குழந்தை குறித்து ரகசியமாக பேசிய ரச்சிதா.. அம்மா கூறிய அந்த வார்த்தை.. கணவரின் எதிர்பாராத பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதாவின் அம்மாவிடம் ரச்சிதா குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

இதுவரைக்கும் ரச்சிதாவிற்கு ஆதரவு கொடுத்து வந்த அவருடைய கணவர் ரசிதாவை பற்றி சமூக வலைதளத்தில் வலம் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது வரைக்கும் இருக்கும் ஒன்பது போட்டியாளர்களில் இந்த வாரத்தில் ரட்சிதாவின் பெயர் மட்டும் தான் எலிமினேஷன் லிஸ்டில் இல்லாமல் இருக்கிறது.

 குடும்பத்தினரின் வருகை

குடும்பத்தினரின் வருகை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்ற வருகிறது. இதில் ரச்சிதாவின் குடும்பத்தை சேர்ந்த அவருடைய அம்மா மற்றும் அவருடைய பெரியப்பாவின் பையனான அண்ணனும் ரச்சிதாவின் குடும்பத்தின் சார்பாக வந்திருந்தனர். பல நாட்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் கண் கலங்கி ஓடிப்போய் அணைத்துக் கொண்டார். நிமிடத்திற்கு ஒருமுறை நல்லா போய்க் கொண்டிருக்கிறதா? நான் சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறேனா என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். அம்மாவின் கையில் இருந்த அவருக்கு மிகவும் பிடித்த பூனைக்குட்டியின் புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி முத்தமிட்டு கொஞ்சிக் கொண்டிருந்தார்.

நினைத்தது நடக்கவில்லை

நினைத்தது நடக்கவில்லை

ரச்சிதாவின் அம்மாவோடு வந்திருந்த அவரோட அண்ணனை பார்த்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அவர் யாராக இருக்கும் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தனர் ரச்சிதாவின் கணவரான தினேஷ் எப்படியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதாவுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று அவருடைய ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் கடைசி நேரத்தில் ஏமாற்றமாக போய்விட்டது. ஏற்கனவே ஒரு பேட்டியில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தினேஷ் கூறியிருந்தார் தற்போது அதுபோலத்தான் நடந்து விட்டது.

குழந்தையைப் பற்றிய பேச்சு

குழந்தையைப் பற்றிய பேச்சு

இந்த நிலையில் ரச்சிதா ஏற்கனவே விக்ரமனிடம் தான் முப்பத்து வயதுக்கு மேலே ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளப் போவதாக கூறிக் கொண்டிருந்தார். அதைத்தான் தற்போது அவருடைய அம்மா மற்றும் அண்ணனிடமும் இவர் பேசியிருக்கிறார் ஆனால் தற்போது பேசியது குழந்தையை தத்து எடுக்கிற விஷயம் அல்ல அவருடைய அண்ணனின் மனைவி அன்னி கர்ப்பமாக இருக்கிறாராம். அவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்றுதான் பேசி இருக்கிறார். ஆனால் சமூக வலைத்தளத்தில் பலரும் ரச்சிதா தான் தத்தெடுக்க போகும் குழந்தையை பற்றி அவருடைய அம்மாவிடம் பேசியதாக செய்திகள் பரவி வருகிறது.

பெண் குழந்தை பிடிக்குமாம்

பெண் குழந்தை பிடிக்குமாம்

ரச்சிதா அவருடைய அண்ணனிடம் எப்போது குழந்தை பிறக்கும் என்று கேட்டதற்கு நீ இங்கே இருந்து வெளியே வந்ததும் நேராக ஹாஸ்பிடல் சென்று பார்க்கலாம் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். உனக்கு என்ன குழந்தை பிடிக்கும் என்று அவருடைய அண்ணன் கேட்க எனக்கு எந்த குழந்தையா இருந்தாலும் சந்தோஷம்தான் ஆனால் பெண் குழந்தையாக இருந்தால் மேலும் சந்தோஷம் என்று ரச்சிதா கூற நாங்களும் வெயிட்டிங்ல தான் இருக்கிறோம் என்று அவருடைய அண்ணனும் கூறுகின்றனர். இந்த நிலையில் குழந்தையின் மீது இவ்வளவு பாசமாக இருக்கும் ரச்சிதா இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருடைய கணவரோடு மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+