையும் சந்தித்த ஜூலியின் வாழ்க்கைப் பயணம் எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
தற்போது கணவர் முகமது ஐக்ரீமுடன் இணைந்து அமைதியான, நிலையான வாழ்க்கையை தொடங்கியுள்ள ஜூலிக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications