கடைசியில் விக்ரமன் சொன்ன மாதிரி நடக்கும் சதி... கமல் தீர்ப்பு சொல்வாரா? எதிர்பார்க்கும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் விக்ரமன் கடந்த வாரம் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நான் என்னதான் சரியாக செய்தாலும் எனக்கு பாராட்டு கிடைக்காது என்று நெகிழ்ச்சியாக கூறி இருந்தார் தற்போது இன்று அதை நிரூபிக்கும் வகையில் சக போட்டியாளர்கள் செயல்பட்டு இருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் விக்ரமன் ஜெயித்ததை கூட சக போட்டியாளர்கள் இல்லை என்று சாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக பல குறும்படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் தெரிவித்த கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மாறுவேட போட்டி நடைபெற்றது. அதில் சரியாக பர்பாமன்ஸ் செய்யாமல் போரிங்க் ஆக இருந்தது யார் என்று ஓட்டு அடிப்படையில் அவார்டு கொடுக்கப்பட்டது. அப்போது போட்டியாளர்களில் பலர் விக்ரமனின் பெயரை குறித்து குறிப்பிட்டிருந்தனர். அப்போது விக்ரமன் நான் சரியாக செய்திருந்தாலும் இங்கே எனக்கு அவார்டு கிடைக்கப்போவதில்லை. எல்லோரும் நான் என்ன செய்தாலும் அதில் குற்றம் தான் கூறுவார்கள். இது தவறு என்று தான் கூறுவார்கள் என்று கருத்து தெரிவித்தார்.ஆனால் அனைத்து போட்டியாளர்களும் நீங்கள் சொல்வது தவறு நீங்கள் சரியாக செய்தால் நாங்கள் உங்களை பாராட்ட தவறியதே இல்லை என்று கருத்து கூறி இருந்தனர்.

குறும்படத்தில் வெளியான உண்மை
இந்த நிலையில் தற்போது நடந்து வரும் சொர்க்கவாசிகள் மற்றும் நகரவாசிகள் போட்டியில் விக்ரமன் சொர்க்கத்திற்குள் சென்று திரும்பி வருகிறார். ஆரம்பத்தில் சொர்க்கத்திற்குள் சென்றதும் விக்ரம் தான் முதல் ஆளாக சென்றிருக்கிறார். அதே நிலையில் வெளியே வரும்போது விக்ரமன் மற்றும் ஜனனி இருவரும் போட்டி போட்டு வர தனலட்சுமி அவர்களை தடுக்கிறார். ஆனால் தனலட்சுமி தாண்டி விக்ரமன் வெளியே கோட்டில் கை வைத்து விடுகிறார். அதை தாண்டி தான் ஜனனி கை வைக்கிறார். ஆனால் மொத்த போட்டியாளர்களும் ஜனனிதான் முதலில் கை வைத்து வெளியேறினார் என்று ஜனனிக்கு ஆதரவாக பேசுகின்றனர். குறிப்பாக தனலட்சுமி நான் பார்த்தேன் ஜனனிதான் வெளியே கை வைத்தாள் என்று கூறினார். ஆனால் இதைகுறித்து 24 மணி நேர எபிசோட் லைவாக ரசிகர்கள் பலர் பார்த்து அதை வீடியோவாக பதிவிட்டு குறும்படங்களை வெளியிட்டு வருகின்றனர். விக்ரம் தான் முதலில் வெளியே கை வைத்தார் என்பதை ரசிகர்கள் ஆதாரத்தோடு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே விக்ரம் சொன்னது சரிதான் என்று இப்போது நிரூபணமான ஆகிவிட்டது என்று விக்கிரனின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இதை குறித்து கமல் நாளை எபிசோட்டில் பேசுவாரா என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

படிப்பில் கெட்டிக்காரர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான விக்ரமன் ஒரு ஜர்னலிஸ்ட் என்பது பலருக்கும் தெரியும் வீசிக கட்சியின் இருப்பவர் என்பதும் அனைவருக்கும் தெரியும் ஆனால் இவர் அதிகமாக கூச்ச சுபாவம் கொண்டவர் தானாம். வீட்டில் அமைதியாக தான் இருப்பாராம். யாரிடமும் டக்கென்று பழகி விடாதாவராக தான் இருந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சிறுவயதிலிருந்தே படிப்பில் கட்டிகாரராக இருந்திருக்கிறார். அதனால் பள்ளியில் இருக்கும் போதே பல மாணவர்களால் இவர் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறாராம். நன்றாக படிப்பதால் இவரை சிலர் ஓரம் தள்ளியே வைப்பார்களாம் அப்போது வேதனையோடு பல முறை அம்மாவிடம் கூறி இருக்கிறாராம்.

அதிகமான மதிப்பெண்கள்
மட்டுமல்லாமல் விக்ரமன் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது 1200 மதிப்பெண்களுக்கு 1194 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக வெற்றி பெற்றிருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பிலும் அவர் முதல் மதிப்பெண் பெற்று பள்ளியில் மெடல்களில் வாங்கியிருக்கிறாராம். படிக்கும்போதே படிப்பது மட்டுமல்லாமல் எழுதுவதிலும் அதிகமான ஆர்வத்தோடு இருப்பாராம். காலேஜில் படிக்கும் போதே இவர் அதே போலத்தான் நன்றாக படித்துக் கொண்டு இருக்கும்போது சக மாணவர்களின் தொந்தரவினால் அப்போது நான் படிக்க போக மாட்டேன் என்று படிப்பை நிறுத்திவிட்டு தான் நடிக்க செல்ல போகிறேன் என்று முடிவெடுத்து இருந்தாராம்.












Click it and Unblock the Notifications