Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Watermelon Diwakar: புது படத்தில் கதாநாயகனாகும் ‘தர்பூசணி’ திவாகர்.. திரிஷா மாதிரி பொண்ணு தான் வேணுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 மூலம் மக்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றவர்களில் ஒருத்தர் தான் வாட்டர் மெலன் திவாகர். அவருடைய பேச்சு, கருத்துகள், சர்ச்சை நிறைந்த செயல்கள்ன்னு குறுகிய காலத்திலேயே சோசியல் மீடியாவில் வைரலான முகமா மாறினார். குறிப்பா தன்னைத் தானே "நடிப்பு அரக்கன்"ன்னு அடிக்கடி சொல்லியது, சிலருக்கு சிரிப்பை வரவச்சாலும், சிலருக்கு எரிச்சலையே வரவச்சுது.

பிக்பாஸ் வரைக்கும் திவாகரை கொஞ்ச பேருக்கு தான் தெரியும். ஆனா அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அவமானம், கேலி, கிண்டல் எல்லாம் சேர்ந்து அவரை ஒரு பிரபல முகமாக மாற்றிடுச்சு. பிக்பாஸ் வீட்டுக்குள்ள அவர் பேசின பேச்சுகள், நடந்துக்கொண்ட விதம், சில நேரங்களில் சாதி ரீதியாக "நான்தான் பெரியவன்"ன்னு மாதிரி அவர் பேசியதாக எழுந்த விமர்சனங்கள் எல்லாம் பெரிய சர்ச்சையா மாறிச்சு. அதுக்கப்புறமும் சோசியல் மீடியாவில் அவர் மேல விமர்சனங்கள் நிறுத்தமே இல்லாம தொடர்ந்து வந்துட்டே இருக்கு.

Bigg Boss Tamil Watermelon Diwakar Tamil Cinema

இந்த எல்லாவற்றையும் தாண்டி இப்ப திவாகருக்கு ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கு. இதை பற்றி சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் மனம் திறந்து பேசினாரு. "பல அவமானங்கள், கேலி, கிண்டல்கள் தாண்டி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்போதும் பார்க்காத ஒரு கோணத்தில் ஒரு நடிப்பு அரக்கனை வெள்ளி திரையில் நீங்கள் விரைவில் காண்பீர்கள்.

எனக்கு வரவிருக்கும் மனைவி திரிஷா, சமந்தா போல இருந்தால் நன்றாக இருக்கும்"ன்னு அவர் சொன்ன வார்த்தைகள், கேள்விப்பட்டவுடனே நெட்டிசன்களுக்கு நல்ல கன்டென்ட் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது.

இந்த பேச்சு வெளியானதும், சோசியல் மீடியாவில் மீம்ஸும் கமெண்ட்ஸும் மழை மாதிரி கொட்ட ஆரம்பிச்சது. "திரிஷா, சமந்தா மாதிரி மனைவி வேணும்னு சொல்றதுக்கு முன்னாடி, நடிப்பு அரக்கன் என்ற பட்டத்துக்கு ஏதாவது ப்ரூஃப் காட்டுங்க"ன்னு சிலர் கலாய்ச்சாங்க. "பிக்பாஸ் வீட்டுக்குள்ள போய் சாதி பேசினவர், இப்ப ஹீரோ ஆகப்போறாரா?"ன்னு இன்னும் சிலர் கடுப்பாக கேள்வி எழுப்புறாங்க.

இதோடு நிற்காம, திவாகர் முன்பு சொன்ன சில டயலாக்களையும் நெட்டிசன்கள் இப்ப மீண்டும் எடுத்துப் போட்டு கலாய்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ஏற்கனவே "தமிழ் சினிமாவில் விஜய் அரசியலுக்கு போயிட்டாரு, அஜித் கார் ரேஸ்க்கு போயிட்டாரு, இனி நான் தான் இந்த சினிமாவை காப்பாத்தணும்"ன்னு அவர் பேசியது அப்போவே நிறைய பேருக்கு சிரிப்பை வரவச்சது. இப்ப ஹீரோவா வாய்ப்பு கிடைச்சிருக்கிறதால, "அவர் சொன்னது ஒருவேளை உண்மையாவே நடந்து விடுமோ?"ன்னு நகைச்சுவையோடு கலந்த அச்சத்தோட கமெண்ட்ஸ் போட்டு வர்றாங்க.

மேலும் திவாகர் தன்னுடைய பேச்சுல, "என்னதான் சோசியல் மீடியாவில் கழுவி ஊத்தினாலும், நான் ஹீரோவா மாறிட்டேன்"ன்னு மாதிரி பேசியதையும் பலர் சுட்டிக்காட்டி, "இது தன்னம்பிக்கையா? இல்ல ஓவர் தன்னம்பிக்கையா?"ன்னு கேள்வி எழுப்புறாங்க.

மொத்தத்துல, பிக்பாஸ் ஹவுஸில இருந்து வெளிய வந்த வாட்டர் மெலன் திவாகர், இப்ப ஹீரோவா வெள்ளித்திரையில் வர்றேன் அப்படின்னு சொல்றதுக்குள்ளேயே, நெட்டிசன்களுக்கு கலாய்க்க ஒரு பெரிய டாபிக் கொடுத்துட்டார். அவர் உண்மையிலேயே வெள்ளித்திரையில் ஒரு "நடிப்பு அரக்கனா" மாறப்போறாரா, இல்ல பிக்பாஸ் வைரல் முகமா மட்டும் தங்கி போகப்போறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும். ஆனா இப்போதைக்கு, அவருடைய ஒவ்வொரு பேச்சும் சோசியல் மீடியாவுக்கு ஒரு புதிய மீம் மெட்டீரியலா மாறிக்கிட்டே இருக்கு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+