பிக் பாஸ் 8ல் பழைய போட்டியாளர்களுக்கும் அழைப்பு.. ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கு.. செம பிளான்
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஆறாம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் வித்தியாசமாக இந்த முறை நிகழ்ச்சியில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பழைய போட்டியாளர்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருக்கிறதாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி புதிய வார்த்தைகளோடு தான் தொடங்க போகிறது. அதாவது "ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என்று விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இதற்கு முன்பு கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது "ஆரம்பிக்கலாமா" என்று கேள்விகள் எழுப்புவார். ஆனால் இப்பொழுது விஜய் சேதுபதி புதிய டயலாக் யூஸ் பண்ணுகிறார்.

அதே நேரத்தில் இந்த சீசனில் பல புதிய டாஸ்க்களும் தொடங்க இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதாவது இதுவரைக்கும் முதல் சீசனிலிருந்து கடந்த சீசன் வரை பிக் பாஸில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்கள் ஒருபுறமும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் ஒருபுறமும் இருக்க அந்த ரசிகர்கள் போட்டியாளர்களிடம் தங்களுடைய சந்தேகங்களை எல்லாம் கேட்கும் வகையில் ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறதாம்.
கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி களம் இறங்கி இருக்கும் நிலையில் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காக புதியதாக இந்த பிளான் போட்டு இருக்கிறார்கள். முதல் சீசன்ல இருந்து பல போட்டியாளர்கள் மீது ரசிகர்களுக்கு தங்களுக்கு இருக்கும் கோபங்கள் மற்றும் மகிழ்ச்சிகளை இந்த வாய்ப்பை பயன்படுத்தி கேட்டுக்கொள்ளலாம். இதுவும் பெரிய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நாள் அன்று ஒவ்வொரு போட்டியாளராக கமல்ஹாசன் அழைத்து அறிமுகப்படுத்துவார். அப்போது அவர்களுடைய குடும்பத்தினர்களும் போட்டியாளர்களும் நாங்கள் உங்களுடைய பெரிய ஃபேன்... எங்க வீட்டில் தாத்தாவுக்கு உங்களை தான் பிடிக்கும், பாட்டிக்கும் உங்களை தான் பிடிக்கும் என்று ஒரு நீண்ட வசனத்தை பேசிக் கொண்டிருப்பார்கள்.
அதற்கெல்லாம் கமல்ஹாசன் அப்படியா இது உண்மையா என்று சொல்வது போல சிரித்துக் கொண்டே இருப்பார். அது போன்ற காட்சிகள் இந்த சீசனில் இருக்காதா? அதற்காகத்தான் இந்த மாற்று ஏற்பாடா? என்ற கேள்விகளும் வருகிறது.
அப்படி பார்க்கையில் கடந்த சீசனில் ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியே போன பிரதீப் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்று கேள்விகளும் எழுகிறது. ஏற்கனவே சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் தான் கல்லூரி படிக்கும்போது பஸ்ஸுக்குள் செய்த செயலை பேசியது தவறு என்று அவரை வெளியே அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் கடந்த சீசனில் தான் நடிக்கும் சீரியல் ப்ரோமோஷன்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அதுபோல இந்த முறை விஜய் டிவியின் ப்ரோமோஷன்காக பிரதீப்பை பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களா? இல்லையா? என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications