விக்ரமனின் பெற்றோர் வருகையை ப்ரோமோவில் காட்டாத சேனல்.. ரசிகர்களின் கேள்வி.. காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 81 வது நாளில் நடந்து வரும் ப்ரீஸ் டாஸ்க் விக்ரமனின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

விக்ரமனின் குடும்பத்தினர் வருகையை ப்ரோமோவில் காட்டவில்லை என்று ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று முதலாகவே விக்ரமனின் குடும்பத்தினர் வந்த நிலையில் அவருடைய குடும்பத்தை விட்டுவிட்டு கதிரின் குடும்பத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

ப்ரோமோவில் குளறுபடி

ப்ரோமோவில் குளறுபடி

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் ஃப்ரீஸ் டாஸ்கில் ஆரம்பமான முதல் நாளில் மைனா நந்தினி, அமுதவாணன், ரச்சிதா, ஏடிகே, மணிகண்டன், ஷிவின் ஆகியோரின் குடும்பத்தினர் இரண்டு நாட்களாக வந்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் விக்ரமனின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். 24 மணி நேர எபிசோட்டில் இது காட்டப்பட்டது ஆனால் தற்போது வரைக்கும் இது ப்ரோமோவில் வரவில்லை. ஆனால் விக்ரமனின் குடும்பத்தினர் வந்து போன பிறகு கதிரவனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர் ஆனால் அதுதான் இன்றைய முதல் பிரமோவாக வந்திருக்கிறது.

ப்ரோமோவில் பாரபட்சம்

ப்ரோமோவில் பாரபட்சம்

இரண்டாவது ப்ரோமோவிலும் கதிரவனின் குடும்பத்தினர் வருவதற்கு முன்பு ஷிவினை, ஏடிகே கலாய்த்து பாட்டு பாடிய தருணத்தை கொண்டு வந்திருக்கின்றனர். அதுபோல மூன்றாவது ப்ரோமோவில் கதிரவன் மற்றும் அவருடைய காதலி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஷிவினை அமுதவாணன் பாட்டு பாடி கலாய்த்து கொண்டிருக்க, கடைசியில் ஷிவின் கதறி அழுதபடியே ரெஸ்ட் ரூமில் உள்ளே நுழைகிறார் .இதற்கு பேக்ரவுண்ட் மியூசிக்கோடு ஒளிபரப்பான பிரமோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் முதல் ஆளாக வந்த விக்ரமனின் குடும்பத்தை எதிலுமே வெளியே காட்டவில்லை.

ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வு

ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வு

விஜய் டிவியின் செயல்பாடு பாரபட்சம் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது வரைக்கும் அசீம் குடும்பத்தினர் இன்னும் வராத நிலையில் விக்ரமனின் குடும்பத்தின் வருகையை வெளியே காட்டுவதற்கு விருப்பம் இல்லாமல் இவர்கள் செய்கிறார்களா? அல்லது லெட்டர் படிக்கும் டாஸ்க் அனைவருடைய லெட்டர்களையும் காண்பித்த விஜய் டிவி விக்ரமனின் லெட்டரை வெளியே காட்டவில்லை. ஆனால் அதற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்ததன் தொடர்ச்சியாகவே வார இறுதியில் கமல் அதை மீண்டும் நினைவுப்படுத்தி பேசி இருந்தார். அதுபோல இப்போதும் செயல்படுகிறார்களா? என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் கேள்விகள்

ரசிகர்களின் கேள்விகள்

ஆரம்பத்தில் இருந்தே விக்ரமன் செய்யும் பல நல்ல செயல்களை வெளியே காட்டுவதில்லை என்று விக்ரமனின் தீவிரமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் ரசிகர்கள் கமல் விக்ரமனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கருத்து கூறி வரும் வகையில் நேரத்தில் தொடர்ச்சியாக விக்ரமனுக்கு நடக்கும் பாகுபாடுகளை விக்ரமனின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது விக்ரமனின் குடும்பத்தினர் வருகையை ப்ரோமோவில் காட்டவில்லையே என்பதுதான் பலருடைய கேள்வி, ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக விக்ரமன் அல்லது அசீம் ஜெயிப்பார் என்று பலர் கருத்து கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இது அசீமுக்கு ஆதரவாக செயல்படுவதாக தான் இருக்கிறது என்று பலருடைய கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+