ஆயிஷாவின் ரகசியங்களை வெளிப்படுத்திய விஷ்ணு.. கமல் முன்னிலையில் அப்படி பேசுவதற்கு இதுதான் காரணமாம்!!
சென்னை: பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஆயிஷாவை பற்றி அவருடைய முன்னாள் காதலன் கூறிய தகவல்களுக்கு சின்னத்திரை நடிகர் ஆன விஷ்ணு பதில் கூறியிருக்கிறார்.
நடிகர் விஷ்ணுவுக்கு ஆயிஷாவுக்கும் காதல் அதனால் தான் என்னை பிரிந்து விட்டார் என்று ஆயிஷாவின் முன்னாள் காதலர் கூறிய குற்றச்சாட்டுக்கு விஷ்ணு அளித்த பதில் பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது.

இது சரி இல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஆயிஷா இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலின் மூலமாக பலருக்கும் பரிட்சயமானவர். இவரை குறித்து தற்போது இவருடைய முன்னாள் காதலன் சமூக வலைதளத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதைப்பற்றி சீரியல் நடிகரான விஷ்ணு முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு பெண் அதுவும் முக்கியமான ரியாலிட்டி ஷோவில் இருக்கும் ஒருவரை பற்றி அவர் இல்லாத நேரத்தில் மீடியாக்களில் பேட்டி கொடுத்து தவறான தகவல்களை பரப்பி வருவது சரியல்ல என்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

விளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை
ஆயிஷா அவருடைய சொந்த வாழ்க்கையில் எடுத்த முடிவுகளுக்கு அவர்தான் பொறுப்பு .ஆனால் அவர் ஒரு பொருளை பிடித்து போய் எடுக்கையில் எடுத்துவிட்டு, பின்பு அது பிடிக்கவில்லை என்று கீழே வைத்து விட்டால் அது அவருடைய தனிப்பட்ட முடிவு அதைக் குறித்து இப்படி சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருப்பது தவறான செயல் என்று விஷ்ணு கூறியிருக்கிறார் .அது மட்டுமல்லாமல் ஆயிஷா ஒரு ஷாட் டெம்பர் டக் என்று அவருக்கு கோபம் வந்துவிடும். இன்னும் அவருடைய சரியான விளையாட்டை பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அப்படி நடந்து இருந்தால் சந்தோஷம்தான்
பிக்பாஸில் கதை சொல்லும் டாஸ்க்கில் கூட அவர் தன்னுடைய கடந்த கால கதையை சொல்வதற்கு மனம் இல்லாமல் தான் விட்டுவிட்டார். ஆனால் அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருவது தேவையில்லாத செயல் என்று எனக்கு தோன்றுகிறது என்றும் கூறியிருக்கிறார். அதுபோல இப்படிப்பட்ட ஒரு நபரிடம் இருந்து என்னால் ஆயிஷா வந்து விட்டார் என்று அந்த நபர் சொல்லி இருப்பது போல நடந்து இருந்தால் சந்தோஷம்தான். இப்படிப்பட்ட ஒரு நபருடன் ஆயிஷா இருந்து வந்து விட்டதே பெருசு தான் என்றும் கூறியிருக்கிறார்.

நடவடிக்கை மாறுமா என்று பார்ப்போம்
கமல் முன்னிலையில் மரியாதை குறைவாக ஆயிஷா பேசிவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனக்கும் பார்க்கும்போது அப்படித்தான் தெரிந்தது. ஆனால் இதுதான் ஆயிஷாவின் குணம் தன்னுடைய மனதில் தோன்றுவதை அப்படியே டக்கென்று பேசிவிடுவார். ஆனால் இது தப்பு என்பதை இந்த வாரம் உணர்ந்து இருப்பார். இந்த வாரம் கமல் முன்பு அவர் காலில் விழவும் தயாராக இருப்பாள். பிக் பாஸ் வீட்டிற்குள் அனைவரும் சேர்ந்து அந்த நேரத்தில் டார்கெட் செய்ததால் அவளுடைய கோபத்தின் வெளிப்பாடு அப்படி இருந்து விட்டது என்று விஷ்ணு கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் இந்த வாரம் ஆயிஷா என்ன மாதிரி கமல் முன்னிலையில் நடந்து கொள்கிறார் என்று, என ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications