சூசகமாக புகைப்படம் வெளியிட்ட ஆயிஷா... இவர்தான் அந்த நபரா? குவியும் கேள்வி..க்யூட் க்ளூ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆயிஷா சமீபத்தில் இணையத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு ஆணோடு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு விரைவில் என்று ஆயிஷா கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

ஆயிஷாவோடு இருக்கும் ஆணின் முகம் வெளியே தெரியாத வகையில் இருப்பதால் ரசிகர்கள் யார் என்று அவரைக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவி சீரியலில் அறிமுகம்

விஜய் டிவி சீரியலில் அறிமுகம்

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பிரபலமான ஆயிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்து பிரபலமான ஆயிஷா அந்த சீரியலின் இயக்குனரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். பிறகு மாயா என்ற சீரியலில் நடித்த அந்த சீரியலின் மூலம் அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது.

ரவுடி பேபி சத்தியா

ரவுடி பேபி சத்தியா

அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் ரவுடி பேபி ஆக பலருடைய ஆதரவை பெற்ற சத்யா கேரக்டரில் பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் அந்த சீரியலில் இவர் நடித்து வந்தார். இந்த நிலையில் அந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டதும் அப்போது தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆயிஷா இருக்கும்போது அவரைக் குறித்து வெளியே பல்வேறு தகவல்கள் கசிந்து வந்தது. காரணம் அவருடைய முன்னாள் காதலர் ஆயிஷாவை பற்றி அவர் இல்லாத நேரத்தில் பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

எதிர்பாராத வெளியேற்றம்

எதிர்பாராத வெளியேற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஆயிஷா நன்றாகவே விளையாடிக் கொண்டிருந்தாலும் இவருக்கும் அசீமிற்க்கும் ஏற்பட்ட சண்டை இவரை ஆரம்பத்தில் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலப்படுத்தி விட்டது. பின்பு இவருடைய விளையாட்டு சரியாக இல்லை என்று பலர் கருத்து கூறி வந்திருந்த நிலையில் தான் இவருக்கு வாக்குகளின் அடிப்படையில் குறைவாக இருப்பதாக இவர் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் இவர் வெளியேறிய பிறகு இவருடைய வெளியேற்றம் தவறானது இவர் சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

யார் அந்த நபர்

யார் அந்த நபர்

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆயிஷா ஆரம்பத்தில் தன்னுடைய வாழ்க்கையில் சோகங்கள் எதையும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் சிறப்பு விருந்தினராக இவர் அறிமுகமாகும் போது தனலட்சுமி இடம் பேசும் போது தனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் .அதில் ஒரு ஆண் முகத்தை காட்டாமல் இருக்க அவருடைய தோளில் சாய்ந்த படி ஆயிஷா இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது ஆயிஷா காதலிக்கும் நபர்தானா? இவரைத்தான் விரைவில் காட்ட இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் ஒரு சிலர் இவர் புதியதாக ப்ராஜெக்ட் எதிலும் கமிட் ஆகி அந்த நபர் தானா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை குறித்து எந்த பதிலும் ஆயிஷா தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+