கோவில் முன்பு குத்தாட்டம் போட்ட கம்ருதீன்.. பார்வதி பற்றி கேட்ட அந்த கேள்வி, டக்குனு இப்படி சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் ரெட் கார்டு வாங்கிக்கொண்டு வெளியே வந்தனர். இவர்களுடைய வாழ்க்கை அவ்வளவுதான்.. அவர்களால் இனி சின்னத்திரையில் எதுவும் செய்ய முடியாது என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர். ஆனால் நாங்கள் எப்பவும் கெத்து தான் என்று வெளியே வந்த பிறகும் இவர்கள் இருவரும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜே பார்வதி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நான் தான் ரியல் பிக் பாஸ் வின்னர் என்று ஸ்டோரிகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கம்ருதீன் அதற்கு ஒரு படி மேலே சென்று தான் வெளியேறியதற்கு காரணமாக இருந்த சான்ட்ரா வெளியேறிய அதே நாள் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வெடி வெடித்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

Bigg Boss Bigg Boss Tamil vijay tv

அதிலும் ஒரு கோவில் முன்பு கம்ருதீன் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அந்த இடத்திலேயே ஒரு சில கேக்குகளையும் வெட்டி ரசிகர்கள் மற்றும் நண்பர்களுடன் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் நீங்க பார்வதியிடம் பேசுவீங்களா? என்று கேட்க, அதற்கு கம்ருதீன் கண்டிப்பா பேசுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதை பார்க்கும் பலரும் இவன்தான் ஐயா மனுஷன் என்று கமெண்ட் கொடுக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் இவர் இன்னும் பட்டும் திருந்தல மாமா.. என்று கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். அதோடு இவர்கள் போடும் ஆட்டம் ஆரவாரத்தை பார்க்கும் போது பிக் பாஸ்க்கு தான போயிட்டு வந்திருக்கீங்க... அதுவும் அங்க போய் ரெட் கார்டு வாங்கிட்டு வந்து இருக்கீங்க, அதற்கு எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் என்று அலுத்து கொள்வதையும் பார்க்க முடிகிறது.

நாட்டுக்காக ராணுவத்திற்கு போயிட்டு வர்றவங்களுக்கு கூட இந்த மாதிரி ஒரு வரவேற்பு கொடுக்க மாட்டேங்கிறாங்க. ஆனா பிக் பாஸ்க்கு போயி அங்கு சண்டை போட்டு, கெட்ட வார்த்தை பேசினவங்களுக்கு தான் இவ்வளவு வரவேற்பா என்றும் பலருடைய கமெண்ட்ஸை பார்க்க முடிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மனதில் ரவுடிசமும், கோபத்தையும் காட்டுறது தான் சார் பெரிய வீரன் என்கிற ஒரு மனநிலை இருப்பது இதை பார்க்கும் போது தெரிகிறது, இதெல்லாம் தவறான முன் உதாரணம்.. இப்போதைய இளைஞர்கள் இதைப் பார்த்து கெட்டுப் போய் விடக்கூடாது என்றும் பலரும் வேதனையோடு அறிவுரைகளை கூறி வருகிறார்கள்.

பிக்பாஸ் எங்களுக்கு ரெட் கார்ட் கொடுத்தாலும் எங்களுக்கு கெத்து இருக்குப்பா என்று இவர்கள் போடும் ஆட்டம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதே நேரத்தில் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவிற்கு பார்வதி மற்றும் கம்ரூதீன் இருவரையும் பிக் பாஸ் கூப்பிட போகிறார்கள் என்றும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டை திருப்பி வாங்கப் போகிறார்கள் என்றும் கூட சில வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று விஜய் டிவியில் சிலரிடம் பேசும்போது சொல்லி இருக்கிறார்கள்.

Bigg Boss Bigg Boss Tamil vijay tv

பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் சம்பள பணம் கிடைக்காது என்று சொல்லப்பட்டதிற்க்கு கூட நாம் விசாரித்த வரைக்கும் அப்படி எல்லாம் இல்லை, அவர்களுக்கு சம்பளம் கிடைத்து விடும், இதற்கு முன்பு ரெட் கார்ட் வாங்கிய பிரதீப்பிற்கு கூட கிடைத்துவிட்டது அதேபோல இவர்களுக்கும் கிடைத்துவிடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்போது கம்ருதீன் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்... என்றால் இனி பார்வதியும் களத்துக்கு வருவார், அவர் என்ன மாதிரி ரியாக்ட் செய்யப் போகிறாரே என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு வருகிறது. இவர்களுடைய கொண்டாட்டத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+