"என் வாழ்க்கை எந்தன் கையில்” பிரியங்கா எடுத்த புதிய அவதாரம்.. திடீர் முடிவு காரணம் அதுதானா?
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா தற்போது வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
தொகுப்பாளராகவே பரிச்சயமான பிரியங்கா தற்போது தனக்குள் இருக்கும் இன்னொரு திறமையை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். இவருடைய இந்த புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கலாய்ப்பை கண்டு கொள்வதில்லை
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக பல வருடங்களாகவே இருந்து வரும் பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே தொகுப்பாளர்கள் யார் என்று கேட்டாலே உடனே டக்கென்று நினைவிற்கு வரும் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பொதுவாக போட்டியாளர்களை தான் அனைவரும் கலாய்ப்பார்கள். ஆனால் அதிகமாக கலாய்ப்பு பெற்று இருக்கும் ஒரு தொகுப்பாளராக பிரியங்கா இருந்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இவரை தொகுப்பாளர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் கூட கலாய்த்து வருவார்கள் ஆனால் அதை எல்லாம் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளாத பிரியங்கா ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறார்.

அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொள்கிறார் என்று சொன்னதுமே அவருடைய ரசிகர்கள் வேண்டாம் என்று அன்பு கட்டளைகள் இட்டு வந்தனர். ஆனால் அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் பாராட்டும் ஒரு போட்டியாளராக கடைசி நாள் வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்து வந்தார். மூன்றாவது இடத்தில் இவர் வெற்றி பெற்றாலும் இந்த நிகழ்ச்சியில் நெகட்டிவ் கருத்துக்களை அதிகமாக வராமல் பார்த்துக் கொண்டார் .அடிக்கடி இவருக்கும் தாமரை செல்விக்கும் தான் பிரச்சனை முட்டி மோதிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இமான் அண்ணாச்சியுடன் பிரச்சினை ஏற்பட்டாலும் அடுத்த நிமிடமே சென்று இவர்கள் பேசி சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது விஜய் டிவியில் தன்னை தொகுப்பாளரில் இருந்து தூக்கி விட வேண்டாம் என்று அடிக்கடி கூறி வந்தார். தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் கூட தனக்கு பதிலாக புதியதாக யாரையும் போட்டு விடுவார்களோ. எந்த ஒரு பயத்தில் தான் இருந்து வந்தார். ஆனால் அவர் பயந்தது போல எதுவும் நடைபெறாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் மீண்டும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார்.

பாடலுக்கு கிடைக்கும் பாராட்டு
இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனக்கு பல்வேறு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும், தன்னுடைய ரசிகர்கள் அதிகமாக மாறி இருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். பலர் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறி இருந்தனர். ஆனால் அதுவெல்லாம் சரியல்ல என்பதை நான் நிரூபித்து விட்டேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஒரு புது முயற்சி எடுத்திருக்கிறார். ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஒன் மினிட் மியூசிக் வீடியோ என்று, அதில் தன்னுடைய சொந்த குரலில் பாடலை பாடி இருக்கிறார். இந்த வீடியோஸ் அதிகமாக லைக்குகளை பெற்று ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதை குறித்து சந்தோஷமாக ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications