ஆண் நண்பருடன் ஜாக்குலின் போட்ட போஸ்ட்.. பிக் பாஸ் முத்துக்குமரன் கொடுத்த எதிர்பாராத கமெண்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் பிரபலமான ஜாக்லின் காதலர் தினம் அன்று தன்னுடைய ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வான முத்துக்குமரன் ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் பதில் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகமான ஜாக்குலின் அந்த நிகழ்ச்சியில் ரக்ஷன் உடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் ஜாக்குலினுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கிவிட்டது. விஜய் டிவியில் அதிகமான நிகழ்ச்சிகளை அதற்கு பிறகு தொகுத்து வழங்க தொடங்கினார்.

அதுபோல விஜய் டிவியில் சீரியல் கதாநாயகியாகவும் மாறிவிட்டார். அதிலும் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் கடைசி வரைக்கும் ஜாக்குலின் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் படமே நடிகை நயன்தாராவுடன் தான். இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்த ஜாக்குலினுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதுபோல விஜய் டிவியில் வேறு எந்த நிகழ்ச்சிகளும் சில வருடங்களாக தொகுத்து வழங்காமல் இருந்தார். அந்த நேரத்தில் தான் பிக் பாஸ் தமிழ் 8வது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து கடைசி வாரம் வரைக்கும் இருந்தார்.
நிகழ்ச்சி முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மிட் நைட் எவிக்ஷன் செய்து வெளியேற்றப்பட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய நிஜ கேரக்டரை மக்களிடம் காட்ட வேண்டும். தான் யார் என்பதை புரிய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். ஜாக்குலினுக்கு அவர் நினைத்தபடியே எல்லாம் நடந்தது.

பிக்பாஸ் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் அதிகமான மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் எந்த போட்டியாளரும் செய்யாத சாதனையை ஜாக்குலின் செய்திருந்தார். அதாவது நிகழ்ச்சி 15 வாரம் நடைபெற்ற நிலையில் 15 வாரமும் ஜாக்குலின் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தார். அவரை மக்கள் 15 வாரமும் சேவ் செய்து வந்தனர்.
ஆனால் கடைசியில் அவர் பணப்பெட்டி டாஸ்க்கில் தான் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தான் இணையத்தில் அதிகமான கமெண்ட்கள் பெற்று வருகிறது.
அதாவது யுவராஜ் செல்வநம்பி என்பவரை தான் ஜாக்குலின் காதலிக்கிறாராம். காதலர் தினத்துக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "நீ தானே என் பொன்வசந்தம்" என்கிற பாடலுடன் யுவராஜை ஜாக்குலின் டேக் செய்து இன்ஸ்டா ஸ்டோரி வைத்திருக்கிறார். அதுபோல
அவருடன் எடுத்த புகைப்படத்தையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்குலின் பகிர்ந்து இருக்கிறார்.
நீ லெஸ்பியனா? தனக்கு வந்த கமெண்ட் குறித்து ஜாக்குலின் கொடுத்த பதிலடி.. பாராட்டும் ரசிகர்கள்
அதற்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முத்துக்குமாரன், "இன்று போல் என்றுமே இன்புற்று வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதற்கு ஜாக்குலின் ஹார்டின் இமோஜி போட்டு பதில் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் பலரும் ஜாக்குலினுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல ஜாக்குலினின் காதலன் அவரை கொத்தமல்லி என்று தான் அழைப்பார் என்று பேட்டிகளில் ஜாக்குலின் பேசி இருக்கிறார். இதனால் கமெண்ட்களில் கூட ரசிகர்கள் ஜாக்குலினை கொத்தமல்லிஸ் என்று அழைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications