Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டேட்டர்ஜியை புட்டு புட்டு வைத்த கமல்ஹாசன்.. இந்த வாரம் வாத்தியாரின் கண்டிப்பு இவருக்கு தானாம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் இன்றைய சனிக்கிழமை எபிசொட்டில் கமல்ஹாசன் இந்த வார போட்டியாளர்கள் செய்து வந்த ஸ்டேட்டர்ஜியை பற்றி கூறியுள்ளார்.

கடந்த வாரம் கண்டிப்பாக பேசிய போட்டியாளர்களிடம் இந்த வாரம் பாராட்ட காத்திருக்கும் தருணத்தையும் விளிம்பு நிலையில் இருப்பவரை சீண்டிப் பார்க்கும் சக போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வாத்தியாருடைய தண்டிப்பு காத்திருக்கிறது.

மாறிப்போன கள நிலவரம்

மாறிப்போன கள நிலவரம்

பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி இன்று 27 வது நாள் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் உடைய பஞ்சாயத்து இருக்கும் அதனாலே ரசிகர்கள் பலர் இன்றைய நிகழ்ச்சிக்காக காத்திருக்கின்றனர். இந்த வாரம் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதுவரைக்கும் ரசிகர்களால் திட்டி தீர்க்கப்பட்டு வந்த ஒரு சில போட்டியாளர்கள் இந்த வாரம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வந்திருக்கின்றனர். இதுவரைக்கும் திட்டிகொண்டிருந்தவர்களை இந்த வாரம் சீண்டி பார்த்து ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களின் எரிச்சலை சம்பாதித்து இருக்கின்றனர்.

மாற்றத்தை உணராத போட்டியாளர்கள்

மாற்றத்தை உணராத போட்டியாளர்கள்

சின்னத்திரை நடிகரான அசீம் கடந்த இரண்டு வாரங்களில் சக பேட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தை குறித்து கமல் கண்டிப்போடு எச்சரிக்கையும் கொடுத்திருந்தார். இதனால் இந்த வாரம் அவருடைய நடவடிக்கையில் பல மாற்றங்கள் தெரிந்தது .ஆனால் அதை புரிந்து கொள்ளாத சக போட்டியாளர்களான மைனா நந்தினி ,மகேஸ்வரி, தனலட்சுமி போன்றோர் அசீம் சீண்டி பார்த்து ரசிகர்களின் கோபத்தை பெற்றிருக்கின்றனர். அசீம் கூட சண்டை போட்டால் தாங்கள் பெரிய ஆளாக மாறிவிடலாம் என்று நினைத்து விட்டார்கள் போல, அதனால் தான் இப்படி செய்கிறார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விக்ரமனுக்கு ஆதரவாக பேசிய அசீம்

விக்ரமனுக்கு ஆதரவாக பேசிய அசீம்

இந்த வாரம் நடந்த பொம்மை டாக்ஸ்கில் அசீமுடன் சேர்ந்த போட்டியாளர்கள் சிலருக்கு கமல் அறிவுரை கூறியிருந்தார். அதனால் அவரோடு இதுவரைக்கும் நெருங்கி பழகி வந்த குயின் சி, நிவா, ஏடிகே போன்றோர் அவரை விட்டு விலகி விட்டனர் .இதை நேற்றைய எபிசோடில் அசீம் கூறி இருந்தார். ஆனால் கடந்த வாரம் விக்ரமனுக்கும் அசீமுக்கும் பல முட்டல், மோதல் வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வாரம் விக்ரம் ஆதரவாக மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி உடன் அசீம் சண்டையிட்டு கொண்டிருக்கிறார். பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் விக்ரமன் பேசியது அனைத்துமே அனைவருக்கும் கேட்டது, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு நல்லாவே கேட்டது .ஆனால் அதை தீர்ப்பு வழங்கும் நடுவர்களுக்கு மட்டும் கேட்கவில்லை என்று மார்க் குறைத்தனர். ஆனால் தனக்கு விக்ரம் பேசியது சரியாக கேட்டது அதுவும் அவர் என்ன வார்த்தை பேசினாரோ அதை அப்படியே அசீம் பேசினார். அதனால் மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி இடம் அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதைப்பற்றி கமல் இந்த வாரம் பேச வேண்டும் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போ மட்டும் இது சரியா

இப்போ மட்டும் இது சரியா

அதுபோல அசீம் தன்னை வாடி போடி என்று பேசினால் பிடிக்காது என்று கூறி வந்த தனலட்சுமி, தனியாக இருக்கும்போது அசீமை பற்றி அவன் இவன் என பேசியதை குறித்தும் இன்றி விவாதிக்க பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விக்ரமன் பேசும்போது மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி இருவரும் பாடி லாங்குவேஜ் காட்டி விக்ரமை நக்கல் செய்தனர். ஏற்கனவே இதை அசீம் செய்ததற்கு இவர்கள் கொதித்த நிலையில் இன்று இவர்கள் விக்ரமனை பார்த்து செய்தது சரியா? என்றும் கமல் பேச இருக்கிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம்

பொறுத்திருந்து பார்ப்போம்

கெஞ்சினா மிஞ்சுறது மெஞ்சினா கெஞ்சுறது என்று நாம கேள்வி பட்டிருக்கிறோம். அது இந்த வாரம் நிறைய வீட்டுக்குள்ள நடந்துகிட்டு இருக்கு. விளிம்பில் இருக்கிற ஆள லைட்டா டச் பண்ணினாலே கீழே விழுந்துருவாங்கனு நினைக்கிறது ஒரு ஸ்டேட்டர்ஜியாக இருக்கலாம். ஆனால் ,அதுக்கு முன்னாடி யாரு விழுகிறது என்பதை புரிஞ்சுகிட்டு அதை செய்யணும். இல்லன்னா, தள்ற ஆளே விழுகிற நிலைமை ஆகிடும். பார்க்கலாம் இந்த வாரம் யார் விழுகிறார்கள்? என்று கமல் பேசி இருக்கிறார். இது அசீம் மற்றும் மகேஸ்வரிக்கு தான் இந்த எடுத்துக்காட்டு என்று என்ன தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வாரம் ஆண்டவரின் கண்டிப்பும், பாராட்டும் யார் யாருக்கு என்று.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+