Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசல் பத்தி தெரியாம தான் பழகிட்டேன்... ஆனால் உள்ளே நடந்ததே வேறு, மொத்த ரகசியத்தையும் உளறிய நிவாஷினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிவாஷினி முதல் முறையாக அவரோடு நெருக்கமாக பழகி வந்த அசல் பற்றிய கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அசல் நிவாஷினியிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி பல்வேறு மீம்ஸ்கள் பரவி வந்த நிலையில் அதை குறித்த விளக்கத்தை நிவாஷினி கூறி இருக்கிறார்.

சர்ச்சையை ஏற்படுத்திய செயல்

சர்ச்சையை ஏற்படுத்திய செயல்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜெர்மனியை சார்ந்த நிவாஷினி கலந்து கொண்டிருந்தார். அதுபோல கானா பாடகராக இருக்கும் அசல் கோலாரும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்வதை விடவும் நிவாஷினி அசலோடு அதிகமாக நேரத்தை செலவிட்டு வந்தார். இது குறித்து போட்டியாளர்கள் பலரும் இவர் மீது இதே குற்றச்சாட்டை கூறி வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் செய்த செயல் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

பழகுவதற்கான காரணம்

பழகுவதற்கான காரணம்

தன்னைப் பற்றி பரவி வந்த கருத்துக்களுக்கு நிவாஷினி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுவே ஆரம்பத்தில் அசல் யார் என்று எனக்கு தெரியவில்லை. தெரியாமல் தான் நான் பழகினேன் .அவருடைய ஜொர்த்தாலா பாட்டை மட்டும் நான் கேட்டு இருக்கிறேன். அதற்குப்பிறகு அவரோடு பேசும் போது தான் அவருடைய பலம் முயற்சிகள், அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளும் தனக்கு தெரிய ஆரம்பித்தது. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் எனக்கும் அந்த அளவிற்கு யாரிடமும் பிரண்ட்ஷிப் ஏற்படவில்லை. ஆரம்பத்திலேயே நான் சாப்பிடும் முறையை வைத்து சக போட்டியாளர்கள் என்னை கலாய்த்ததால் எனக்கு ஒரு மாதிரி அங்கே வித்தியாசமாகப்பட்டது.

குயின்சியோடு ஏற்பட்ட உறவு

குயின்சியோடு ஏற்பட்ட உறவு

அதற்குப் பிறகுதான் சாப்பாடு போது நான் தனியாக சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது எனக்கு துணையாக அசல் தான் வருவார் .தன்னுடைய ப்ராஜெக்ட் பற்றியும் ஒவ்வொரு பாடல்கள், வெளியே நடந்து கொண்ட விதங்கள் பற்றி பலதையும் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். இதை பார்த்து தான் பலரும் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்றெல்லாம் கூட வதந்திகளை ஏற்படுத்த தொடங்கி விட்டார்கள். நான் குயின்சி இடமும் என்னுடைய ஒரு சகோதரி பீலிங்கை பார்த்தேன் .அதை தாண்டி அனைவரிடமும் பேசினாலும் அந்த அளவிற்கு நெருக்கம் இல்லாமல் தான் இருந்து வந்தது.

 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

அதுபோல அசல் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி பல மீம்ஸ்கள் வெளியானதை பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அசல் என்னிடம் மட்டுமல்ல எல்லாரிடமும் கேஷுவலாக தான் பழகிக் கொண்டிருந்தார். எங்களுக்கு அவர் தவறாக தொடுவதாகவோ, நடந்து கொள்வதாகவோ தெரியவே இல்லை. இதை வேண்டுமென்றே சிலர் இப்படி பரப்பி இருக்கலாம். நாங்கள் எங்கள் ஊரில் ஆண் பெண் பாகு பாடு இல்லாமல் நண்பர்களாக இருப்பது போலத்தான் நான் அசல் உடன் இருந்தேன். அதனால் தான் அசல் வெளியேறியதால் எனக்கு வருத்தமாக இருந்தது.

ஆறுதல் சொன்ன ஒரே நபர்

ஆறுதல் சொன்ன ஒரே நபர்

எனக்கு எப்போதெல்லாம் மனகஷ்டமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் ஆறுதல் சொன்ன ஒரே நபர் அசலாக தான் இருப்பார் .அதனால் அவரை நான் அதிகமாக தேடினேன் என்று கூறி இருக்கிறார் .அதுபோல சமூக வலைத்தளத்தில் பலரும் நாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் அதனால் தான் நான் அவரை ரொம்பவே ஃபில் பண்ணுவதாக பேசுவதெல்லாம் எனக்கு சிரிப்பாக தான் வருகிறது என்று கடைசியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதுபோல நீங்கள் பார்க்காத பல விஷயங்கள் உள்ளே நடந்து இருக்கிறது. அது உங்களுக்கு காட்டப்படவில்லை. ஆனால் உங்களுக்கு தெரிந்த ஒரு சில விஷயங்கள். நீங்கள் பெரியதாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.அவ்வளவு தான் என்று கூலாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+