"அதனால் தான் உன் மீது தனி பாசம்” வீடியோ வெளியிட்டு மாஸ் காட்டிய தனலட்சுமி, அசீம்.. குவியும் கருத்து
ஜில்லா திரைப்பட பாடலுக்கு அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் வின்னரான அசீம் மற்றும் போட்டியளராக இருந்த தனலட்சுமி இருவரும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர்.
தனலட்சுமி மற்றும் அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சண்டை இட்டு கொண்டிருந்தாலும் வெளியே வந்த பிறகு தனலட்சுமி அசீமிற்கு அதிகமான ஆதரவு கொடுத்து வருகிறார்.
தனலட்சுமி மற்றும் அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சண்டை இட்டு கொண்டிருந்தாலும் வெளியே வந்த பிறகு தனலட்சுமி அசீமிற்க்கு அதிகமான ஆதரவு கொடுத்து வருகிறார்.

பரபரப்பான சீசன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஆரம்பமான முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகளுடன் தொடங்க ஆரம்பித்துவிட்டது. இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி கடைசியில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஆரம்பத்தில் இருந்து சக போட்டியாளர்களோடு சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு தரைக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்தார் என்று அவரைக் குறித்து அதிகமான குற்றச்சாட்டுகளும் நெகட்டிவ் கருத்துகளும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. ஆனாலும் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகமான ரசிகர்கள் ஆதரவு கிடைத்து வந்தது.

சண்டைக்கோழிகள்
இந்த சீசனில் முதல் முறையாக மக்களின் பிரதிநிதியாக தனலட்சுமி ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்தார். இவர் ஏற்கனவே டிக்டாக் பிரபலமாகவும் ஒரு சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்திருந்தாலும், இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் சண்டை கோழியாக சுற்றி திரிந்த அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் பல நேரங்களில் சண்டை இட்டு வாக்குவாதங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுவும் பொம்மை டாஸ்கில் அவர்களுக்கும் ஏற்பட்ட சண்டையை சொல்லவே வேண்டாம்.

பொம்மை டாஸ்க் சண்டை
நீயெல்லாம் ஒரு பொண்ணு தானா? என்று தனலட்சுமியை பார்த்து அசீம் பேசியது, தனலட்சுமியை பொம்மையை வைக்கப் போகும்போது பிடித்து தள்ளியது போன்ற விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண் போட்டியாளரிடம் ஒரு நபர் இப்படி நடந்து கொள்ளலாமா என்று பல்வேறு கருத்துக்களும் அசீமிற்க்கு எதிராக வெளியே பேசப்பட்டது. அது மட்டும் அல்லாமல் தனலட்சுமி தான் ஷெரினாவை பிடித்து கீழே தள்ளினார் என்று அசீம் தான் பார்த்ததாக கூற, அதற்காக குறும்படமும் போட்டு காண்பித்து தனலட்சுமி மீது தப்பில்லை என்று அனைவருக்கும் நிரூபிக்கப்பட்டது.

முதல் ரீல்ஸ் வீடியோ
என்னதான் இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும், தனலட்சுமி வெளியே செல்லும்போது அசீமை பாராட்டி விட்டுத்தான் சென்றிருந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தனலட்சுமி செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போது அசீம் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் உண்மையாக இருக்கிறார். அவர்தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்னுடைய ஆதரவு அவருக்குத்தான் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இவர்கள் இருவரும் தற்போது முதல் முறையாக ஒன்றாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். ஜில்லா திரைப்படத்தில் வரும் "எனை நானே பார்த்துக் கொள்ள கிடைத்தாயே நீயும்" என்கிற பாடலுக்கு இவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications