ஃபேமிலி ரவுண்டில் சான்ராவிடம் இதைத்தான் கேட்பேன்! திவ்யா பிஆர் அசிங்கப்படுத்துறாங்க! பிரஜன் வெளியிட்ட வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியே வந்த பிரஜன் இப்போது ஒரு லைவ் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தான் பேமிலி ரவுண்டில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் போகும்போது சான்ராவிடம் சில விஷயங்களை கேட்க போவதாக சொல்லி இருக்கிறார்.
இதற்கு இல்லையா சார் எண்ட் என்பது போலத்தான் சில வாரங்களாகவே சான்ரா திவ்யாவை பற்றி குறைமேல் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதுவும் நேற்று மூன்றாவது ப்ரோமோவிலும் இன்று முதல் ப்ரோமோவிலும் சரி எல்லாவற்றிலும் சான்ரா பேசுவதை தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ரசிகர்களே வேதனையில் கமெண்டுகளை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை சீக்கிரமா முடிச்சு விடுங்க பாஸ் என்பது பலருடைய கமாண்டாக இருக்கிறது.

பிரஜன் என்னை விட திவ்யாவிடம் தான் நெருக்கமாக இருந்தார், ஆனால் திவ்யா பிரஜனையும் என்னையும் ஏமாற்றிவிட்டார் என்று சான்ரா சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரஜன் வெளியே சென்றதற்கு முக்கிய காரணமே திவ்யா தான் என்றும் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நான் வெளியே செல்ல வேண்டும் என்பதுதான் திவ்யாவின் ஆசை ஆனால் பிரஜன் வெளியே சென்றது திவ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால்தான் என்னை சீண்டி பார்க்கிறார் என்று கூட ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி ப்ரஜன் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பிரச்சனை நடந்தால் அது வெளியே வேறு விதமாக காட்டப்படுகிறது. சான்ராவை பலரும் திட்டிக் கொண்டிருக்கிறதை பார்க்கிறேன். சான்ராவிற்கு திவ்யா மீது கோபம் இருக்கிறது ஆனால் அவர் தவறாக எதுவும் சொன்னது போல தெரியவில்லை.
ஒருவேளை சான்ரா தவறாக சொல்லி இருந்தார் அது அவருடைய தவறு தான். ஆனால் சான்ராவை அசிங்கப்படுத்துவது திவ்யாவின் பிஆர் டீம் தான். இதற்கு முன்பு வினோத்தை தவறாக பேசிக் கொண்டிருந்தார்கள், இப்போது சான்ராவை டார்கெட் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேற எல்லா போட்டியாளர்களுக்கும் பி ஆர் இருந்தாலும் அவர்கள் அவர்களுடைய போட்டியாளர்களைத்தான் பெருமைப்படுத்தி காட்டுகிறார்கள், ஆனால் திவ்யாவின் பி ஆர் அடுத்தவர்களை மோசமாக சித்தரிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
அதோடு தான் ஃபேமிலி ரவுண்டில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் போகும் போது சில அதிரடியான விஷயங்களை செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். திவ்யாவிடம் சில விஷயங்களை நான் தெளிவுபடுத்துவேன். அதோடு சான்ரா மீது எனக்கு இருக்கும் கோபத்தையும் நான் அங்கே அவரிடம் கேள்வி கேட்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் இந்த வாரமும் சான்ராவை வெளியே அனுப்பப்போவது இல்லையா? அவர் ஃபேமிலி ரவுண்டு வரைக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து பிரஜன் வெளியே போனதற்கு காரணம் திவ்யா தான் என்று இதே புராணத்தை பாட போகிறாரா? என்று சில ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications