இந்த வாரம் கதவு திறக்கப் போவது இவருக்கு தானா? போட்டியில் ஆர்ப்பாட்டம் செய்யும் பிக் பாஸ் போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்று இருக்கிறது. அதில் மைனா நந்தினி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மைனா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தனலட்சுமி கதறி அழுவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

மீண்டும் தலைவரான மைனா நந்தினி
பிக் பாஸ் தமிழ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி இன்று 43-வது நாள் தொடங்கி இருக்கிறது. இன்றைய முதல் ப்ரோமோவில் இந்த வாரத்தின் தலைவர் பதவியில் மைனா நந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த வார தலைவர் பதவிக்காக போட்டியிட்ட தனலட்சுமியால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெட்டில் அமர்ந்து அழுதபடி இருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல வரும் போட்டியாளர்களை திட்டி தீர்ப்பதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களில் திட்டி வருகின்றனர்.

நேற்றே அதிர்ச்சியான தனலட்சுமி
நேற்று எபிசோடில் அசீமை கமல் வறுத்தெடுத்து அட்வைஸ் செய்து கடைசியில் சேவ் செய்திருந்தார். கடந்த வார ஓட்டு அடிப்படையில் அசீம் முதல் இடத்தில் இருந்தாலும் பிக் பாஸ் இந்த முறை ரசிகர்கள் பலருடைய வேண்டுகோளுக்கு இணங்க அசீமை கடைசியில் சேவ் செய்திருந்தனர். ஆனால் அசீம் எப்படியும் வெளியேறி விடுவார் என்று ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருந்த தனலட்சுமிக்கு நேற்றே ஏமாற்றம் தான். தனலட்சுமிக்கு மட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில போட்டியாளர்களும் அசீம் சேவ் ஆனது குறித்து அதிர்ச்சி அடைந்து இருந்தனர்.

ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இந்த நிலையில் அசீம் இடத்தில் தனலட்சுமி இன்று கத்த தொடங்கி இருக்கிறார். தனலட்சுமி மற்றும் ஆயிஷா இருவரும் நட்பாக பழகி வருகின்றனர். ஒருவருக்கொருவர் இவர்கள் அடிக்கடி ஆறுதல் சொல்லி இவர்களுக்குள் இடையே ஒரு பிணக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் மைனா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் என்ற பிக் பாஸ் முடிவு கூறிய உடனே பெட்டில் அமர்ந்திருந்த தனலட்சுமியால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பெட்ஷீட்டை மூடிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் இப்படி செய்யலாமா
தனலட்சுமி அழைத்து செல்ல வந்த ஆயிஷா தனலட்சுமி எல்லோரும் தேர்ந்தெடுத்துட்டு இருக்காங்க வா என கூப்பிட ,நான் எல்லாம் அங்க வரல என தனலட்சுமி முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார் .கதிர் மணிகண்டன், அமுதவாணன் என அனைவரும் தனலட்சுமி இடம் சமாதானம் செய்து கொண்டிருந்தாலும் "கீழே விழுந்ததில்"... "இது எல்லாம் கேம் தானே எல்லாரும் கேம் தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம் எப்படி மேலே போச்சி" என கேமை பற்றி பேச அருகில் இருந்தா ரட்சிதா "மேல எல்லாம் போகல" என கூற அப்படியா தயவு செய்து நீங்க போறீங்களா? என ரட்சிதாவை திட்டி அனுப்புகிறார் .இந்த ப்ரோமோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் அப்போ இந்த வாரம் தனலட்சுமி தானா வெளியே செல்வது? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் தனலட்சுமிக்கு வார்னிங் கொடுத்து கடைசி இடத்தில் சேவ் ஆன நிலையிலும் இவர் மீண்டும் மீண்டும் இப்படி கோபப்படுவது சரியில்லை என்று சிலர் அறிவுரை கூறி வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications