Bigg Boss: நான் ஹீரோ மெட்டீரியல்! தகுதி, தராதரம் பேசியதற்கு திவாகர் சொன்ன சப்பைகட்டு கேட்டீங்களா? திட்டும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் அதிரடியாக வெளியேற்றப்பட்டது பலரால் கொண்டாடப்பட்டாலும், அவர் வெளியே வந்த பிறகும் கொஞ்சம் கூட மாறாமல், தனது பழைய ஆட்டிடியூடில் தான் இருக்கிறார் என்பது ரசிகர்களை மீண்டும் கடுப்பேற்றியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் எல்லாரையும் "தகுதி, தராதரம்" என்று பேசியதற்கான காரணம் என்னவென்று வெளியே வந்து ஒரு நேர்காணலில் திவாகர் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், அந்த விளக்கமும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது.

ஜாக்லினிடம் சிக்கிய திவாகர்
விஜய் டிவி-யின் சார்பாக நடிகை ஜாக்லின் திவாகரிடம் பேட்டி எடுத்தார். அப்போது ஜாக்லின், "நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அடிக்கடி தகுதி, தராதரம் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தீர்களே, அது தப்புன்னு உங்களுக்குத் தெரியலையா?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த திவாகர், தான் பேசியதற்குக் கொடுத்த விளக்கம் சப்பைக் கட்டுவதாகப் பலரும் கருதுகின்றனர். அவர் கூறியதாவது:
"நான் ஹீரோ மெட்டீரியல். எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. இந்த நிகழ்ச்சியில் உள்ளே இருக்கிற சிலர் என்னிடம் மோசமா நடந்துகுறாங்க, உருவக் கேலி செய்தாங்க. இதை வெளியே இருந்து பார்க்கிறவங்க என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க? அதற்காகத்தான் எனக்கு ஒரு கட்டத்தில் கோபம் வரும்போது அந்த மாதிரி நான் பேசி இருக்கிறேன். நான் யாரையும் அவருடைய குடும்பத்தைப் பற்றி, அப்படியே மனதிற்குள் வைத்துப் பேசவில்லை."
மரியாதையே தகுதி
"நான் என் இடத்தில் இருக்கும்போது சிலர் என்னிடம் வேணும்னே கோபப்படுற மாதிரி பேசுறாங்க. அடுத்தவர்களிடம் மரியாதையா பேசணும்கிறது ஒரு தகுதிதான். அதைச் சிலர் இழந்துவிடுவதால் தான் நான் அவர்களை அப்படிப் பேசினேன்." என்று மீண்டும் மீண்டும் தான் செய்தது சரிதான் என்பதைப் போலத் திவாகர் பேசிக்கொண்டிருந்தார்.
அலப்பறை ரீல்ஸ் தான் பிரதானம்
திவாகர் தான் செய்தது நியாயம் என்று வாதிட்டாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் செய்த லூட்டிகள் அவ்வளவு சுலபத்தில் மறக்கக்கூடியதல்ல. தான் ஒரு "நடிப்பு அரக்கன்" என்று சக போட்டியாளர்களிடம் சொல்லி அவர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் அதோடு நீங்கள் பிரபலமாவதற்கு இத்தனை வருடங்களாக கஷ்டப்படுகிறீர்கள் ஆனால் நான் ஒரு வருடத்திற்கு பிரபலமாகிவிட்டேன் என்று சீன் போட்டுக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் வேலை செய்வதை விட, கேமரா முன்பு தனியாக நின்று ரீல்ஸ் செய்வதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். "இனி அடுத்து தமிழ் சினிமாவைக் காப்பாற்றப் போறேன்!" என்று வீம்பாக பேசினார். இதன் காரணமாகவே, ஒரு கட்டத்தில் கேமரா முகத்தைத் திருப்பிக் கொண்டது என்று விஜய் சேதுபதியும் கிண்டலடித்தார்.
பாசமலர் பார்வதி
விஜே பார்வதியுடன் சேர்ந்து இவர் அடித்த அலப்பறைகளும் எல்லை மீறியதாகவே இருந்தது. இவர் வெளியேறியபோது பார்வதி அழுததைக் கூட ரசிகர்கள் "பாசமலர் படமே தோற்றுவிடும் போல!" என்று கலாய்த்திருந்தனர். தன் மீது விமர்சனங்கள் இருந்தாலும், தான் வெளியேறியது குறித்து திவாகர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, தனக்குக் கிடைத்திருக்கும் 'பப்ளிசிட்டி'யால் பெருமை கொள்வது போலவே அவரது பேச்சு அமைந்தது.
"நான் பிக்பாஸ் வீட்டுக்குள் அறுபது நாள் இருப்பேன்னு நெனச்சேன். இப்போ 42 நாள் இருந்திருக்கேன். இது கூட எனக்குப் பெரிய விஷயம் தான்." "இனி நான் வெளியே போன பிறகு எத்தனை போன் கால் வருதுன்னு தெரியல. ஏன்னா ஏற்கனவே எனக்கு வாய்ப்புகள் வந்துகிட்டே இருந்தது. இப்போ உள்ளே என்னுடைய நடிப்புத் திறமையை பலர் பார்த்திருப்பாங்க. அதனால எனக்குப் பல நடிகர்களிடமும், இயக்குநர்களிடமும் இருந்து போன் வந்துகிட்டு இருக்கும் என்பது எனக்குத் தெரியும்."
தான் பேசுவதற்கும், செய்வதற்கும் விளம்பரம் தான் முக்கியக் காரணம் என்பதை அவர் மறைமுகமாகத் தெரிவிப்பது போலவே இருந்தது. "என்னைப் பத்தி யாரு என்ன பேசினாலும் நான் அதைக் கண்டுக்க மாட்டேன்" என்று சொன்னவர், "ஆனால் ஒரு கட்டத்தில் என்னையே கோபப்படுத்தி இருந்தாங்க, அப்போ என்னுடைய வாயிலிருந்து சில வார்த்தைகள் வந்துடுது" என்று மீண்டும் மீண்டும் தான் செய்ததே சரி என்று வாதிட்டிருக்கிறார்.
திவாகரின் இந்தப் பேட்டி, பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் அவர் மாறவில்லை என்பதையே நிரூபிப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications