கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் நிரூபித்த அசீம்.. இவரை புரிஞ்சிக்கவே முடியலையே !?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீன் தன்னுடைய பிறந்த நாளில் செய்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

என்னதான் போட்டியாளர்களோடு சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் ஒருவருக்கு பிரச்சனை என்று வந்தால் ஓடிவரும் அசீம் தற்போது செய்த செயலால் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்

ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் இருந்து அதிகமாக சண்டை பிரச்சனைகளில் முதல் ஆளாக இருந்து வரும் அசீம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பாராட்டை பெற்று வருகிறார். இவர் என்னதான் சண்டையிட்டாலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் பல டிவி சேனல்களின் கருத்துக்கணிப்புகளில் கூட அசீமிற்க்கு தான் அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது.

வழக்கமாக நடக்கும் செயல்

வழக்கமாக நடக்கும் செயல்

ஆரம்பத்திலிருந்து அசீம் குறிப்பிட்ட ஒரு போட்டியாளர்களை மட்டும் டார்கெட் செய்து சண்டையிடாமல் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வஞ்சனை இல்லாமல் பிரச்சனை செய்து வருகிறார். பல நேரங்களில் சண்டைகளில் இவர் மரியாதை இல்லாமல் பேசுவதும். மட்டம் தட்டி பேசுவதும் வழக்கமாக நடந்து வரும் ஒரு செயல்பாடாக இருந்து வருகிறது. இதனாலே இவரை பற்றி போட்டியாளர்களும் கும்பலாக இருந்து இவரை மட்டும் எப்படித்தான் ரசிகர்கள் சேவ் செய்கிறார்களோ என்று ஒவ்வொரு வாரமும் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

எதிரான கருத்துக்கள்

எதிரான கருத்துக்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த போட்டியாளர்கள் கூட அசீம் பற்றி சொல்லும்போது அவருடைய ஸ்டேட்டர்ஸி வேறு, விளையாட்டில் கடைசியில் அவர்தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பிடிக்கவில்லை என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவரோடு சீரியலில் நடித்த நடிகர்கள் பலரும் அசீமின் நிஜமான கேரக்டரை பற்றி கேப்பே இல்லாமல் பேசி வருகிறார்கள்.

குணமும் இருக்கிறதே

குணமும் இருக்கிறதே

வழக்கம் போல இந்த வாரமும் நாமினேஷனில் இவருடைய பெயர் இருக்கும் நிலையில் முதல் ஆளாக வாக்குகளின் அடிப்படையில் இருக்கும் நிலையில் இவருடைய பிறந்தநாளுக்கு தன்னுடைய வீட்டில் இருந்து விதவிதமான பல சாப்பாடுகளை வாங்கி வரும்படி பிக் பாஸ் இடம் கேட்டு இருந்தார். தற்போது அனைத்து சாப்பாடுகளும் அசீம் கேட்டபடியே அசீமினுடைய அம்மாவின் கையாலே சமைத்து கொண்டுவரப்பட்டது. அதை தன்னுடைய சக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்னும் வேண்டுமா? இன்னும் வேண்டுமா? என்று வாரி வழங்கும் வள்ளல் போல அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்கு அதிகமாக சாப்பாடு திருடி தின்பவர் என்றும் பலருடைய சாப்பாட்டையும் சேர்த்து எடுத்துக் கொள்பவர் என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் வந்தாலும் தற்போது இவர் செய்த செயலை பார்த்து ரசிகர்கள் பலரும் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வார்கள் அதை அசீம் நிரூபித்து விட்டார் என்று பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+