பிக் பாஸ் 8: நேற்று விஜய் சேதுபதி சொன்னதை கவனிச்சீங்களா? அப்போ இவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னராக வாய்ப்பு இருக்கிறது என்று நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

இதுவரைக்கும் இல்லாத வகையில் தற்போதைய 8வது சீசனில் தான் யார் இந்த சீசன் டைட்டில் வின்னராக வாய்ப்பு இருக்கிறது என்று யூசிக்க முடியாத வகையில் தான் போட்டி போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் அறிமுகமானவர்கள். அதற்கு பிறகு 6 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் களம் இறக்கப்பட்டனர்.

bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் இப்போது 13 போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள். இதில் யார் டைட்டில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மட்டுமல்ல உள்ளிருக்கும் போட்டியாளர்களும் இருக்கின்றனர். அதே நேரத்தில் நேற்று விஜய் சேதுபதி உள்ளிருக்கும் போட்டியாளவர்கள் எல்லோரையும் தனித்தனியாக கூப்பிட்டு அவர்களிடம் பேசி இருந்தார். அதோடு வெளியே என்ன நிலவரம் இருக்கிறது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி சில அறிவுரைகளையும் கொடுத்திருந்தார்.

அதன்படி உள்ளே முதல் ஆளாக பேசிய ஜெஃரியிடம் நீ உன்னை நன்றாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். இது போலவே விளையாட்டை தொடர்ந்து விளையாடு நீ எந்த இடத்திலும் யாரையும் நம்பி இருக்காதே, தனித்து விளையாடு.. உனக்கு வெளியே பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று மோட்டிவேஷன் கொடுத்தார்.

அதுபோல ஜெஃப்ரி தனக்கு ஒரு பேனா வேண்டும் பிக் பாஸுக்குள் பேனா கிடைக்காது என்பதால் என்னால் எந்த பாட்டும் எழுத முடியவில்லை. நான் பாட்டு எழுதுவதற்கு ஒரு பேனா தர சொல்லி ரெக்கமண்ட் பண்ணுங்க விஜய் சேதுபதியிடம் சொல்லி இருந்தார். அதற்கு விஜய் சேதுபதியும் நான் கண்டிப்பா பேசுறேன் என்று சொல்லி இருந்தார்.

அதைதொடர்ந்து ஒவ்வொருத்தராக வந்து கொண்டிருந்தனர். அப்போது இண்ணமும் 5 வாரங்கள் தான் இருக்கு உங்க திட்டம் என்ன என்று விசாரித்து அவர்களுக்கு பாசிட்டிவான கருத்துக்களையும் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் அருண், ரஞ்சித், முத்துக்குமார் போன்றோர் வெளியே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக முயற்சி செய்தார்கள்.

bigg boss tamil 8 bigg boss 8 8

அதுபோல முத்து, விஜய் சேதுபதியிடம் பேச வரும்போது நிறைய கைத்தட்டல் கேட்டது. அதை பார்த்ததும் அவர் எனக்கு எப்போதும் வீட்டுக்குள் ஒரு பதட்டமா இருக்கு சார். ஆனா என்னுடைய உழைப்பைப் பற்றியே நான் எப்போதும் யோசித்து கொண்டு இருக்கிறேன். 105 ஆவது நாளில் உங்களுடன் மேடையில் நிற்க வேண்டும் என்று டைட்டில் ஜெயிக்கும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்த அதற்கு விஜய் சேதுபதி நீங்க நல்ல ஆடுறீங்க.

நீங்கள் என்ன அடைய விரும்புகிறீர்களோ அது உங்கள் கைவசம் வரும் என்று நான் நம்புகிறேன். ஆனா அளவா பேசுங்க என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதுபோல தீபக் மற்றும் மஞ்சரியிடம் உங்களிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை, நீங்க நல்லா தான் விளையாடறீங்க.. அதே டிராக்ல போங்க என்று மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார்.

இதனால் விஜய் சேதுபதி முத்துக்குமரன் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னராக வருவார் என்று மறைமுகமாக அட்வைஸ் கொடுத்திருக்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற பலர் முத்துக்குமரன் இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

முதல் வாரத்தில் வெளியே சென்ற ரவீந்தர் ஆரம்பத்தில் இருந்து இந்த சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தான் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஏற்கனவே நேற்றைய எபிசோடில், இந்த கடந்த வாரத்தில் தலைவராக இருந்த ரஞ்சித்தை விஜய் சேதுபதி அதிகமாக ரோஸ்ட் செய்து இருந்தார்.

ஆனாலும் அசராத ரஞ்சித் நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் என்று வழக்கம்போல சொல்லி இருக்கிறார். அதுபோல சனிக்கிழமை எபிசோடிலும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடிலும் அருணுக்கு விஜய் சேதுபதி அட்வைஸ் கொடுத்தது இருந்தார். இதனால் அருண் அப்செட் ஆகி இருக்கிறார்.

அதனால் நான் நிகழ்ச்சியிலிருந்து போறேன் என்று கூட அருண் சொல்லி இருந்தார். அருண் மற்றும் முத்துக்குமார் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வந்தது கூட முத்துக்குமாரனுக்கு பிளஸ் ஆக அமைந்துவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+